search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "yogibabu"

  • நடிகர் யோகிபாபு பல திரைப்பிரபலங்கள் படத்தில் நடித்து வருகிறார்.
  • இவர் 2020-ஆம் ஆண்டு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

  தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் என பல திரைப்பிரபலங்கள் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


  கடந்த 2020-ஆம் ஆண்டு யோகிபாபு, பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விசாகன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. யோகிபாபு தீவிர முருகர் பக்தர் என்பதால் தன் குழந்தைக்கு பரணி கார்த்திகா என பெயரிட்டுள்ளார்.


  இந்நிலையில், யோகிபாபு தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார். இதில் விஜய் சேதுபதி, சூர்யா, விஷால், உதயநிதி, ஜெயம் ரவி, கார்த்தி, விஜய் வசந்த் என திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • டியூட் விக்கி எழுதி-இயக்கும் திரைப்படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960'.
  • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

  யூ டியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற டியூட் விக்கி எழுதி-இயக்கும் திரைப்படம் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960'. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும்  பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


  பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார். இணை தயாரிப்பை  ஏ.வெங்கடேஷ் மேற்கொள்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன்  போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.


  இந்நிலையில், 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் யோகிபாபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நயன்தாராவும் யோகிபாபுவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • யோகிபாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
  • இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

  மலையாளத்தில் மாஸ்குரேட் என்ற வெப் சீரிஸை இயக்கிய சஜின் கே.சுரேந்திரன், தற்போது யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாஸ்டர் ஷக்தி ரித்விக், 'லவ் டுடே' பிராத்தனா நாதன் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார்.  பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை 'ஈடன் ஃபிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ்' தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார். மல்டி ஸ்டாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.  இந்நிலையில் யோகிபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் மடோன் அஸ்வின் வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு 'வானவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


  • இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தூக்குதுரை’.
  • இப்படத்தில் நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கிறார்.

  தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் தற்போது 'ட்ரிப்' படத்தை இயக்கிய இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் 'தூக்குதுரை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இனியா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


  மூன்று விதமான காலங்களில் நடைபெறும் நிகழ்வை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தை ஓபன் கேட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மனோஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த டீசரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
  • நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
  • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


  இந்நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளார். 'புரொடக்ஷன் 5' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ருக்மினி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


  இப்படத்தின் பூஜை இன்று காலை மலேசியாவில் உள்ள கோவிலில் நடைபெற்றுள்ளது. இதனை இயக்குனர் ஆறுமுக குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


  • யோகிபாபு தற்போது யானை முகத்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
  • இப்படத்தின் ரிலீஸ் காரணம் இல்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

  தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்த யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது யானை முகத்தான் என்ற படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார். ரஜிஷா மிதிலா இயக்கத்தில் உருவாகி உள்ள யானை முகத்தான் படத்தில் ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர்.

  இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. யானை முகத்தான் படம் தமிழ் புத்தாண்டையொட்டி நாளை (14-ந்தேதி) தமிழகம் முழுவதும் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.


  யானை முகத்தான்

  யானை முகத்தான்

  இந்நிலையில் யானை முகத்தான் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகாது என்றும் அதை தள்ளி வைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ''எந்த காரணமும் இல்லாமல் நாங்கள் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து இருக்கிறோம்'' என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் ௨௧ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான யோகிபாபு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.
  • அங்கு அவர் தாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் புதிய படங்களுக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் யோகிபாபு திடீரென திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். அவர் கோவிலில் உள்ள மூலவர், சுவாமி சண்முகர் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.


  கோவிலில் தரிசனம் செய்த யோகிபாபு
  கோவிலில் தரிசனம் செய்த யோகிபாபு

  நடிகர் யோகி பாபுவை கண்டதும் ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்து கொண்டனர். கோவில் சண்முக விலாஸ் மண்டபம் முதல் விருந்தினர் மாளிகை வரையிலும் நடிகர் யோகிபாபு செல்லும் வரை அவரை பின்தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். இடையில் கோவில் வளாகத்தில் நின்ற திருநங்கைகளிடத்திலும், யாசகம் பெறுபவர்களிடமும் அவர் ஆசிர்வாதம் பெற்றார்.

  • இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'காசேதான் கடவுளடா'.
  • இப்படத்தில் நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. இதில் யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  காசேதான் கடவுளடா

  இந்நிலையில், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், சென்னை தி.நகரை சேர்ந்த ராஜ் மோகன் என்பவர் தன்னை சந்தித்து 'காசேதான் கடவுளடா' படத்தை எடுப்பதற்காக ரூ. 1 கோடியை 75 லட்சம் கடன் பெற்றதாகவும் படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார்.

  இந்த ஒப்பந்தத்தை மீறி தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால் தனக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படும் என்பதால் பணத்தை திருப்பி கொடுக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.


  காசேதான் கடவுளடா

  இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ராஜ் மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட தொகை கொடுப்பட்டிருக்கிறது. மீதி தொகை கொடுக்கும் வரைக்கும் இந்த படம் வெளியிடப்படாது என்ற உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்திரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி ராஜ் மோகன் தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

  • இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் 'லக்கி மேன்'.
  • இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

  தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொம்மை நாயகி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


  யோகிபாபு

  தற்போது இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் 'லக்கி மேன்'. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.


  லக்கி மேன் போஸ்டர்

  உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. 'லக்கி மேன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

  • தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.
  • அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

  தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். யோகிபாபுவை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் யோகி பாபு கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி, ஸ்ரீ தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த வினாயகர் சன்னதி, ஸ்ரீ பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ நாகராஜர் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.  நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்ய வந்த செய்தி அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவி, அவரை காண ரசிகர்கள் திரண்டனர். யோகிபாபுவை முற்றுகையிட்டு அவருடன் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்பியும் எடுத்து கொண்டனர்.