ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதிக்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்துக்கள்

பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டனர்.இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளதையடுத்து பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ரன்பீர் கபூர் - ஆலியா பட்
ரன்பீர் கபூர் - ஆலியா பட்
Published on

பாலிவுட் நடிகை ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ரன்பீர் கபூர் - ஆலியா பட்
ரன்பீர் கபூர் - ஆலியா பட்

ரன்பீர் கபூர் - ஆலியா பட்

சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாகி, பின்னர் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அச்சமயம் திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

ரன்பீர் கபூர் - ஆலியா பட்
ரன்பீர் கபூர் - ஆலியா பட்

ரன்பீர் கபூர் - ஆலியா பட்

ஆலியா பட்டுக்கு இன்று காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com