search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "promotion"

    • கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது.
    • திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் உலக நாடுகளை சார்ந்து உள்ளது. ரஷியா-உக்ரைன் போர் சூழல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தது. பணவீக்கம் காரணமாக அமெரிக்க ஏற்றுமதியும் பின்னடைவை சந்தித்தது. புதிய வர்த்தக வாய்ப்புகளும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

    இந்திய தொழில் முனைவோரின் விடாமுயற்சி காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது. 2024 பிப்ரவரி மாதம் ரூ.12 ஆயிரத்து 248 கோடியாக உயர்ந்துள்ளது.

    இதுபோல் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.11 ஆயிரத்து 917 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. 2024 மார்ச் மாதம் ரூ.12 ஆயிரத்து 224 கோடியாக வர்த்தகம் உயர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என்றும் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
    • உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கினால் தான் உற்சாகத்துடன் பணி செய்வார்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகக் காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்காத தால் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலும், மனச்சோர்வும் அடைந்துள்ளனர். காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவை யின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

    உதவி ஆய்வாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன் வருவாய்த்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்த பலர் வட்ட ஆட்சியராகவும், தலைமை செயலகத்தில் தட்டச்சராக பணியில் சேர்ந்தவர்கள் நிர்வாக அலுவலராகவும் பதவி உயர்வு பெற்று விட்டனர். ஆனால், காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் அதே நிலையில் தொடர்கின்றனர். இது மிகப்பெரிய அநீதி ஆகும்.

    காவல்துறையின் இதயமாக திகழ்பவர்கள் துணை கண்காணிப்பாளர் நிலை முதல் உதவி ஆய்வாளர் நிலை வரை உள்ள அதிகாரிகள் தான். அவர்கள்தான் வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பவர்கள்.

    அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கினால் தான் உற்சாகத்துடன் பணி செய்வார்கள்.

    எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கும் ஐந்து நபர்கள் வீதம் வழங்கப்பட உள்ளது.
    • நடக்கப் போவது, செய்ய வேண்டியது போன்றவை பயிற்சியின் சாராம்சமாக விளக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி த்துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழுவினை வலுப்படுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சி தஞ்சாவூர், தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் அவர்கள் தொடங்கி வைத்து பள்ளி மேலாண்மை குழு முக்கியத்துவத்தைப் பற்றி ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

    ஆசிரியர் பயிற்றுநர்கள் மொத்தம் 80 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழுவினை சிறப்பான முறையில் நடத்துவதற்கான வழிகளை பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் இப்பயிற்சி வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிகளுக்கு ஐந்து நபர்கள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இதில் வெங்கட்ராமன், குலோத்துங்கன், திருமுருகன், மதியழகன், பத்மவாதி, சுசித்ரா ஆகியோர் மாவட்ட கருத்தாளராக செயல்பட்டனர்.

    பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பங்கேற்பினை அதிகரித்தல், துணை குழுக்கள் அமைத்தல், உள்ளாட்சி உறுப்பினர்கள் பங்கேற்பினை உறுதி செய்தல் மற்றும் செயலி வழி பள்ளி மேம்பாட்டு திட்டமிடலை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சியானது நடை பெற்றது.

    இதில் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பு பற்றிய மேற்பார்வை மற்றும் துணை குழுக்கள் பற்றிய அறிமுகம் மேலும், பெற்றோர் செயலையும் மாதாந்திர பள்ளி மேம்பாட்டு திட்டமும் நடந்தது. நடக்கப் போவது, செய்ய வேண்டியது போன்றவை பயிற்சியின் சாராம்சமாக விளக்கப்பட்டது.

    இப்பயிற்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌமிய நாராயணன், தமிழ்நாடு கல்வி பெல்லோவ்ஷிப் ஒருங்கிணைத்தனர்.

    • வருவாய் ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்று 7 பேர் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவக்குமார் சாலை மேம்பாட்டு திட்ட தனிதாசில்தார் அலுவலக துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்று 7 பேர் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி காங்கயம் தாசில்தார் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த ஈஸ்வரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக ஈ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த பாலவிக்னேஷ் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக தலைமையிடத்துக்கு துணை தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவக்குமார் சாலை மேம்பாட்டு திட்ட தனிதாசில்தார் அலுவலக துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுபோல் அவினாசி மண்டல துணை தாசில்தாராக இருந்த சாந்தி மீண்டும் அதே இடத்திலும், திருப்பூர் மாநகராட்சி அலுவலக தேர்தல் துணை தாசில்தாராக இருந்த வசந்தா மீண்டும் அதே இடத்திலும், மடத்துக்குளம் தேர்தல் துணை தாசில்தாராக இருந்த வளர்மதி மீண்டும் அதே இடத்திலும், தாராபுரம் மண்டல துணை துணை தாசில்தாராக இருந்த மகேஸ்வரி மீண்டும் அதே இடத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.

    • முதுநிலை வருவாய் ஆய்வாளர்களும் பதவி உயர்வு பெற்றனர்
    • உத்–த–ரவை மாவட்ட கலெக்–டர் சி.பழனி பிறப்–பித்–துள்–ளார்.

    விழுப்–பு–ரம்:

    விழுப்–பு–ரம் மாவட்–டம் மேல்–ம–லை–ய–னூர் தேர்தல் பிரிவு துணை தாசில்–தா–ராக பணி–யாற்றி வந்த தன–லட்–சுமி பதவி உயர்வு பெற்று செஞ்சி ஆதி–தி–ரா–வி–ட–நல தனி தாசில்–தா–ராக நிய–ம–னம் செய்–யப்–பட்–டார். அதேபோன்று, திரு–வெண்–ணைநல்–லூர் தலைமை–யி–டத்து துணை தாசில்–தார் செந்தில்–கு–மார் பதவி உயர்வு பெற்று விழுப்–பு–ரம் ஆதி–தி–ரா–விட நல தனி தாசில்–தா–ரா–க–வும், மேல்–ம–லை–ய–னூர் தலை–மை–யி–டத்து துணை தாசில்–தார் துரைச்–செல்–வன் பதவி உயர்வு பெற்று செஞ்சி சமூக பாது–காப்பு திட்ட தனி தாசில்–தா–ரா–க–வும் நிய–ம–னம் செய்–யப்–பட்–டுள்–ளார்–கள்.

    மேலும், மரக்–கா–ணம் தலை–மை–யி–டத்து துணை தாசில்–தார் ஏழு–மலை பதவி உயர்வு பெற்று மரக்–கா–ணம் தேசிய நெடுஞ்–சாலை நில–எ–டுப்பு தனி தாசில்–தா–ரா–க–வும், மேல்– ம–லை–ய–னூர் வட்ட வழங்–கல் அலு–வ–லர் கிருஷ்–ண–தாஸ் திண்–டி–வ–னம் முத்–தி–ரைத்–தாள் தனி தாசில்–தா–ரா–க–வும் நிய–ம–னம் செய்–யப்–பட்–டுள்–ள–னர். இதேபோல் மாவட்ட கலெக்டர் அலு–வ–லக தலைமை உத–வி–யா–ளர் கனி–மொழி, திரு–வெண்–ணைநல்–லூர் தேர்–தல் துணை தாசில்–தார் வித்–யா–த–ரன், விக்–கி–ர–வாண்டி மண்–டல துணை தாசில்–தார் யுவ–ராஜ், செஞ்சி வட்ட வழங்–கல் அலு–வ–லர் வெங்–க–டேசன், திண்–டி–வ–னம் மண்–டல துணை தாசில்–தார் ராஜ–சேகர், கண்–டாச்–சி–பு–ரம் தேர்தல் பிரிவு துணை தாசில்–தார் ரமேஷ் இவர்–கள் உள்–பட மொத்–தம் 20 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்டத்–திற்–குள் வெவ்–வேறு இடங்–க–ளுக்கு நிய–மிக்–கப்–பட்–டுள்–ளார்–கள்.

    மேலும் முது–நிலை வரு–வாய் ஆய்–வா–ளர்–க–ளாக பணி– யாற்றி வந்த மலர்–விழி, சித்–தார்த்–தன், ஆறு–மு–கம், கணேசன், அக்–தர்–ஜெகன், வேல்–மு–ரு–கன், சொர்–ணாம்–பிகை உள்–ளிட்ட 19 பேர் துணை தாசில்–தா–ராக பதவி உயர்வு பெற்று மாவட்–டத்–தில் வெவ்–வேறு இடங்–களில் பணி நிய–ம–னம் செய்–யப்பட்–டுள்–ள–னர். இதற்–கான உத்–த–ரவை மாவட்ட கலெக்–டர் சி.பழனி பிறப்–பித்–துள்–ளார்.

    • மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமையாசிரியர் பதவிகளுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளமைக்கு நன்றி.
    • வெகு காலமாக சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு நல் வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமையாசிரியர் பதவிகளுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளமைக்கு நன்றி. கலந்தாய்வு முடிந்த பின் உருவாகும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கும் உடனடி துணை பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

    பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்தும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். அப்போது தான் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காது. பதவி உயர்வுக்கு பின் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் கடந்த முதல் தேதி அடிப்படையில் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்துவதன் வாயிலாக வெகு காலமாக சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு நல் வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 4 மாவட்டங்களில் சுமார் 26 பேரூராட்சிகள் உள்ளன
    • அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 26 பேரூராட்சிகள் உள்ளன.

    இந்த பேரூராட்சிகளின் வேலூர் மண்டல உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜிஜாபாய் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இதனை அடுத்து வேலூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் அம்சா, கூடுதல் பொறுப்பாக உதவி இயக்குனர் பணிகளை கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் ஆலங்காயம் பேரூராட்சியின் செயல் அலுவலராக பணியாற்றி வந்த செ.கணேசன் பதவி உயர்வு பெற்று வேலூர் மண்டல உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 27 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கபட்டது
    • சுதாகரன் ஈரோடு டவுனிற்கும், ரவிச்சந்திரன் கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணி நியமனம் செய்யப்ப ட்டுள்ளனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு உதவியாளர்களாக பணியாற்றி வந்த 27 பேர் கடந்த மே மாதம் 15-ந் தேதி முதல் கடந்த 17-ந் தேதி வரை கோவை மற்றும் சேலம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியை நிறைவு செய்த 27 பேருக்கும் சப்- இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளித்து மாவட்ட த்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணி நியமனம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவின்படி பிரபாகரன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கும், வடிவேல் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும், ஆனந்தகுமார், எட்வின் டேவிட், ரவிக்குமார் ஆகியோர் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கும், செல்வம் புளியம்ப ட்டிக்கும், வில்சன் சத்யராஜ், சரவணகுமார், ஜெக தீஸ்வரன் கோபிசெட்டி பாளை யத்துக்கும், செல்வ ராஜ் சத்தியம ங்கலத்துக்கும், பழனிசாமி, சிவக்குமார் ஈரோடு தாலுகா விற்கும், தாமோதரன் சென்னி மலைக்கும், கந்தசாமி தாளவாடிக்கும், வெங்க டேஷ் ஆப்பக்கூடலுக்கும், மூர்த்தி பவானிக்கும், எஸ்.சிவக்குமார் நம்பியூருக்கும், மேகநாதன் அறச்சலூருக்கும், முருகன் ஈரோடு வடக்கிற்கும், மாதேஸ்வரன் சென்னி மலைக்கும், வாசு கடத்தூரு க்கும், தாயளன் சிவகிரிக்கும், எம்.பழனிசாமி ஈரோடு தெற்கிற்கும், முருகேசன் மற்றும் வெங்கட்ராமன் திங்களூருக்கும், சுதாகரன் ஈரோடு டவுனிற்கும், ரவிச்சந்திரன் கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணி நியமனம் செய்யப்ப ட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
    • அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசி ரியர்கள் 423 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் வருகிற ‌ஜூலை மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 1000 பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு காரணமாக காலி பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் காலி பணியிடங்களை நிரப்ப கவுன்சிலிங் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசி ரியர்கள் 423 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்ற வரும்படி 423 டாக்டர்களுக்கும் மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் முடிந்த பிறகு பேராசிரியர் பணியிடங் களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரி உட்பட தமி ழகத்தின் 46 இன்ஸ்பெக்டர் களை டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா நேற்று உத்தரவிட்டார்.
    • நாமக்கல் மாவட்டம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு இன்ஸ் பெக்டர் ராஜா, சேலம் மாவட்டம் சங்ககிரி உட் கோட்ட பிரிவு டி.எஸ்.பி ஆகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

    சேலம்:

    சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உட்பட தமி ழகத்தின் 46 இன்ஸ்பெக்டர் களை டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா நேற்று உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் தலைவா சல் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், நீலகிரி மாவட்ட குற்றப்பி ரிவு டி.எஸ்.பி ஆகவும், சேலம் மாநகர ரவுடிகள் கண்காணிப்பு (ஓ.சி.ஐ.யூ) பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா ரவி தங்கம், கிருஷ்ண கிரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஆகவும், நாமக்கல் மாவட்டம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு இன்ஸ் பெக்டர் ராஜா, சேலம் மாவட்டம் சங்ககிரி உட் கோட்ட பிரிவு டி.எஸ்.பி ஆகவும் நியமிக்கப்பட்

    டுள்ளனர்.

    இவர்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள். மேலும் தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சேலம் மாந கரம் அன்னதானப்பட்டி சரக உதவி கமிஷனர் ஆகவும், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வம், சேலம் மாநகரம் அம்மாபேட்டை சரக உதவி கமிஷனர் ஆகவும் நியமிக்கப்பட்டு விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள். 

    • வருவாய் துறையில் துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த பானுமதி காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், பல்லடம் வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த மயில்சாமி மடத்துக்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    • சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.
    • இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    இப்பள்ளி, கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் மாண வர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், கைடுகள் மற்றும் எழுதுப் பொருட்கள், புத்தகப் பை, டிபன் கேரியர்கள் போன்றவை விற்பனையும் களை கட்ட தொடங்கி யுள்ளன.

    சேலத்தில் உள்ள ஸ்டேஷ னரி கடைகளில் சிவகாசி, மதுரை உள்ளிட்ட பகுதி களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நோட்டு புத்தகங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நோட்டு புத்தகங்கள் மட்டு மின்றி உரைநடை (கைடு) புத்தகங்கள் விலையும் உயர்ந்துள்ளது. விலை குறைவாக உள்ள உரைநடை நூல்கள், நோட்டு புத்தகங்களில் உள்ள தாள்களின் தரம் சற்று குறைவாகவே இருப்பதால் பெற்றோர்கள் விலை அதிகம் உள்ள நோட்டு புத்தகங்கள், கைடுகள் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். 

    ×