என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆண்டியாலை அரசமூட்டுவிளை கோவிலில் சாமி தரிசனம் செய்த காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்
- சாமி தரிசனம் செய்தார் கன்னியாகுமரி மாவட்ட தொகுதி எம்.பி. விஜய் வசந்த்.
- விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
ஆண்டியாலை அரசமூட்டுவிளை நாராயணசுவாமி திருக்கோயில் வருடாந்திர விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததாக கன்னியாகுமரி மாவட்ட தொகுதி எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
மேலும், இப்பதிவுடன் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,"நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் அவர்கள் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் தியாகத்தையும், சாதனைகளை விளக்கியும், பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்தும் நேற்று (26-06-2025) நாகர்கோவில் கோணம் கம்பி பாலம் சந்திப்பு அருகே நடைபெற்ற 6வது நாள் தொடர் தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.






