search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agni Nakshatra"

    • கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
    • நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் பதிவாகி வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர். மேலும் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருவதோடு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரங்களில் உள்ள பழச்சாறுகள், கரும்பு சாறு, இளநீர், நுங்கு, பழ வகைகள் போன்றவற்றை பொது மக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் மதிய வேளையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெருமளவில் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

    இது மட்டும் இன்றி காலை முதல் மதியம் வரை கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் புழுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் தூக்கமின்றி இருப்பதையும் காண முடிந்தது. இந்த நிலையில் கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 -ந்தேதி 102.2, 2- ந் தேதி 104.5, 3- ந் தேதி 104, 4 -ந் தேதி 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. கடலூரில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி 101.48 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. பொதுமக்கள் கடும் வெயிலால் கடுமையாக பாதிப்படைந்து வரு வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி தற்போது வரை வழக்கத்தை விட அதிக அளவில் பதிவாகி வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது. இந்த நிலையில் கடல் பகுதியில் இருந்து மேற்கு திசை காற்று மிக வலிமையாக வறண்ட காற்றாக வருவதால் அனல் காற்று அதிகரித்து சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகின்றது.

    மேலும் கிழக்கு பகுதியிலிருந்து வரக்கூடிய ஈரக்காற்று மதியம் ஒரு மணி முதல் 2 மணிக்குள் காற்று வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் தற்போது கிழக்கு காற்று தாமதமாக வருகின்றது. இது மட்டும் இன்றி தென்மேற்கு பருவமழை எப்போதும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும். ஆனால் இதனால் வரை தென்மேற்கு பருவ மழை கேரளா பகுதியில் தொடங்காததால் தமிழகத்தில் தொடர்ந்து வெயில் தாக்கி வருகின்றது. இந்த வருடம் தென்மேற்கு பருவக்காற்று நிலை இதுவரை அடையாததால் சற்று காலதாமதம் ஆகும் என எண்ணப்படுகிறது. இது மட்டும் இன்றி அந்தமான் பகுதியில் தற்போது தான் தென்மேற்கு பருவ மழை நிலை கொண்டு தொடங்கும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா பகுதியில் தென்மேற்கு மழை தொடங்கும் பட்சத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். எனவே வருகிற 2 நாட்களும் இதே போன்ற வறண்ட நிலை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என தெரிவித்தார். ஆகையால் பொதுமக்கள் தமிழக அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கோடை காலமாகும்.
    • கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, வெயி லின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும்.

    சேலம்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கோடை காலமாகும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, வெயி லின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி யதில் இருந்தே தமிழகத்தின் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து இருந்தது.

    அக்னி நட்சத்திரம்

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்தி ரம் தொடங்கியது. அதன் பிறகு மே மாதம் 8-ந்தே திக்கு மேல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக மதிய நேரத்தில் வெயில் சுட்டெரித்தது.

    சேலத்தில் அதிகபட்சமாக 106 பாரன்ஹீட் வெப்ப நிலை நிலவியது. இதனால் கூலி வேலைக்கு செல் ேவார், தொழிலா ளர்கள், அலுவலக வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டி கள், பாதசாரி கள் கடும் அவதிக்குள்ளா கினர். இர வில் கடும் புழுக்கம் ஏற்பட்ட தால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளா கினர்.

    இன்றுடன்...

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (29-ந்தேதி) முடிவடைகிறது. இதனால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அக்கினி நட்சத்திர காலத்தில் என்ன செய்யலாம்?
    • குலதெய்வத்தை நினைத்து வழிபட்டு வந்தாலும் சிறந்த பரிகாரமாக அமையும்.

    மதுரை

    அக்கினி நட்சத்திர காலத்தில் என்னென்ன காரியங்கள் செய்யலாம்? என்னென்ன காரியங்கள் செய்யக்கூடாது? என்ற குழப்பம் பலருக்கும் வந்து கொண்டே இருக்கும்.

    அதற்கான பதிலை மடப்புரம் விலக்கு ஜோதிடர் கரு. கருப்பையா கூறியுள்ளார். ஆண்டு தோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் வருவது அக்னி நட்சத்திரமாகும். இந்த மாதம் மே 4-ந் தேதி தொடங்கிய அக்கினி நட்சத்திரம், வருகிற 29-ந் தேதி நிறைவடைகிறது.

    இந்த காலகட்டத்தில் புதிய காரியங்கள் செய்ய லாமா?, சுப காரியங்கள் செய்யலாமா?, மொட்டை அடிக்கலாமா?, காதுகுத்து நடத்தலாமா?, புதிய வீட்டுக்கு குடி போகலாமா?, என்ற கேள்விகள் மனதிற்குள் எழுந்து கொண்டே இருக்கும்.

    பொதுவாக அக்கினி நட்சத்திர காலத்தில் முன் பாதியை தொடுப்பு என்றும், பின் பாதியை கழிவு என்றும் சொல்வார்கள். எனவே பின் பாதி காலத்தில் தாராளமாக சுப காரியங்கள் செய்யலாம். குலதெய்வத்தை நினைத்து வழிபட்டு வந்தாலும் சிறந்த பரிகாரமாக அமையும்.

    மேலும் வழக்கமான காரியங்களை சிறப்பாக செய்யலாம். புதிய காரியங்களை மட்டும் தள்ளிப் போடுவது நல்லது. இந்த காலகட்டத்தில் தூரதேச பயணங்களை தவிர்ப்பதும் நல்லது. இடம், மனை தாராளமாக வாங்கலாம்.

    இவ்வாறு பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு. கருப்பையா விளக்கமளித்துள்ளார்.

    • முருகப்பெருமானுக்கு காலை 7 மணிக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம் நடந்தது.
    • ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, தேவார, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    சென்னிமலை, 

    சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழாவை முன்னிட்டு நேற்று நடந்த ஸ்ரீ சுப்பிரமண்ய ஜெப பாரா யணம் ஹோமம் பூஜை களில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 40 -– வது ஆண்டாக நடந்த மூன்று நாள் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு காலை 7 மணிக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம் நடந்தது.

    அதை தொடர்ந்து வேதிகா அர்ச்சனையும், 1008 கலச அபிஷேகம் மற்றும் ஸ்ரீ மஹா ஜெய விஜய ஸ்ரீ சுப்பிரமண்ய ஜெப பாராயணம் ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, தேவார, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    பிறகு பகல் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனையும், அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி புறப்பாடும் நடை பெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களுக்கு சுப்புசாமி அருள் பிரசாதம் வழங்கினார், அன்னதான மும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர். 

    ×