என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் அரசு வாகன ஓட்டுனர் சங்க பொதுக்குழு கூட்டம்
- மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர்கள் தஞ்சை ரவிச்சந்திரன், திருவாரூர் வன்னியநாதன், நாகை அருண்சடேசன், கடலூர் அமானுல்லா ஆகியோர் கலந்துகொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.
சங்க மாவட்ட அமைப்பு செயலாளராக விஜயபாலன் செயற்குழு உறுப்பினர்களாக சந்துரு, ரம்யா, ரவி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக பிரபாகரன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் என்.எம்.ஆர். முறையில் ஊதியம் பெறும் ஓட்டுனர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் தரஊதியம் என்ற அடிப்படையில் தரஊதிய பிரச்னைகளுக்கு தீர்வுகார வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓட்டுனர்களாக பணியாற்றும் படித்த இளைஞர்களுக்கு கல்விக்தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க அரசை கேட்டுக்கொள்வது, அரசுத்துறைகளில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட தமிழக அரசை கேட்டுக்கொள்வது, அரசுத்துறை ஓட்டுனர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், சென்னையில் நடத்தப்பட உள்ள பேரணியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்துகொள்வது என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.