ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா.. விரைவில் வெளியீடு..

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’.இப்படம் புதிய கோணத்தில் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.
சுரேஷ் கிருஷ்ணா - ரஜினிகாந்த்
சுரேஷ் கிருஷ்ணா - ரஜினிகாந்த்
Published on

கடந்த 2002- ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

பாபா

மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பாபா

'பாபா'வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினி அடிக்கடி பயன்படுத்தும் 'பாபா' முத்திரை தற்போது வரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது.

பாபா

இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தபடம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com