என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டு ஊழியர் தாக்குதல்"

    பேரையூர் நீதிமன்ற ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாக மற்றொரு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    பேரையூர்:

    பேரையூர் கோர்ட்டில் தலைமை எழுத்தாளராக பணியாற்றுபவர் அனுப்பானடி ராமகிருஷ்ணன் (வயது 52). இவரிடம் ஊழியர்கள் வருகை பதிவேட்டை பராமரிக்கவும் தாமதமாக வருவோருக்கு ‘ஆப்சென்ட் போடவும் மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தினாராம்.

    அதே கோர்ட்டில் கீழகுயில்குடியைச் சேர்ந்த சிவபாண்டி (52) இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்கு தாமதமாக வந்ததாக கூறி ராமகிருஷ்ணன் ஆப்சென்ட் போட்டுள்ளார்.

    இதனை சிவபாண்டி தட்டிக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது தான் தாக்கப்பட்டதாக பேரையூர் போலீசில் ராமகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாண்டியை கைது செய்தனர்.
    ×