தமிழ் பட ரீமேக்கில் ஸ்ரீதேவி மகள்

ஈரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.ஈரம் இந்தி ரீமேக்கை மனோஜ் பரமஹம்சா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் பட ரீமேக்கில் ஸ்ரீதேவி மகள்
Published on

தமிழில் ஆதி, நந்தா, சிந்து மேனன் ஆகியோர் நடித்து 2009-ல் திரைக்கு வந்த ஈரம் பேய் படம் நல்ல வசூல் குவி குவித்தது.இந்த படத்தை அறிவழகன் டைரக்டு செய்து இருந்தார். ஈரம் படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. ஈரம் இந்தி ரீமேக்கை மனோஜ் பரமஹம்சா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் இந்தி நடிகையுமான ஜான்வி கபூரிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நாயகனாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த தேவரா படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com