search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னி நட்சத்திரம் முடிந்தும் வாட்டி வதைக்கும் கடும் வெயில்104 டிகிரி வெயில் பதிவாவது
    X

    கடலூரில் கடும் வெயிலின் தாக்கத்தினால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் நேதாஜி சாலை வாகனங்கள் அதிக அளவில் இன்றி வெறிச்சோடி காணப்படுவதை படத்தில் காணலாம்

    அக்னி நட்சத்திரம் முடிந்தும் வாட்டி வதைக்கும் கடும் வெயில்104 டிகிரி வெயில் பதிவாவது

    • கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
    • நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் பதிவாகி வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர். மேலும் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருவதோடு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரங்களில் உள்ள பழச்சாறுகள், கரும்பு சாறு, இளநீர், நுங்கு, பழ வகைகள் போன்றவற்றை பொது மக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் மதிய வேளையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெருமளவில் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

    இது மட்டும் இன்றி காலை முதல் மதியம் வரை கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் புழுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் தூக்கமின்றி இருப்பதையும் காண முடிந்தது. இந்த நிலையில் கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 -ந்தேதி 102.2, 2- ந் தேதி 104.5, 3- ந் தேதி 104, 4 -ந் தேதி 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. கடலூரில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி 101.48 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. பொதுமக்கள் கடும் வெயிலால் கடுமையாக பாதிப்படைந்து வரு வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி தற்போது வரை வழக்கத்தை விட அதிக அளவில் பதிவாகி வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது. இந்த நிலையில் கடல் பகுதியில் இருந்து மேற்கு திசை காற்று மிக வலிமையாக வறண்ட காற்றாக வருவதால் அனல் காற்று அதிகரித்து சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகின்றது.

    மேலும் கிழக்கு பகுதியிலிருந்து வரக்கூடிய ஈரக்காற்று மதியம் ஒரு மணி முதல் 2 மணிக்குள் காற்று வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் தற்போது கிழக்கு காற்று தாமதமாக வருகின்றது. இது மட்டும் இன்றி தென்மேற்கு பருவமழை எப்போதும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும். ஆனால் இதனால் வரை தென்மேற்கு பருவ மழை கேரளா பகுதியில் தொடங்காததால் தமிழகத்தில் தொடர்ந்து வெயில் தாக்கி வருகின்றது. இந்த வருடம் தென்மேற்கு பருவக்காற்று நிலை இதுவரை அடையாததால் சற்று காலதாமதம் ஆகும் என எண்ணப்படுகிறது. இது மட்டும் இன்றி அந்தமான் பகுதியில் தற்போது தான் தென்மேற்கு பருவ மழை நிலை கொண்டு தொடங்கும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா பகுதியில் தென்மேற்கு மழை தொடங்கும் பட்சத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். எனவே வருகிற 2 நாட்களும் இதே போன்ற வறண்ட நிலை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என தெரிவித்தார். ஆகையால் பொதுமக்கள் தமிழக அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×