எனது கனவு நனவானது - கத்ரினா கைஃப்

படைப்பாளியாகவும் ஒருங்கிணைந்த அற்புதமான மனிதர் அவர். படத்தின் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறோம்.
எனது கனவு நனவானது - கத்ரினா கைஃப்
Published on

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான, பெரிதும் எதிர்பார்க்கப்படும் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கத்ரினா கைஃப், விஜய் சேதுபதி இணைந்திருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு வசீகரமான அனுபவத்தை வழங்கும்.

மெரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனுடன் இயக்கத்தில் பணியாற்றியது குறித்து நடிகை கத்ரினா கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, "இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் சாருடன் பணியாற்றியது எனது கனவு நினைவானது என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு கிடைத்த நம்ப முடியாத நல்வாய்ப்பு என்று இதைச் சொன்னால் மிகையாகாது. தனித்துவமிக்க இயக்குனரான ஸ்ரீராம் ராகவன் சாரின் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவது வேறு ஓர் உலகத்தில் நுழைந்ததைப் போலவே இருக்கும். நல்ல மனிதராகவும் சிறந்த படைப்பாளியாகவும் ஒருங்கிணைந்த அற்புதமான மனிதர் அவர்."

"அவருடன் பணியாற்றியது, குறிப்பாக இரண்டு மொழி படங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு அமைந்தது. நான் உட்பட படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் முதல் நாளிலிருந்து படத்தின் உருவாக்கத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தோம். இப்போது படத்தின் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com