search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranbir kapoor"

    • ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், நடிக்க வைக்க இயக்குனர் சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
    • விரைவில் கல்நாயக் -2 படம் தயாரிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    1993 - ம் ஆண்டு வெளிவந்த இந்தி ஆக்ஷன்  திரைப்படம் 'கல்நாயக்' .  முக்தா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் சார்பில் சுபாஷ் காய் எழுதி, இயக்கி இந்த படத்தை தயாரித்தார். இப்படத்தில் சஞ்சய் தத், மாதுரி தீட்சித் மற்றும் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்தனர் .

    இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.இப்படத்தின் 'சோலி கே பீச்சாய் க்யா ஹை' என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது.

    இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு 'கல்நாயக் 2' படத்தை இயக்குனர் சுபாஷ் மீண்டும் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கான கதையை அவர் தயார் செய்துள்ளார்.


    இந்த படத்தில் பிரபல நடிகர்கள் ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், யாஷ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களை நடிக்க வைக்க இயக்குனர் சுபாஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் ,நடிகைகள் குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். விரைவில் கல்நாயக் -2 படம் தயாரிப்பு பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சல்மான்கான் வீட்டிற்கு ரன்பீர்- ஆலியாபட் விருந்துக்கு சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
    • இதுகுறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் பலவித விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

    பிரபல நடிகர் ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதியினர் மும்பையின் பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சல்மான்கான் வீட்டிற்கு ரம்ஜான் விருந்துக்கு சென்றுள்ளனர்.

    இதில் ஆலியா குறைந்த மேக்கப்புடன் முழு வெள்ளை நிற சல்வார்  உடையணிந்துள்ளார். அதே போல ரன்பீர் ஜீன்ஸ் பேண்ட் - சாம்பல் நிற டி-ஷர்ட் மேல் நீல நிற டெனிம் சட்டையுடன் சாதாரண தோற்றத்துடன் உடை அணிந்துள்ளார்.

    சல்மான் மற்றும் ரன்பீர் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கத்ரீனாகைப் உடன் டேட்டிங் செய்தனர். ஆனால் சல்மான்கான் விக்கி கவுஷலை மணந்தார். ரன்பீர் ஆலியா பட்டை 2022 -ல் திருமணம் செய்து கொண்டார்,ரன்பீருக்கு ராஹா என்ற மகள் உள்ளார்.கடந்த பல வருடங்களாக ரன்பீரும் சல்மானும் பேசிக்கொள்ள வில்லை.



    இந்நிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகைக்கு எதிர்பாராத சல்மான்கான் வீட்டிற்கு ரன்பீர்- ஆலியாபட் விருந்துக்கு சென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் பலவித விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

    தற்போது அலியா பட் ஜிக்ரா  மற்றும்  லவ் & வார்  ஆகிய படங்களில் நடிக்கிறார் . அவரது கணவர் ரன்பீர் கபூர் தற்போது நித்தேஷ் திவாரியின்  ராமாயண படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். 

    அதே போல் சல்மான்கான் கடைசியாக கத்ரீனா கைப் ஜோடியாக டைகர் 3 -ல் நடித்தார். சல்மான் தற்போது அடுத்த புதிய படம் குறித்து ரம்ஜான் தினத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். தமிழ் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடிக்க உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'தங்கல்' படத்தை இயக்கினார் இயக்குனர் நிதேஷ் திவாரி.
    • இத்திரைப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

    அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'தங்கல்' படத்தை இயக்கினார் இயக்குனர் நிதேஷ் திவாரி. இத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்துக் காட்டியது. இதுவரை 2000 கோடி ரூபாய் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சுஷாந்த் சிங் நடிப்பில் வெளிவந்த 'சிச்சோரே' திரைப்படத்தை இயக்கினார்.

    தற்பொழுது 'ராமாயணா' திரைப்படத்தை இயக்கவுள்ளார். மிக பிரமாண்டமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியான பிரம்மாஸ்திரா படத்தை இயக்கிய நமித் மல்ஹோத்ரா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இவருடன் இணைந்து பான் இந்தியன் நடிகரான யாஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

    இத்திரைப்ப்டத்தில் சீதை கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார், ராம் கதாப்பாத்திரத்தில் ரன்பிர் கப்பூர் நடிக்கிறார், அனுமான் கதாப்பாத்திரத்தில் பாபி டியோல் நடிக்கிறார், ராவணன் கதாப்பாத்திரத்தில் யாஷ் நடிக்கவிருக்கிறார்.

    இத்திரைப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய யாஷ், ராமாயணம் திரைப்படம் நேர்மையான மற்றும் விசுவாசமான சித்தரிப்பாக இருக்கும் என கூறியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைக்கவுள்ளனர். இத்திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரூ.1,000 கோடி பொருட்ஸ்லவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ராமாயணம் திரைப்படம் தயாராகிறது
    • இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர்

    ராமாயணம் கதையை மையமாக வைத்து நிதிஷ் திவாரி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் அனுமாராக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது.

    ரூ.1,000 கோடி பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் தயாராகிறது. படம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் படக்குழு ரகசியமாக வைத்துள்ளனர்.

    இந்நிலையில், ஜெர்மனியை சேர்ந்த இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் ராமாயணம் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து இசையமைக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    ஜெர்மனியைச் சேர்ந்த 66 வயதானவர் ஹான்ஸ் ஜிம்மர். 1980 முதல் இசையமைத்து வருகிறார். 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    லயன் கிங், இன்டெர்ஸ்டெல்லர், மேன் ஆப் ஸ்டீல், டார்க் நைட் டிரிலாஜி, இன்செப்சன் போன்ற படங்களுக்கு இசையமைத்ததற்காக விருதுகளை வாங்கியுள்ளார். இவர் ஆஸ்கர் விருதினை 2 முறையும், கிராமிய விருதினை 4 முறையும், கோல்டன் குளோப் விருதினை 3 முறையும் பெற்றுள்ளார்.

    இதன் மூலம் இரண்டு ஆஸ்கார் வெற்றியாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர். ஹான்ஸ் ஜிம்மர் இந்திய படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மும்பையின் பாந்த்ரா என்னும் இடத்தில்ரூ.250 கோடி மதிப்பில் பிரமாண்ட பங்களா கட்டி வருகின்றனர்
    • புதிய காரை அவரே ஓட்டி வந்தார். பங்களா கட்டுமான பணிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

    இந்தி பட உலகின் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் - முன்னணி நடிகை ஆலியாபட் ஜோடி கடந்த 2022 -ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகா என பெயரிடப்பட்டு உள்ளது.

    ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதி தங்களது மகள் ராகாவுக்காக மும்பையின் முக்கிய பகுதியான பாந்த்ரா என்னும் இடத்தில்ரூ.250 கோடி மதிப்பில் அரண்மனை போன்று பல்வேறு வசதிகள் கொண்ட பிரமாண்ட பங்களா ஒன்று கட்டி வருகின்றனர்.மேலும் ரன்பீர்சிங் ரூ.10 கோடி மதிப்பிலான புதிய 'ஸ்வான்கி' கார் ஒன்றை சமீபத்தில் வாங்கி உள்ளார்.

    இந்நிலையில் இன்று பங்களா கட்டுமான பணியை பார்வையிடுவதற்கு மனைவி ஆலியா பட் மற்றும் நீது கபூர் ஆகியோருடன் ரன்பீர் சிங் காரில் வந்தார். அந்த புதிய காரை அவரே ஓட்டி வந்தார். பங்களா கட்டுமான பணிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.



    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பத்திரிகையாளர்கள் அந்த காரை போட்டோக்கள் எடுத்தனர். மேலும் இணைய தளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த கார் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.மேலும் மும்பையில் மிகவும் விலை உயர்ந்த கார் வைத்து இருக்கும் நடிகர் என்ற பெயரை ரன்பீர் சிங் தற்போது பெற்று உள்ளார்.

    இந்நிலையில் ரன்பீர் புதிய படமான 'ராமாயணம்' என்ற படத்தில் விரைவில் நடிக்க உள்ளார்.ராமர் வேடத்தில் ரன்பீர் நடிக்கிறார். இதற்காக க்ளீன் ஷேவ் செய்து , மெலிந்த மாஸ்குலர் உடல் அமைப்புடன காணப்படுகிறார். படத்துக்காக 'வில்வித்தை' பயிற்சியும் பெற்றுள்ளார்.

    அயோத்தியில் 11 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட செட் கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் நடுப்பகுதியில் ரன்பீர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன.
    • பாபி தியோலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

    2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. இதில் சிறந்த இயக்குநருக்கான விருது, அனிமல் படத்தின் இயக்குநரான சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதனை டீ சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரபாஸ் இயக்கத்தில், ஸ்பிரிட் எனும் திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்க இருக்கிறார்.

    • நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’.
    • இந்த படம் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இப்படம் ஒரு தரப்பில் பாராட்டை பெற்றாலும் பலர் இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிலும், படத்தில் இடம்பெற்றுள்ள ஆணாதிக்கம் மற்றும் இந்துத்துவத்தை தாங்கி பிடிக்கும் காட்சிகள் குறித்து நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.


    இந்த நிலையில், சமூகத்தில் உரையாடல் தொடங்கும் வரை நம்மால் அந்த தவறை உணரவே முடியாது என்று ரன்பீர் கபூர் கூறியுள்ளார். நேர்காணலில் கலந்து கொண்ட ரன்பீர்கபூர், "சமூகத்தில் நிலவும் நச்சுத்தன்மை கொண்ட ஆணாதிக்கம் குறித்து 'அனிமல்' படம் ஓர் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துள்ளது. இது மிகவும் நல்ல விஷயம். சினிமா என்பது குறைந்தபட்சம் ஒரு உரையாடலை ஏற்படுத்த வேண்டும். ஏதேனும் தவறு நடக்கும்போது, அது தவறு என்று நாம் காட்டாவிட்டால், சமூகத்தில் உரையாடல் தொடங்கும்வரை நம்மால் அந்த தவறை உணரவே முடியாது" என்று கூறினார்.

    • நடிகை ராதிகா பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் டாப் ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா 1978-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பூவரசம்பூ பூத்தாச்சு' பாடல் இன்று வரை ரசிகர்கள் நினைவில் இருக்கும் பாடலாக உள்ளது. தொடர்ந்து இவர் தயாரித்து நடித்த 'மீண்டும் ஒரு காதல் கதை' திரைப்படம் இயக்குனரின் சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திரா காந்தி விருதை வென்றது.



    நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கி, இந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை குவித்துள்ள ராதிகா இன்றும் தன் நடிப்பு திறமையால் மிளிர்கிறார். இவர் தற்போது பல டாப் ஹீரோக்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    இந்நிலையில், நடிகை ராதிகா ஒரு படத்தை விமர்சித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'எந்தப் படத்தையாவது பார்த்து கிரிஞ்சா இருக்குனு யாருக்காவது தோணிருக்கா? இந்த படத்தை பார்க்கும் பொழுது வாமிட் வரும் அளவிற்கு கோபம் வருது' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனிமல் மற்றும் ஹனுமான் திரைப்படத்தை ராதிகா விமர்சிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’.
    • இப்படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது.

    சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான படம் 'அனிமல்'. படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். பாபிதியோல், டிருப்தி டிம்ரி, அனில்கபூர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.


    தந்தை, மகன் பாசத்தை மையமாக கொண்டு வெளியான இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது.

    அனிமல் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா கூறியதாவது, 'அனிமல்' படத்தின் காட்சியில் கணவராக நடிக்கும் ரன்பீர்- டிருப்தி டிம்ரியுடன் தூங்கியதால் ரன்பீர் கன்னத்தில் உண்மையாக அறைந்தேன். நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. 'ஆக்ஷனும்', 'கட்டுக்கும்' இடையில் எனக்கு எதுவும் நினைவில் இல்லை.


    காட்சி முடிந்ததும் நான் உண்மையாக அழுதேன். ரன்பீரிடம் சென்று அது சரியா? நலமாக இருக்கிறீர்களா? என்றேன். காட்சியில் நான் நடிகையாக இருப்பதன் உச்சத்தை உணர்ந்தேன். 'அனிமல்' படத்திலும் காட்சியிலும் நான் நடித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார்.

    • ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அனிமல்'.
    • இந்த படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இந்நிலையில், அனிமல் படத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா 'அனிமல்' திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.


    இதற்கு முன்பு 'அனிமல்' திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அனிமல் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி குவித்தது
    • நானே எழுதுவதால் கதை சொல்லவே எனக்கு பல நாட்கள் ஆகும் என்றார் சந்தீப்

    கடந்த 2023 டிசம்பர் 1 அன்று, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா, இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" உலகளவில் வெளியானது.

    அனிமல் படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்திருந்தனர். மிக பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி குவித்தது.

    இதை தொடர்ந்து, இயக்குனர் சந்தீப் ரெட்டி, "ஸ்பிரிட்" எனும் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இதில் "பாகுபலி" திரைப்பட கதாநாயகன் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தனது விருப்பங்கள் குறித்து சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்ததாவது:

    சிரஞ்சீவி மற்றும் ஷாருக் ஆகியோரை இயக்க விரும்புகிறேன். அவர்கள் எனக்கு கனவு நாயகர்கள். எப்போது இயக்குவேன் என தெரியாது, ஆனால் நிச்சயம் அவர்களை வைத்து திரைப்படம் இயக்குவேன்.

    பலருடன் இணையாமல் நானே கதை எழுதுவதால் எனக்கு ஒரு நடிகரிடம் கதை சொல்லவே பல மாதங்கள் ஆகிறது.

    சிரஞ்சீவி, ஷாருக் ஆகியோரை ஈர்க்கும் நல்ல அழுத்தமான கதையுடன் எவராவது என்னிடம் முன்வந்தால் உடனே இயக்கவும் தயாராக உள்ளேன். அவ்வாறு கதை கிடைத்தால் 9 மாதங்களில் படத்தை முடித்து விடுவேன்.

    இவ்வாறு சந்தீப் கூறினார்.

    • சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • ’அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியனது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், 'அனிமல்' திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 'அனிமல்' திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் உள்ள நிலையில் கூடுதலாக 8 நிமிடங்கள் சேர்க்கப்பட்டால் 3 மணிநேரம் 30 நிமிடம் ரன்னிங் டைம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படம் ஜனவரியில் ஓடிடி-யில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ×