search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரன்பீர் கபூரின் அனிமல் படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    ரன்பீர் கபூர்

    ரன்பீர் கபூரின் 'அனிமல்' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அனிமல்'.
    • இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் 'அனிமல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.


    இந்நிலையில், 'அனிமல்' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.



    Next Story
    ×