என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்: ஷாருக் கான் மகன் இயக்கிய வெப் தொடரால் சிக்கலில் மாட்டிய ரன்பீர் கபூர்
    X

    தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்: ஷாருக் கான் மகன் இயக்கிய வெப் தொடரால் சிக்கலில் மாட்டிய ரன்பீர் கபூர்

    • 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
    • பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    பாலிவுட் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

    கடந்த 18-ம் தேதி வெளியான இப்படத்தில் பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    இந்நிலையில் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய ரன்பீர் கபூர் சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார்.

    தொடரின் ஒரு காட்சியில், ரன்பீர் கபூர் திரையில் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் இ-சிகரெட் புகைப்பது இடம்பெற்றுள்ளது.

    இது குறித்து வினய் ஜோஷி என்ற நபர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    நாட்டில் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட்டுகளின் பயன்பாட்டை இந்தக் காட்சி கவர்ச்சிகரமானதாகக் காட்டுகிறது என்றும், இது இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் அவர் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரை ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் ரன்பீர் கபூர், தொடரின் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இளைஞர்களை மோசமாக பாதிக்கும் இதுபோன்ற உள்ளடக்கங்களைத் தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    நாட்டில் இ-சிகரெட்டுகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விவரங்களை விசாரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

    இந்த முழு விஷயத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.

    Next Story
    ×