என் மலர்

    நீங்கள் தேடியது "suresh krishna"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் ‘ஆளவந்தான்’.
    • இப்படம் விரைவில் ரீ - ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    கடந்த 2001-ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    ஆளவந்தான் போஸ்டர்

    இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், 22 வருடத்திற்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படம் டிஜிட்டல் வெர்ஷனில் ரீ- ரிலீஸுக்கு தயாராகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவுள்ளது. இந்த படத்தின் ரீ-ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடிகர் ரஜினியின் 'பாபா' திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’.
    • இப்படம் புதிய கோணத்தில் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2002- ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.


    பாபா

    மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.


    பாபா

    'பாபா'வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினி அடிக்கடி பயன்படுத்தும் 'பாபா' முத்திரை தற்போது வரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது.


    பாபா

    இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தபடம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'அண்ணாமலை'.
    • இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு முதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார்.

    ரஜினிகாந்த் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூன் 27 தேதி வெளியான திரைப்படம் 'அண்ணாமலை'. இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு முதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார். ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடப்படும் படங்களில் 'அண்ணாமலை' திரைப்படம் இன்று வரை முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில் இப்படம் திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.

    சுரேஷ் கிருஷ்ணா - ரஜினி - அண்ணாமலை

    சுரேஷ் கிருஷ்ணா - ரஜினி - அண்ணாமலை

    இந்நிலையில் 'அண்ணாமலை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் 30 வருட கொண்டாட்டத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    ×