சமந்தா நடித்துள்ள ஹாலிவுட் வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த சிடாடெல் வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார்.
samantha
Published on

பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சமந்தா நடித்துள்ள சிடாடெல் ஹனி பன்னி (CITADEL HONEY BUNNY) ஹாலிவுட் வெப் தொடர் நவம்பர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ் & டிகே இயக்கியுள்ள இந்த வெப் தொடரின் ட்ரைலர் அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ளது.

ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த சிடாடெல் வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெப் தொடரின் யூனிவர்சின் ஒரு அங்கமாக தான் இந்த புதிய சிடாடெல் வெப் தொடர் உருவாகியுள்ளது.

இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com