பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ஃபீல் குட் திரைப்படம் - அசத்தல் அப்டேட்

இயக்குனராக மட்டுமின்றி நீலம் என்று அமைப்பைத் தொடங்கி சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித்  தயாரிப்பில் உருவாகும்  ஃபீல் குட்  திரைப்படம் - அசத்தல் அப்டேட்
Published on

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பா.ரஞ்சித் கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படத்தின்மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து தனது 3 வது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார். ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2016 வெளியான கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தனது படங்களில் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசிவரும் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வருகிறார்.

இயக்குனராக மட்டுமின்றி நீலம் என்று அமைப்பைத் தொடங்கி சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை நீலம் தயாரிப்பு நிறுவனத்தின்மூலம், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், ஜே - பேபி, ப்ளூ ஸ்டார்  உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இடையில் நீலம் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் பேசுபொருளாக மாறியது.

தொடர்ந்து தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை தனது நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து இயக்கி வருகிறார் பா.ரஞ்சித். இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நீலம் தயாரிப்பு நிறுவனம் நாளை மாலை இந்த படத்தின் டைட்டில் போஸ்டரும் ஃபர்ஸ்ட் லுக்கும்  உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், மகிழ்ச்சி, பரவசம் மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டாராக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com