என் மலர்
உள்ளூர் செய்திகள்
சனிக்கிழமைதோறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி
- பிளஸ் 2வில் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- நடப்பாண்டு பிளஸ் 1 மாணவருக்கும் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது
திருப்பூர் :
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி வழங்குகிறது. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பிளஸ் 2வில் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு 20 மாணவர்களும் என ஒன்றியத்துக்கு 70 மாணவர் தேர்வு செய்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 மாணவருக்கு மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு பிளஸ் 1 மாணவருக்கும் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒன்றியத்துக்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து சனிக்கிழமை தோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். நவம்பர் மூன்றாவது வாரம் பயிற்சி வகுப்பு துவங்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு வழியிலும் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும். நேரடி வகுப்புகளாக நடத்தப்படும். மாணவரின் வருகை மற்றும் மதிப்பெண் பதிவுகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றனர்.