அதர்வா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'டிரிக்கர்'.இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதர்வா
அதர்வா
Published on

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'டிரிக்கர்'. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

டிரிக்கர்
டிரிக்கர்

டிரிக்கர்

ஆக்‌சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'டிரிக்கர்' படத்திற்கு இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'டிரிக்கர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'டிரிக்கர்' திரைப்படம் செப்டம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com