search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Alia Bhatt"

  • சல்மான்கான் வீட்டிற்கு ரன்பீர்- ஆலியாபட் விருந்துக்கு சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
  • இதுகுறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் பலவித விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

  பிரபல நடிகர் ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதியினர் மும்பையின் பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சல்மான்கான் வீட்டிற்கு ரம்ஜான் விருந்துக்கு சென்றுள்ளனர்.

  இதில் ஆலியா குறைந்த மேக்கப்புடன் முழு வெள்ளை நிற சல்வார்  உடையணிந்துள்ளார். அதே போல ரன்பீர் ஜீன்ஸ் பேண்ட் - சாம்பல் நிற டி-ஷர்ட் மேல் நீல நிற டெனிம் சட்டையுடன் சாதாரண தோற்றத்துடன் உடை அணிந்துள்ளார்.

  சல்மான் மற்றும் ரன்பீர் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கத்ரீனாகைப் உடன் டேட்டிங் செய்தனர். ஆனால் சல்மான்கான் விக்கி கவுஷலை மணந்தார். ரன்பீர் ஆலியா பட்டை 2022 -ல் திருமணம் செய்து கொண்டார்,ரன்பீருக்கு ராஹா என்ற மகள் உள்ளார்.கடந்த பல வருடங்களாக ரன்பீரும் சல்மானும் பேசிக்கொள்ள வில்லை.  இந்நிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகைக்கு எதிர்பாராத சல்மான்கான் வீட்டிற்கு ரன்பீர்- ஆலியாபட் விருந்துக்கு சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் பலவித விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

  தற்போது அலியா பட் ஜிக்ரா  மற்றும்  லவ் & வார்  ஆகிய படங்களில் நடிக்கிறார் . அவரது கணவர் ரன்பீர் கபூர் தற்போது நித்தேஷ் திவாரியின்  ராமாயண படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். 

  அதே போல் சல்மான்கான் கடைசியாக கத்ரீனா கைப் ஜோடியாக டைகர் 3 -ல் நடித்தார். சல்மான் தற்போது அடுத்த புதிய படம் குறித்து ரம்ஜான் தினத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். தமிழ் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடிக்க உள்ளார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • மும்பையின் பாந்த்ரா என்னும் இடத்தில்ரூ.250 கோடி மதிப்பில் பிரமாண்ட பங்களா கட்டி வருகின்றனர்
  • புதிய காரை அவரே ஓட்டி வந்தார். பங்களா கட்டுமான பணிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

  இந்தி பட உலகின் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் - முன்னணி நடிகை ஆலியாபட் ஜோடி கடந்த 2022 -ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகா என பெயரிடப்பட்டு உள்ளது.

  ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதி தங்களது மகள் ராகாவுக்காக மும்பையின் முக்கிய பகுதியான பாந்த்ரா என்னும் இடத்தில்ரூ.250 கோடி மதிப்பில் அரண்மனை போன்று பல்வேறு வசதிகள் கொண்ட பிரமாண்ட பங்களா ஒன்று கட்டி வருகின்றனர்.மேலும் ரன்பீர்சிங் ரூ.10 கோடி மதிப்பிலான புதிய 'ஸ்வான்கி' கார் ஒன்றை சமீபத்தில் வாங்கி உள்ளார்.

  இந்நிலையில் இன்று பங்களா கட்டுமான பணியை பார்வையிடுவதற்கு மனைவி ஆலியா பட் மற்றும் நீது கபூர் ஆகியோருடன் ரன்பீர் சிங் காரில் வந்தார். அந்த புதிய காரை அவரே ஓட்டி வந்தார். பங்களா கட்டுமான பணிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.  இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பத்திரிகையாளர்கள் அந்த காரை போட்டோக்கள் எடுத்தனர். மேலும் இணைய தளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த கார் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.மேலும் மும்பையில் மிகவும் விலை உயர்ந்த கார் வைத்து இருக்கும் நடிகர் என்ற பெயரை ரன்பீர் சிங் தற்போது பெற்று உள்ளார்.

  இந்நிலையில் ரன்பீர் புதிய படமான 'ராமாயணம்' என்ற படத்தில் விரைவில் நடிக்க உள்ளார்.ராமர் வேடத்தில் ரன்பீர் நடிக்கிறார். இதற்காக க்ளீன் ஷேவ் செய்து , மெலிந்த மாஸ்குலர் உடல் அமைப்புடன காணப்படுகிறார். படத்துக்காக 'வில்வித்தை' பயிற்சியும் பெற்றுள்ளார்.

  அயோத்தியில் 11 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட செட் கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் நடுப்பகுதியில் ரன்பீர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • இந்த பட்டியலில் முதல் இடத்தை இந்த ஆண்டு பதான், ஜவான் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிடித்துள்ளார்.
  • டாப் 50 பட்டியலில் மூன்றாவது இடத்தையும் இந்திய நடிகையாக பிரியங்கா சோப்ரா பெற்று உள்ளார்.

  2023 ஆம் ஆண்டில் ஆசிய அளவிலான் டாப் 50 பிரபலங்கள் பட்டியல் பற்றிய தகவல் வெளியானது. இந்த பட்டியலில் இந்திய திரைப்பட கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  லண்டனில் உள்ள பிரபல வார இதழான ஈஸ்டர்ன் என்ற பத்திரிக்கை ஆசிய அளவிலான டாப் 50 செலிப்ரெட்டீஸ் பற்றிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டிற்கான பட்டியல் ஆகும். இந்த பட்டியலில் முதல் இடத்தை இந்த ஆண்டு பதான், ஜவான் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிடித்துள்ளார்.

  அதே பால் இந்த டாப் 50 பிரபலங்களில் இரண்டாவது இடத்தை பாலிவுட் நடிகை ஆலியா பட் பிடித்துள்ளார். இவர் 2023 ஆம் ஆண்டு ரன்வீர் சிங் உடன் இணைந்து ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என்ற படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் நடத்தார் ஆலியா பட்.

  இந்த டாப் 50 பட்டியலில் மூன்றாவது இடத்தையும் இந்திய நடிகையாக பிரியங்கா சோப்ரா பெற்று உள்ளார்.

  இந்த ஆசிய பிரபலங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை இந்திய நடிகர்கள் பெற்றாலும் நாம் எதிர்பார்ப்பது எனவோ தமிழ் பிரபலங்களை தான். அந்த வகையில் இந்த பட்டியலில் தென்னிந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகரான தளபதி விஜய் இடம் பிடித்துள்ளார்.

  இந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ வெற்றி படங்களை கொடுத்த விஜய் டாப் 50 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பெற்றுள்ளார். முதல் பத்து இடத்தில் இடம் பிடித்தவர்களில் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த ஒரே பிரபலம் நடிகர் விஜய் தான். இதன் படி முதல் 10 இடங்களில் இந்தியாவை சேர்ந்த நான்கு நடிகர்கள் இடம் பிடித்துள்ளர். மேலும் இந்த பட்டியலில், அமிதாப் பச்சன், அரிஜித் சிங், தீபிகா படுகோனே, அனில் கபூர், அர்மான் மாலிக் உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
  • இந்த வீடியோவிற்கு எதிராக பலர் குரல் கொடுத்தனர்.

  டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஒரு நபரின் உருவத்தில், வேறொரு நபரின் முகத்தை துல்லியமாக பதியச் செய்து போலியாக சித்தரிப்பதாகும்.


  சமீபத்தில் இந்த தொழில்நுட்பம் மூலமாக நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல், ஆலியா பட் என பலரின் புகைப்படங்கள் ஆபாசமான முறையில் மார்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த வீடியோக்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பலர் இந்த டீப்ஃபேக் (Deepfake) வீடியோவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.

  இதையடுத்து இது போன்ற போலி வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.  இந்நிலையில், பல குழப்பங்களை உருவாக்கிய டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் தற்போது எம்.ஜி.ஆருக்கு உயிர் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் எம்.ஜி.ஆர் 'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்போன போக்கிலே' பாடலை பாடுகிறார். இந்த வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள் பல குழப்பங்களை செய்த டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் தற்போது தான் அருமையான ஒரு செயலை செய்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


  • ஷாருக்கானின் மகள் சுஹானா கான்.
  • இவர் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

  பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன் கான் என்ற மகனும் சுஹானா கான் என்ற மகளும் உள்ளனர்.


  இதில் ஆர்யன் கான் விரைவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இவரது மகள் சுஹானா கான் ஜோயா அக்தர் இயக்கியிருக்கும் 'ஆர்ச்சீஸ்' படம் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் சுற்று சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், நடிகை சுஹானா கானிடம் நடிகை ஆலியாபட் தேசிய விருது வழங்கும் விழாவில் தனது திருமண உடையை அணிந்திருந்தது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு சுஹானா, "புதிய உடைகளை தயாரிக்கும் பொழுது எவ்வளவு கழிவுகள் வெளியாகுகிறது என்பதை நாம் உணர்வதில்லை. ஆலியாவின் முன்னெடுப்பு சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாக இருந்தது.


  ஆலியாவே ஏற்கனவே அணிந்த உடையை உடுத்துகிறார் என்றால் நாமும் பார்ட்டி அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது ஆலியா பட்டை பின்பற்றி ஏற்கனவே அணிந்த உடையை அணியலாம்." என்று ஆலியாவை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

  நடிகை ஆலியா பட் 'கங்குபாய் கத்தியவாடி' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்தியாவின் பணக்கார நடிகையாக கருதப்படும் ஆலியா பட்டுக்கு, ரூ.560 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது.
  • வெற்றிகரமான பெண் தொழில் அதிபராகவும் ஆலியா பட் திகழ்கிறார்.

  பாலிவுட் முன்னணி நடிகையாக திகழும் ஆலியா பட், திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட 'கங்குபாய் கதியவாடி' படத்துக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

  இந்தியாவின் பணக்கார நடிகையாக கருதப்படும் ஆலியா பட்டுக்கு, ரூ.560 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது. மும்பையில் 2 சொகுசு வீடுகளும், லண்டனில் ஒரு வீடும் சொந்தமாக இருக்கிறது. பல சொகுசு கார்களும் அடங்கும்.

  இதில் மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5-வது தளத்தை அவர் கடந்த 2019-ம் ஆண்டு வாங்கினார். இதே குடியிருப்பில் 7-வது தளம் கணவர் ரன்பீர் கபூருக்கு சொந்தமானது ஆகும்.

  இதுதவிர வெற்றிகரமான பெண் தொழில் அதிபராகவும் ஆலியா பட் திகழ்கிறார். பிரபல ஆடை பிராண்டின் உரிமையாளரான ஆலியா பட் நிர்வகிக்கும் நிறுவனத்தின் மதிப்பீடு தற்போது ரூ.150 கோடியை எட்டியிருக்கிறது. இந்த பிராண்ட் ஆடைகள் இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் மிகவும் விரும்பப்படுகிறதாம்.

  இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

  இப்படி சினிமா தாண்டி தொழில் அதிபராகவும் ஆலியா பட் கலக்கி வருகிறார்.

  • நீடா அம்பானியின் கலாசார மைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா நாட்டு நாட்டு பாடலுக்கு கலக்கல் உடையில் நடனம் ஆடினர்.
  • இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

  மும்பையில் நீடா அம்பானியின் கலாசார மைய நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், ஹாலிவுட், பாலிவுட் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட்டை சேர்ந்த டாம் ஹாலண்ட், ஜெண்டயா, கீகி ஹதீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பாலிவுட் நடிகர், நடிகைகளான ஷாருக்கான், வருண் தவான், ரன்வீர் சிங், அலியா பட், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


  ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

  ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

  இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ஷாருக்கான் உலகம் முழுவதும் வசூலில் ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக சாதனை படைத்த பதான் படத்தில் இடம் பெற்ற ஜூமி ஜோ பதான் பாடலுக்கு மேடையில் நடனம் ஆடினார். அவருடன் நடிகர்கள் வருண் தவான் மற்றும் ரன்வீர் சிங்கும் கலந்து கொண்டனர். இவர்கள் நடனமாடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.


  ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

  ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

  இதேபோன்று, ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளிவந்து, ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகைகள் ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனம் ஆடும் வீடியோ பலரையும் கவந்து வருகிறது. ஆலியா பட்-ராஷ்மிகா இருவரும் குழுவினருடன் சேர்ந்து நாட்டு நாட்டு பாடலுக்கு அதிரடியான ஸ்டெப்புகளை போட்டு நடனம் ஆடிய வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

  • நடிகை அலியாபட் சமீபத்தில் வீட்டுக்குள் அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் கேமரா மூலம் ரகசியமாக படம்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
  • தமிழில் அடங்க மறு, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராஷிகன்னா இது குறித்து சாடி உள்ளார்.

  இந்தி நடிகை ஆலியாபட் சமீபத்தில் வீட்டுக்குள் ஒரு அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் கேமரா மூலம் ரகசியமாக படம்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மீது அலியாபட் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் நடிகர்-நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதனை கண்டித்து வருகிறார்கள்.
  தமிழில் அடங்க மறு, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராஷி கண்ணாவும் சாடி உள்ளார். இதுகுறித்து ராஷி கண்ணா கூறும்போது, "ஒவ்வொரு மனிதருக்கும் சொந்த வாழ்க்கை உள்ளது. சில விஷயங்களை பகிரங்கப்படுத்த விரும்பமாட்டார்கள். அதை அனைவரும் கவுரவப்படுத்த வேண்டும். பிரபலங்களை பார்க்கும்போது அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். 
  ஆலியாபட் போன்ற நடிகைகளை பார்த்தால் நிச்சயம் படங்கள் எடுத்துக்கொள்ள தோன்றும். அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடாது. எல்லை மீறினால் அது தாக்குதலுக்கு சமம் என்பது என் கருத்து. இப்படி நடந்தது அலியா பட்டுக்கா மற்றவருக்கா என்று நான் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் யாராக இருந்தாலும் ஒன்றுதான். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது'' என்றார்.

  • பாலிவுட்டின் திரைப்பிரபலங்கள் ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் திருமணம் செய்து கொண்டனர்.
  • சமீபத்தில் ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.

  பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் கங்குபாய் கத்தியவாடி, ஆர்.ஆர்.ஆர். போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர்.

  கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. நடிகை ஆலியா பட் மும்பையில் உள்ள தனது வீட்டின் ஓய்வு அறையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


  வெளியான ஆலியாபட் புகைப்படம்

  இதுகுறித்து ஆலியாபட் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நான் எனது வீட்டில் மதியம் நேரத்தில் சாதாரணமாக அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னை கண்காணிப்பதாக உணர்ந்தேன். நிமர்ந்து பார்த்தபோது எனது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்த இரு ஆண்கள் என்னை புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதை உணர்ந்தேன். எந்த உலகில் இது அனுமதிக்கப்படுகிறது? இது தனி நபர் மீதான அத்துமீறல்" என்று மும்பை போலீசை டேக் செய்து குறிப்பிட்டிருந்தார்.

  இதனைத் தொடர்ந்து ஆலியா பட்டுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆலியா பட்டின் பதிவினை குறிப்பிட்டு நடிகை அனுஷ்கா சர்மா, "இவர்கள் இவ்வாறு செய்வது முதல்முறை அல்ல. இரண்டு வருடத்திற்கு முன்னர் நாங்களும் இது தொடர்பாக பேசினோம். இம்மாதிரியான செயல்கள் அவர்களுக்கு மரியாதை அளித்திருக்கும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இது முற்றிலும் அவமானமானது. நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் எங்கள் மகளின் படத்தை வெளியிட்டனர்" என்று பதிவிட்டுள்ளார்.

  • ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் தம்பதிக்கு காலையில் குழந்தை பிறந்துள்ளதையடுத்து பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
  • இதுகுறித்து ஆலியா பட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  பாலிவுட் நடிகை ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


   


  ஆலியா பட் 

  சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாகி, பின்னர் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அச்சமயம் திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

   

  குழந்தை குறித்து ஆலியா பட் நெகிழ்ச்சி பதிவு

  இன்று காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆலியா பட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இது எங்களுடைய வாழ்வில் கிடைத்த நற்செய்தி.. இதோ எங்களுடைய குழந்தை.. என்ன ஒரு மாயாவி அவள்.. நாங்கள் சந்தோஷத்தில் திளைக்கிறோம்- ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான பெற்றோர். அன்புடன் ஆலியா மற்றும் ரன்பீர் என்று பதிவிட்டுள்ளார்.