என் மலர்
நீங்கள் தேடியது "உதவியாளர் கைது"
- வேதிகா நடிகை ஆலியா பட்டிடம் நிதி ஆவணங்கள் மற்றும் பணம் கையாள்வது தொடர்பான வேலையை செய்து வந்துள்ளார்.
- ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான் போலீசில் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட வேதிகா தலைமறைவானார்.
மும்பை:
இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.
நடிகை ஆலியா பட்டிடம் 2001 முதல் 2004 வரை வேதிகா பிரகாஷ் ஷெட்டி (வயது32) என்பவர் தனி உதவியாளராக பணியாற்றினார்.
இந்த நிலையில் நடிகை ஆலியா பட்டின் தாயாரும், முன்னாள் நடிகையும் இயக்குனருமான சோனி ரஸ்தான், வேதிகா பிரகாஷ் ஷெட்டி ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி ஜூஹூ போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
குற்றவியல் மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேதிகா பிரகாஷ் ஷெட்டியின் மீது போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
வேதிகா நடிகை ஆலியா பட்டிடம் நிதி ஆவணங்கள் மற்றும் பணம் கையாள்வது தொடர்பான வேலையை செய்து வந்துள்ளார். போலி பில்களை தயாரித்து, அதை உண்மையானதாக காட்ட நவீன தொழில் நுட்பமுறைகளை பயன்படுத்தி உள்ளார்.
ஆலியா கையெழுத்திட்டப் பிறகு அந்த தொகை வேதிகாவின் நண்பரின் கணக்கிற்கு மாற்றப்பட்டு பிறகு அவரது கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான் போலீசில் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட வேதிகா தலைமறைவானார். ராஜஸ்தான், கர்நாடகா, புனே, பெங்களூரு என தொடர்ந்து இடங்களை மாற்றிக் கொண்டே இருந்தார்.
வேதிகாவை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் பெங்களூருவில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். அவரை மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரையூர் கோர்ட்டில் தலைமை எழுத்தாளராக பணியாற்றுபவர் அனுப்பானடி ராமகிருஷ்ணன் (வயது 52). இவரிடம் ஊழியர்கள் வருகை பதிவேட்டை பராமரிக்கவும் தாமதமாக வருவோருக்கு ‘ஆப்சென்ட் போடவும் மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தினாராம்.
அதே கோர்ட்டில் கீழகுயில்குடியைச் சேர்ந்த சிவபாண்டி (52) இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்கு தாமதமாக வந்ததாக கூறி ராமகிருஷ்ணன் ஆப்சென்ட் போட்டுள்ளார்.
இதனை சிவபாண்டி தட்டிக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது தான் தாக்கப்பட்டதாக பேரையூர் போலீசில் ராமகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாண்டியை கைது செய்தனர்.






