நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

நீடா அம்பானியின் கலாசார மைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா நாட்டு நாட்டு பாடலுக்கு கலக்கல் உடையில் நடனம் ஆடினர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா
ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா
Published on

மும்பையில் நீடா அம்பானியின் கலாசார மைய நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், ஹாலிவுட், பாலிவுட் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட்டை சேர்ந்த டாம் ஹாலண்ட், ஜெண்டயா, கீகி ஹதீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பாலிவுட் நடிகர், நடிகைகளான ஷாருக்கான், வருண் தவான், ரன்வீர் சிங், அலியா பட், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா
ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ஷாருக்கான் உலகம் முழுவதும் வசூலில் ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக சாதனை படைத்த பதான் படத்தில் இடம் பெற்ற ஜூமி ஜோ பதான் பாடலுக்கு மேடையில் நடனம் ஆடினார். அவருடன் நடிகர்கள் வருண் தவான் மற்றும் ரன்வீர் சிங்கும் கலந்து கொண்டனர். இவர்கள் நடனமாடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா
ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா

இதேபோன்று, ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளிவந்து, ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகைகள் ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனம் ஆடும் வீடியோ பலரையும் கவந்து வருகிறது. ஆலியா பட்-ராஷ்மிகா இருவரும் குழுவினருடன் சேர்ந்து நாட்டு நாட்டு பாடலுக்கு அதிரடியான ஸ்டெப்புகளை போட்டு நடனம் ஆடிய வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com