வருண் - நடாஷா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது

2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.
வருண் - நடாஷா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது
Published on

இந்தி திரையுலகில் அதிகமான சம்பளம் வாங்க கூடிய நடிகர்களுள் வருண் தவானும் ஒருவர். 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆண்டு வரை தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் பதிந்தார். இவர் பிரபல இந்தி இயக்குனர் டேவிட் தவானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

2010 ஆம் ஆண்டு இயக்குனர் கரன் ஜோஹருக்கு உதவி இயக்குனராக பணிப் புரிந்தார். 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார். பல வெற்றி படங்களில் நடித்த வருண் தவான் ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி வருண் தவான் அப்பா ஆக போகிறார் என்ற செய்தியை இணையத்தில் பதிவிட்டார் . நேற்று வருண் தவான் மற்றும் நடாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வருண் தற்பொழுது அட்லி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த தெறி திரைப்படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com