search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Katrina Kaif"

  • சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்றது.
  • சிஎஸ்கே அணியின் பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் வருகிற மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் உறுதியாக இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.

  இந்நிலையில் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த முக்கியமான தகவல்கள் அடுத்ததுடத்து வெளிவருகின்றன. சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்றது. தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

  அது என்னவென்றால், அணியின் பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  எனவே எதிர்வரும் சீசனில் சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரினா கைப்பும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று போட்டிகளையும் நேரில் கண்டுகளித்து அணியை ஊக்கப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

  • படைப்பாளியாகவும் ஒருங்கிணைந்த அற்புதமான மனிதர் அவர்.
  • படத்தின் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறோம்.

  ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான, பெரிதும் எதிர்பார்க்கப்படும் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கத்ரினா கைஃப், விஜய் சேதுபதி இணைந்திருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு வசீகரமான அனுபவத்தை வழங்கும்.

  மெரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனுடன் இயக்கத்தில் பணியாற்றியது குறித்து நடிகை கத்ரினா கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.

   


  இதுகுறித்து அவர் பேசியதாவது, "இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் சாருடன் பணியாற்றியது எனது கனவு நினைவானது என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு கிடைத்த நம்ப முடியாத நல்வாய்ப்பு என்று இதைச் சொன்னால் மிகையாகாது. தனித்துவமிக்க இயக்குனரான ஸ்ரீராம் ராகவன் சாரின் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவது வேறு ஓர் உலகத்தில் நுழைந்ததைப் போலவே இருக்கும். நல்ல மனிதராகவும் சிறந்த படைப்பாளியாகவும் ஒருங்கிணைந்த அற்புதமான மனிதர் அவர்."

  "அவருடன் பணியாற்றியது, குறிப்பாக இரண்டு மொழி படங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு அமைந்தது. நான் உட்பட படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் முதல் நாளிலிருந்து படத்தின் உருவாக்கத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தோம். இப்போது படத்தின் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

  • டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
  • இந்த வீடியோவிற்கு எதிராக பலர் குரல் கொடுத்தனர்.

  டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஒரு நபரின் உருவத்தில், வேறொரு நபரின் முகத்தை துல்லியமாக பதியச் செய்து போலியாக சித்தரிப்பதாகும்.


  சமீபத்தில் இந்த தொழில்நுட்பம் மூலமாக நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல், ஆலியா பட் என பலரின் புகைப்படங்கள் ஆபாசமான முறையில் மார்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த வீடியோக்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பலர் இந்த டீப்ஃபேக் (Deepfake) வீடியோவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.

  இதையடுத்து இது போன்ற போலி வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.  இந்நிலையில், பல குழப்பங்களை உருவாக்கிய டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் தற்போது எம்.ஜி.ஆருக்கு உயிர் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் எம்.ஜி.ஆர் 'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்போன போக்கிலே' பாடலை பாடுகிறார். இந்த வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள் பல குழப்பங்களை செய்த டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் தற்போது தான் அருமையான ஒரு செயலை செய்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


  • நடிகை ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது.
  • அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. சமீபத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.


  இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து deep fake மூலம் 'டைகர் 3' திரைப்படத்தில் நடிகை கத்ரீனா கைஃப்யின் சண்டை காட்சி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ deep fake மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமான ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • சமீபத்தில் ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.
  • அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

  முன்னணி நடிகையான நடிகை ராஷ்மிகா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.


  இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


  ஒரிஜினல் புகைப்படம்

  இந்நிலையில், தற்போது கத்ரீனா கைப்பின் டீப் ஃபேக் (deep fake) புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், கத்ரீனா கைப் 'டைகர் 3' படத்திற்காக ஒரு துண்டு அணிந்து ஒரு அதிரடி காட்சியை செய்கிறார். ஆனால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தில் நடிகை கத்ரீனா கைப் அதே போஸில் ஆனால் மாற்றப்பட்ட ஆடையுடன் காட்டப்படுகிறார். இந்த புகைப்படம் சில மணி நேரங்களில் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இருந்தும் இந்த புகைப்படத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

  • அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் படம் மெரி கிறிஸ்துமஸ்.
  • இப்படத்தின் ரிலீஸ் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது மெரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது. பிறகு அதனை மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தனர்.

  மெரி கிறிஸ்துமஸ்

  மெரி கிறிஸ்துமஸ்

   

  இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தொழில் நுட்ப பணிகள் முடியாததாலும் திட்டமிட்ட தேதியில் வேறு படங்கள் திரைக்கு வருவதாலும் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • கத்ரினா கைப் தற்போது விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார்.
  • தற்போது இவர் குழந்தைகளுடன் விஜய் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைப். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கத்ரினா, மதுரையில் பள்ளிக்குழந்தைகள் சிலருடன் 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

   

  நடனமாடிய கத்ரினா கைப்

  நடனமாடிய கத்ரினா கைப்

  மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதற்காக, இந்தியாவின் நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டு மதுரையில் மவுண்டன் வியூ பள்ளி திறக்கப்பட்டது. இந்த பள்ளியை கத்ரினா கைபின் தாயார் சுசானே நீண்ட காலமாக அவரின் அறக்கட்டளை மூலமாக நடத்தி வருகிறார். சுசானே இந்த பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.

   

  நடனமாடிய கத்ரினா கைப்

  நடனமாடிய கத்ரினா கைப்

  கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கத்ரினா கைப் சமீபத்தில் பங்கேற்று, குழந்தைகளுடன் நடனமாடியிருக்கிறார். அவர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்றிருந்த அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி குழந்தைகளை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பாலிவுட் உலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் கன்னம் குறித்து ராஜஸ்தான் மந்திரி ராஜேந்திர குடா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
  ராஜஸ்தான்:

  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார்.

  ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் இருந்து எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்  காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா. கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது மந்திரி சபையில்  மாற்றம் செய்தார். அப்போது ராஜேந்திர குடாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

  மந்திரியான பிறகு தனது தொகுதிக்கு முதல் முறையாக சென்ற ராஜேந்திர குடா பாவோன்க் கிராமத்தில் ​​கூடியிருந்த உள்ளூர் மக்களிடம் உரையாடினார். அப்போது அங்கு இருந்த மக்கள் அவரிடம் தரமான சாலைகள் அமைத்து தர கூறி கோரிக்கை விடுத்தனர்.

  அதற்கு அவர் , அங்கு இருந்த பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரை சுட்டிக்காட்டி "எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று இருக்க வேண்டும் " என ஜாலியாக தெரிவித்துள்ளார்.

  ராஜஸ்தான் மந்திரி

  பாலிவுட் உலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் கன்னம் குறித்து ராஜஸ்தான் மந்திரி ராஜேந்திர குடா பேசிய வீடியோ தற்போது 
  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  நடிகர் விஜய்யும், கத்ரீனா கெய்ப்பும் ஒரு விளம்பரத்தில் இணைந்து நடித்த நிலையில், படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்கள் பற்றி பேசிய கத்ரீனா, விஜய் தனக்காக பொறுமையுடன் காத்திருப்பதாக கூறினார். #Vijay #KatrinaKaif
  நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பு குளிர்பான விளம்பரத்தில் நடித்தார். அதில் அவருடன் பாலிவுட் நடிகை கத்ரீனா கெய்ப்பும் நடித்தார். ஊட்டியில் இந்த படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் குறித்து தற்போது கத்ரீனா பேசியுள்ளார்.

  ஒரு இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

  ’நடிகர் விஜய் பெரிய நட்சத்திரம். ஆனால் மிக அமைதியானவர். ஊட்டியில் படப்பிடிப்பு முடிந்து நாங்கள் அனைவரும் அமர்ந்திருந்தோம். நானும் போனில் சாட் செய்து கொண்டிருந்தேன். அப்போது என் முன்னே இரண்டு கால்கள் வந்து நின்றன.  நான் யாரோ நிற்கிறார்கள் என விட்டுவிட்டேன். அவர் யார் என்று பார்க்காமல் போனையே நோண்டிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் ஆகிய பின்பும் அந்தக் கால்கள் அங்கேயே நின்றுகொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து யார் என்று பார்த்தேன்.

  அப்போதுதான் அது விஜய் எனத் தெரிந்தது. படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அவர் என்னிடம் குட்பை சொல்வதற்காக வந்திருந்தார். நான் போனில் பிசியாக இருந்ததால் என்னைத் தொந்தரவு செய்யாமல் அவ்வளவு நேரம் காத்திருந்துள்ளார்’ எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியிலும், வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது. #Vijay #KatrinaKaif

  தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்த பிடி.உஷாவின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கும் பணிகளில் இயக்குநர் ரேவதி வர்மா ஈடுபட்டுள்ள நிலையில், அதில் கத்ரீனா கைப் நடிக்கவிருக்கிறார். #PTUsha
  தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் பிடி.உஷா. கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய விளையாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத வீராங்கனை. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 103 பதக்கங்களைக் குவித்துள்ளார்.

  இயக்குனர் ரேவதி வர்மா பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப்போவதாக அறிவித்து இருந்தார்.

  அந்த பயோப்பிக்கில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பிரியங்கா ஏற்கெனவே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பயோபிக் படத்தில் நடித்தார். தற்போது பி.டி.உஷா பயோபிக்கில் கத்ரீனா கைப் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  மலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கும் ரேவதி வர்மா சமீபத்தில் மும்பைக்கு சென்று இருக்கிறார். கத்ரீனா கயூபிடம் பி.டி.உஷா பயோபிக்கின் கதையை கூறி இருக்கிறார். கத்ரீனாவுக்கும் கதை பிடித்துவிட்டது. இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

  கத்ரீனா தற்போது சூர்யவன்ஷி படத்தில் நடித்து வருவதால் அதன் படப்பிடிப்பு முடிந்ததும் பி.டி.உஷா பயோபிக்கில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்ரீனா நடிக்கும் முதல் பயோபிக் இது என்பது குறிப்பிடத்தக்கது. #PTUsha #KatrinaKaif