என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரன்பீர் கபூர்"

    • 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
    • பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    பாலிவுட் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

    கடந்த 18-ம் தேதி வெளியான இப்படத்தில் பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    இந்நிலையில் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய ரன்பீர் கபூர் சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார்.

    தொடரின் ஒரு காட்சியில், ரன்பீர் கபூர் திரையில் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் இ-சிகரெட் புகைப்பது இடம்பெற்றுள்ளது.

     இது குறித்து வினய் ஜோஷி என்ற நபர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    நாட்டில் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட்டுகளின் பயன்பாட்டை இந்தக் காட்சி கவர்ச்சிகரமானதாகக் காட்டுகிறது என்றும், இது இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் அவர் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரை ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் ரன்பீர் கபூர், தொடரின் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இளைஞர்களை மோசமாக பாதிக்கும் இதுபோன்ற உள்ளடக்கங்களைத் தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    நாட்டில் இ-சிகரெட்டுகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விவரங்களை விசாரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

    இந்த முழு விஷயத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. 

    • வெகு விரைவில் கிரகப்பிரவேச நிகழ்வு இருக்கலாம் என்கிறார்கள்.
    • வீட்டிற்கு ரன்பீர் கபூரின் பாட்டி கிருஷ்ணா ராஜ்கபூர் நினைவாக ‘கிருஷ்ணா ராஜ்' என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று ரன்பீர்கபூர்-ஆலியா பட் ஜோடி. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, ஒரு மகள் இருக்கிறார். இந்த நட்சத்திர ஜோடி தங்களின் கனவு இல்லத்தை, மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் கட்டி வருகிறது. மிகவும் ஆடம்பரமாக 6 அடுக்கு மாடியாக கட்டப்படும் இந்த வீட்டின் செலவு ரூ.250 கோடி என்கிறார்கள்.

    நம்முடைய கலாசாரத்தைக் காக்கும் வகையிலும், நவநாகரிகத்தை உள்ளடக்கியதாகவும் இந்த வீட்டை ரன்பீர்-ஆலியா ஜோடி கட்டி வருகிறார்கள்.

    கட்டிடப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சமீபத்தில் ஆலியா பட் தன்னுடைய மாமியார் நீத்து கபூருடன் இந்த வீட்டை மேற்பார்வை செய்துள்ளார்.

    இந்த வீட்டிற்கு வெகு விரைவில் கிரகப்பிரவேச நிகழ்வு இருக்கலாம் என்கிறார்கள். அதோடு வீட்டிற்கு ரன்பீர் கபூரின் பாட்டி கிருஷ்ணா ராஜ்கபூர் நினைவாக 'கிருஷ்ணா ராஜ்' என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    • பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டனர்.
    • இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளதையடுத்து பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பாலிவுட் நடிகை ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

     

    ரன்பீர் கபூர் - ஆலியா பட்

    ரன்பீர் கபூர் - ஆலியா பட்

    சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாகி, பின்னர் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அச்சமயம் திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

     

    ரன்பீர் கபூர் - ஆலியா பட்

    ரன்பீர் கபூர் - ஆலியா பட்

    ஆலியா பட்டுக்கு இன்று காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் தம்பதிக்கு காலையில் குழந்தை பிறந்துள்ளதையடுத்து பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • இதுகுறித்து ஆலியா பட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    பாலிவுட் நடிகை ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


     


    ஆலியா பட் 

    சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாகி, பின்னர் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அச்சமயம் திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

     

    குழந்தை குறித்து ஆலியா பட் நெகிழ்ச்சி பதிவு

    இன்று காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆலியா பட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இது எங்களுடைய வாழ்வில் கிடைத்த நற்செய்தி.. இதோ எங்களுடைய குழந்தை.. என்ன ஒரு மாயாவி அவள்.. நாங்கள் சந்தோஷத்தில் திளைக்கிறோம்- ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான பெற்றோர். அன்புடன் ஆலியா மற்றும் ரன்பீர் என்று பதிவிட்டுள்ளார்.

    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அனிமல்’.
    • இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக இணைந்துள்ளார்.

    'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இப்படத்தின் இந்தி ரீமேக்கான  'கபீர் சிங்' கும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    அனிமல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், 'அனிமல்'திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி மற்றும் கூர்மையான கோடரியுடன் ரன்பீர் கபூர் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

    'அனிமல்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ரன்பீர் கபூர் தற்போது 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் ரசிகரின் செல்போனை தூக்கி வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    ரன்பீர் கபூர்

    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. மேலும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் ரன்பீர் கபூர் ரசிகர் ஒருவரின் செல்போனை வாங்கி தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.


    ரசிகரின் செல்போனை தூக்கி வீசிய ரன்பீர்கபூர்

    அதாவது, ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க நடிகர் ரன்பீர் கபூர் சிரித்து கொண்டே போஸ் கொடுத்தார். ஆனால், அந்த ரசிகர் சரியான செல்ஃபியை எடுக்காததால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் செல்ஃபி எடுக்கமுடியவில்லை. இதனால் கடுப்பான ரன்பீர் கபூர், அந்த ரசிகரின் செல்போனை தூக்கி வீசுகிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், இந்த வீடியோ விளம்பரத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் #angryranbirkapoor என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

    • நடிகர் ரன்பீர் கபூர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இதைத்தொடர்ந்து ரன்பீர் கபூர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    ரன்பீர் கபூர்

    இதையடுத்து நடிகர் ரன்பீர் கபூர் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் கங்குலியை, ரன்பீர் கபூர் சந்தித்து பேசியதை வைத்து இந்த செய்தியை உறுதிப்படுத்தி பல தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரன்பீர் கபூரிடம், கங்குலி வாழ்க்கை படம் குறித்து கேட்கப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது, "கங்குலி இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் லெஜண்ட். அவரை பற்றிய வாழ்க்கை படம் எடுக்கப்படுவது மிகவும் சிறப்பானது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான் இந்த படத்தில் இடம்பெறவில்லை. எனக்காக காதல் கதைகளை தான் இயக்குனர்கள் எழுதி வருகிறார்கள் என நினைக்கிறேன்'' என்று கூறினார்.

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரமாஸ்திரா.
    • இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடித்த திரைப்படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    பிரமாஸ்திரா

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரன்பீர் கபூர் பிரமாஸ்திரா -2 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "பிரமாஸ்திரா 2 மற்றும் 3 பண்ண இருக்கிறோம். அதற்கான கதையை இயக்குனர் அயன் முகர்ஜி எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரமாஸ்திரா 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அனிமல்'.
    • இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    அனிமல்

    அனிமல்

    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் 'அனிமல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அனிமல்

    அனிமல்

    இந்நிலையில் 'அனிமல்' படத்தின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் நிறைந்த இந்த டிரைலரில் விரைவில் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அனிமல்'.
    • இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் 'அனிமல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.


    இந்நிலையில், 'அனிமல்' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.



    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அனிமல்.
    • இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அனிமல் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அனிமல்' திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா 'கீதாஞ்சலி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அனிமல் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'நீ வாடி' பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    ×