search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "annamalaiyar temple"

    • திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது.
    • ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.

    திருப்பூர்:

    திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலின் கிழக்கு கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டக் கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலின் ராஜகோபுரமாக உள்ள கிழக்கு கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும். ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.

    அதேவேளையில், கூட்ட நெரிசலால் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய முடியவில்லை என்றால் கிழக்கு கோபுரத்தை தரிசனம் செய்கின்றனா்.இந்நிலையில், கோவிலின் கிழக்கு கோபுரத்தை 30 அடி உயரத்துக்கு மறைத்து வணிக வளாகம் கட்டினால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, பக்தா்களின் வசதிக்காகவும், கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அண்ணாமலையார் உடன் உண்ணா மழைஅம்மை மற்றும் நந்தி பெருமானுக்கு வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டியில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம் வழிபாடானது நடைபெற்றது.

    முன்னதாக அண்ணாமலையார் உடன் உண்ணா மழைஅம்மை மற்றும் நந்தி பெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அம்மை, அப்பன் உற்சவ சிலைகள் கோவிலை சுற்றி வந்தது. அதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நாள் வழிபாட்டை தொடர்ந்து அன்னம் பாலிப்பு நடைபெற்றது.
    • ஐம்பொன் சிலைகளுக்கு திருக்குட நீராட்டு நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்து தீபாரணை காட்டப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி-சத்தியமங்கலம் சாலையில் உண்ணா முலையம்மை உடனமர் அண்ணா மலையார் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் அதிகாலை நிலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சியுடன் 63 நாயன்மார் களுக்கும் மற்றும் திருச்சிற்ரூ திருமூர்த்திகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், மஞ்சள், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு நாள் வழிபாட்டை தொடர்ந்து அன்னம் பாலிப்பு நடைபெற்றது.

    தொடர்ந்து வேள்வி பூஜை ஆரம்பமானது. மேலும் மதியம்12 அளவில் வேள்வி நிறையுற்று நால்வர் ஐம்பொன் சிலைகளுக்கு திருக்குட நீராட்டு நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்து தீபாரணை காட்டப்பட்டது.

    இதை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் நால்வர் ஐம்பொன் சிலைகள் சப்பரத்தில் அமைத்து கோலாட்டத்துடன் பக்தர்கள் முக்கிய வீதி வழியாக திருவீதி உலா வந்து கோவிலை அடைந்தனர்.

    • பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும்.
    • பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம்.

    பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை. ரத்தம், கொழுப்பு, கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு கொண்டவை.

    அதேவேளை பசி, தாகம், தூக்கம் ஆகியவை நெருப்பின் தன்மை உடையவையாகவும்; அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.

    இதன் அடிப்படையில் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்புற வேண்டும் எனில் கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதும் நன்மை பயக்கும்.

    அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று நாம் வழிபடலாம்.

    இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

    பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம். அதற்கு திருச்சியில் இருந்து தொடங்கி திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று இறுதியாக ஸ்ரீ காளஹஸ்தியை அடைய வேண்டும்.

    இதற்கு திருச்சியிலிருந்து ஸ்ரீ காளஹஸ்தி வரை மொத்தம் 560 கி.மீ பயணிக்க வேண்டும். எல்லா ஊர்களுக்கும் ரெயில், பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன.

    • மெத்யூவ் கார்மென்ட்ஸ் நிறுவனம் அன்னைதெரசா பொறித்த விபூதி பாக்கெட்டுகளை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து வந்தனர்.
    • இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வந்தனர். அப்போது பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான மெத்யூவ் கார்மென்ட்ஸ் முன்பக்கம் அண்ணாமலையார் படமும் பின்பக்கம் அன்னை தெரசா படம் மற்றும் அந்த நிறுவனத்தின் பெயரும் பொறித்த விபூதி பாக்கெட்டுகளை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து வந்தனர்.

    இதுகுறித்து இந்து முன்னணியினர் கோயில் இணை ஆணையர் குமரேசனிடம் முறையிட்டனர். இது போன்று பக்தர்களை மதமாற்றம் செய்ய தூண்டும் வகையில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள் ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைதொடர்ந்து இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் குமரேசன் இந்த செயலில் ஈடுபட்ட சோமநாத குருக்கள், முத்துக்குமாரசாமி குருக்கள் ஆகி இருவரையும் 6 மாதத்திற்கு பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் திருக்கோவிலில் இந்த 6 மாத காலத்தில் சாமிக்கு எந்த அபிஷேகம் ஆராதனைகள் செய்யக்கூடாது எனவும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    அண்ணாமலையார் மலையில் பிராயசித்த பூஜை நடந்தது. இதனையொட்டி மலையில் உள்ள அண்ணாமலையார் பாதத்துக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் மாதம் ஒரு விழா நடைபெற்று வருகிறது.

    இதில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியாக கடந்த 23-ந் தேதி மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் மகாதீபம் ஏற்றப்படும்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று தீபத்தை வணங்குவார்கள். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மகா தீபத்தின்போது மலையேற தடை விதிக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டனர். அதன்படி இந்த ஆண்டும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையில் பக்தர்கள் மிதித்து ஏறுவதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அப்போது அங்குள்ள அண்ணாமலையார் பாதத்திற்கும் அபிஷேகம் நடத்தப்படும். தீபத்திருவிழா முடிந்த சில நாட்களில் இந்த பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான பிராயசித்த பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து புனித நீர் கலசங்கள் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயசித்த பூஜை நடந்தது. பின்னர் அண்ணாமலையார் பாதத்துக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    அண்ணாமலைக்கு அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. #AnnamalaiyarTemple #MahaDeepam
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் சிகர நிகழ்ச்சியாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றியதை கண்ட பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா என கோஷ்ங்கள் எழுப்பி அண்ணாமலையாரை வழிபட்டனர்.
     
    மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.



    திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை கொட்டினாலும் பக்தர்கள் எதையும் பொருட்படுத்தாமல் மகா தீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    மலையுச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் கோவில் கொடி மரம் எதிரேயுள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். சுமார் 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    திருவண்ணாமலை மகா தீபத்தை காண வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #AnnamalaiyarTemple #BharaniDeepam
    ×