search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saturday"

    • சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
    • திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டம், திருபுவனம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சின்ன சீரங்கம் எனப்படும் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • பிளஸ் 2வில் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • நடப்பாண்டு பிளஸ் 1 மாணவருக்கும் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி வழங்குகிறது. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    பிளஸ் 2வில் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு 20 மாணவர்களும் என ஒன்றியத்துக்கு 70 மாணவர் தேர்வு செய்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 மாணவருக்கு மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு பிளஸ் 1 மாணவருக்கும் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒன்றியத்துக்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து சனிக்கிழமை தோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். நவம்பர் மூன்றாவது வாரம் பயிற்சி வகுப்பு துவங்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு வழியிலும் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும். நேரடி வகுப்புகளாக நடத்தப்படும். மாணவரின் வருகை மற்றும் மதிப்பெண் பதிவுகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றனர்.

    • முக்கிய ரோடுகளில், ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
    • கோட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் ;

    திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவில் திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள முக்கிய ரோடுகளில், ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக, ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் கோட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகள், போலீசார், நெடுஞ்சாலைத்துறை, மின்துறை என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளனர்.

    கலெக்டர் உத்தரவுப்படி திருப்பூர் ஆர்.டி.ஓ., தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இது குறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:- திருப்பூர் வருவாய் கோட்டத்தில் சனிக்கிழமை தோறும், ஆக்கிரமிப்பு அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., தலைமையிலான குழுவினர், முறையான முன்னறிவிப்பு செய்து நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.ஒவ்வொரு ரோடு வாரியாக, வாரம் தோறும் ஆக்கிரமிப்பு அகற்றி புதிய ஆக்கிரமிப்பு உருவாகாமல் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×