அதர்வாவின் 'நிறங்கள் மூன்று' படத்தின் புதிய அப்டேட் கொடுத்த இயக்குனர்

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'.இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நிறங்கள் மூன்று
நிறங்கள் மூன்று
Published on

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

கார்த்திக் நரேன்
கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன்

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் விரைவில் 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com