என் மலர்
நீங்கள் தேடியது "தூதர்"
- UNICEF அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்
- உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் UNICEF, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உரிமைகள் குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் நல நிதியமான UNICEF உடைய இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ``குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய எதிர்க்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்கு தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை.
UNICEF இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் UNICEF, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உரிமைகள் குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறது. இதற்கு முன்னரும் UNICEF இந்தியாவின் தூதர்களாக பல திரைப் பிரபலங்கள் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- புகழ்பெற்ற கலைஞர் மற்றும் விருது பெற்ற தொழில்முனைவோர்.
- ஆடம்பரம் மற்றும் இயற்கை அழகின் உச்சம் மாலத்தீவு
மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.
"உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சின்னம், புகழ்பெற்ற கலைஞர் மற்றும் விருது பெற்ற தொழில்முனைவோர்" என்று மாலத்தீவு சுற்றுலாத்துறை கத்ரீனாவைப் பாராட்டியுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து கத்ரீனா கூறுகையில், "ஆடம்பரம் மற்றும் இயற்கை அழகின் உச்சம் மாலத்தீவு - அங்கு நேர்த்தி அமைதியுடன் இணைகிறது" என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டங்கள் தணிந்துள்ளதை குறிக்கிறது.
முன்னதாக, பிரதமர் மோடி மாலத்தீவை புறக்கணித்து லட்சத்தீவுக்கு செல்வதை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் படங்களை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- முதல் டி20 உலகக் கோப்பையில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் விளாசியர்.
- கிறிஸ் கெய்ல், உசைன் போல்ட் ஆகியோரும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்கை 2024 டி20 உலகக் கோப்பைக்கான தூதராக நியமனம் செய்துள்ளது.
2007-ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரை அறிமுகப்படுத்தியபோது இங்கிலாந்து அணிக்கு எதிரான பிராட் ஓவரில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் அடித்து சாதனைப் படைத்தவர் யுவராஜ் சிங். மேலும், இந்திய அணி 2007 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.
ஏற்கனவே டி20 கிரிக்கெட்டின் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், அதிவேக ஓட்டப்பந்தைய வீரராக கருதப்படும் உசைன் போல்ட் ஆகியோரையும் ஐசியி தூதராக நியமனம் செய்துள்ளது.
இது தொடர்பாக யுவராஜ் சிங் கூறியதாவது:-
ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தது உள்பட டி20 உலகக் கோப்பையில் விளையாடியதில் இருந்து எனது சில அருமையான கிரிக்கெட் நினைவுகள் வந்துள்ளன, எனவே இந்த பதிப்பின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, இது இன்னும் மிகப்பெரியதாக இருக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விளையாடுவதற்கான சிறந்த இடமாகும். மைதானத்திற்கு கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்கள் உருவாக்கும் வைப் (vibe), உலகின் மற்ற பகுதியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமானது. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் கிரிக்கெட் விரிவடைகிறது. டி20 உலகக் கோப்பை மூலம்அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நியூயார்க்கில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மோதல் இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக இருக்கும், எனவே புதிய மைதானத்தில் உலகின் சிறந்த வீரர்கள் விளையாடுவதைக் காண்பது ஒரு பாக்கியம்.
இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. 20 அணிகள் 9 இடங்களில் 55 போட்டிகளில் விளையாடுகின்றன. இறுதிப் போட்டி ஜூன் 29-ந்தேதி பார்படோஸில் நடக்கிறது.






