என் மலர்
நீங்கள் தேடியது "சந்தீப் ரெடி வங்கா"
- இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அனிமல்’.
- இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக இணைந்துள்ளார்.
'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இப்படத்தின் இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' கும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அனிமல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், 'அனிமல்'திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி மற்றும் கூர்மையான கோடரியுடன் ரன்பீர் கபூர் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
'அனிமல்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அனிமல்'.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அனிமல்
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் 'அனிமல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அனிமல்
இந்நிலையில் 'அனிமல்' படத்தின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் நிறைந்த இந்த டிரைலரில் விரைவில் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.






