search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parikaram"

    • தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

    வியதீபாதம் யோகத்தில் ஒருவன் பிறந்தால், அவன் குடும்பத்தில் மோட்சம் அடையாத ஆன்மாக்களின் சாபம் ஏற்படும். அப்படி இந்த யோகத்தில் பிறந்தவரோ அல்லது அவரது தந்தையோ, ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற வியதீபாதம் யோக நாளில் (ஜோதிடர் மூலம் இந்த நாளை அறிந்து கொள்வதே சரியானது)

    அதிகாலை நேரத்தில் இந்தத் திருத்தலத்தில் உள்ள தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் நதிக்கரையில் உள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள பக்தவத்சலப் பெருமாளை வணங்கி, அர்ச்சனை மற்றும் ஆராதனைகளைச் செய்ய வேண்டும். பின்னர் தங்களால் முடிந்த அளவு (குறைந்தது 10 பேருக்கு) அன்னதானம் செய்தால், பித்ரு தோஷம் மற்றும் கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

     பரிகாரம் செய்வது எப்படி?

    அசுப யோகங்களின் தோஷம் உள்ளவர்கள், முதலில் இந்தத் திருத்தலத்தின் புனித நீரான தாமிரபரணி நதியில் நீராட வேண்டும். நீராடும்போது உடுத்தி இருந்த ஆடையை அங்கேயே களைந்து, அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு, புதிய ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், பழைய ஆடைகளை ஆற்றில் விட்டு, அதனை மாசுபடுத்தக்கூடாது.

    பின்னர் ஆலயத்திற்குள் சென்று பக்தவத்சலப் பெருமாள் முன்பாக நின்று, அவரை வழிபட வேண்டும். பெருமாளுக்கு உகந்த துளசி மாலையை வாங்கிச் சென்று, பூஜை செய்யும் பட்டாச்சாரியாரிடம் கொடுத்து சுவாமிக்கு அணிவிக்கச் செய்ய வேண்டும். அதோடு சுத்தமான நெய் வாங்கிச் சென்று, சுவாமியின் முன்பாக இருக்கும் விளக்கில் சேர்க்கச் சொல்ல வேண்டும். பின்னர் உங்களது குறைகள் தீர இறைவனை வழிபட வேண்டும்.

    இறுதியாக நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. அது என்னவென்றால், கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும் முன்பாக, கோவிலிலோ, அல்லது வரும் வழியிலோ குறைந்தது 10 பேருக்கு கட்டாயமாக அன்னதானம் செய்ய வேண்டும். இதற்கான பணத்தை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்யச் சொல்வதில் எந்த பலனும் இல்லை. நீங்களே நேரடியாக உங்கள் கைகளால் இந்த அன்னதானத்தை வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • அக்கினி நட்சத்திர காலத்தில் என்ன செய்யலாம்?
    • குலதெய்வத்தை நினைத்து வழிபட்டு வந்தாலும் சிறந்த பரிகாரமாக அமையும்.

    மதுரை

    அக்கினி நட்சத்திர காலத்தில் என்னென்ன காரியங்கள் செய்யலாம்? என்னென்ன காரியங்கள் செய்யக்கூடாது? என்ற குழப்பம் பலருக்கும் வந்து கொண்டே இருக்கும்.

    அதற்கான பதிலை மடப்புரம் விலக்கு ஜோதிடர் கரு. கருப்பையா கூறியுள்ளார். ஆண்டு தோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் வருவது அக்னி நட்சத்திரமாகும். இந்த மாதம் மே 4-ந் தேதி தொடங்கிய அக்கினி நட்சத்திரம், வருகிற 29-ந் தேதி நிறைவடைகிறது.

    இந்த காலகட்டத்தில் புதிய காரியங்கள் செய்ய லாமா?, சுப காரியங்கள் செய்யலாமா?, மொட்டை அடிக்கலாமா?, காதுகுத்து நடத்தலாமா?, புதிய வீட்டுக்கு குடி போகலாமா?, என்ற கேள்விகள் மனதிற்குள் எழுந்து கொண்டே இருக்கும்.

    பொதுவாக அக்கினி நட்சத்திர காலத்தில் முன் பாதியை தொடுப்பு என்றும், பின் பாதியை கழிவு என்றும் சொல்வார்கள். எனவே பின் பாதி காலத்தில் தாராளமாக சுப காரியங்கள் செய்யலாம். குலதெய்வத்தை நினைத்து வழிபட்டு வந்தாலும் சிறந்த பரிகாரமாக அமையும்.

    மேலும் வழக்கமான காரியங்களை சிறப்பாக செய்யலாம். புதிய காரியங்களை மட்டும் தள்ளிப் போடுவது நல்லது. இந்த காலகட்டத்தில் தூரதேச பயணங்களை தவிர்ப்பதும் நல்லது. இடம், மனை தாராளமாக வாங்கலாம்.

    இவ்வாறு பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு. கருப்பையா விளக்கமளித்துள்ளார்.

    • இக்கோயில் பல யுகங்களை தாண்டிய தேவார பாடல் பெற்ற தலம் ஆகும்.
    • அம்மன் சன்னதிக்கு அருகே உள்ள எமனை வழிபட்ட பின்னர் தான் ஏனையகடவுள்களை வழிபட தொடங்குவார்கள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதர் கோவில் மிகப் பிரபல மான கோவிலாகும். இவ்கோ விலில் இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து சாமி தரிசனத்திற்காக வும், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களில் இருந்து, விடுபடவும் வழிபாடு செய்ய பக்தர்கள் பலர் வருகை தருகின்றனர்.

    இவ்வாலயத்தில் இந்தியாவிலேயே எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான குளம், குப்தகங்கை என அழைக்க–ப்படுகிறது. இக்குளத்தில் திருமகள் 64 கலைகள் ஓடு வாசம் செய்வதாக ஐதீகம். இக்கோயில் பல யுகங்களை தாண்டிய கோயில் என வரலாற்று புராணங்கள் சொல்லுகின்றன. இத்திரு–க்கோயிலை தேவாரம் பாடிய மூவர் பாடிய திருத்தலம் ஆகும்.

    திருவாஞ்சியம் கிராமம் சோழ மன்னர்கள் காலத்தில் துணை தலைநகரமாகவும் இருந்ததாக வரலாறு கூறுகின்றன. கோவிலை காண்பதற்கும், இக்கோ–யிலில் வழிபடுவதற்கும், குளத்தில் குளிப்பது, காசியில் உள்ள கங்கை யில் நீராடுவதற்கு சமம், தங்களின் பாவங்கள் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது. பக்தர்கள் பலர் இங்கு வருகை தந்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு பரிகாரம் செய்யும் திருத்தலமாக விளங்குகிறது. வாஞ்சிநாதர் மற்றும் மங்களாம்பிகையை வழிபடுவதற்கு முன்பு இங்குள்ள அம்மன்சன்ன தியில் எமனை வழிபட்ட பின்னர் ஏனையகடவு ள்களை வழிபட தொடங்கு வார்கள்.

    அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாஞ்சியம் வாஞ்சிநாத ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர் சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கான விடுதி, வாகனம் நிறுத்துவதற்கான இருப்பிட வசதி, கழிப்பிட வசதிகள், கோயிலின் தல வரலாறு அறிந்து கொள்ளக்கூடிய வகையில், அருங்காட்சியகம், திருவாஞ்சியம் நகரத்தில் பெருமையை உணர கூடிய வகையில், கலை அரங்கம் அமைக்கப்பட வேண்டுமென பொதும–க்களும் பக்தர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பக்தர்களின் கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்றுமா என எதிர்பார்க்கின்றனர்.

    ×