search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvanthipuram devanathaswamy temple"

    • ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நள்ளிரவு முதல் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் தங்கி காலை சாமி தரிசனம் செய்து சென்றார்கள்.
    • கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    இக்கோவிலில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் புரட்டாசி மாதம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று 3-வது சனிக்கிழமை என்பதால் நேற்று முன்தினம் முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருவந்திபுரத்திற்கு வந்தனர்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்று, சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் தேவநாதசாமி கோவிலில் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷம் தொடர்ந்து எழுப்பியவண்ணம் இருந்ததை காண முடிந்தது. நேற்று முன்தினம் முதல் இன்று மதியம் வரை திருவந்திபுரம் சாலக்கரை இலுப்பைதோப்பில் அமைந்துள்ள மொட்டை அடிக்கும் கூடாரத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடைன செலுத்தும் வகையில் மொட்டை அடித்து சாமி கும்பிட்டு சென்றனர்.

    ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நள்ளிரவு முதல் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் தங்கி காலை சாமி தரிசனம் செய்து சென்றார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த காரணத்தினால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரம்மோற்சவத்தையொட்டி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    கடலூர் அடுத்த திருவந்தி புரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் பிரம் மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தது.

    பிரம்மோற்சவத்தில் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவரான தேவநாத சுவாமிக்கும், செங்கமலத் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தேவநாதசுவாமி தாயாருடன் சிறப்பு அலங் காரத்தில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து அலங் கரிக்கப்பட்ட உற்சவரான ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி மேளதாளத் துடன் கோவிலில் இருந்து தேருக்கு கொண்டு செல்லப் பட்டது. கோவில் அருகில் அலங்கரித்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாத சுவாமி எழுந் தருளினர். அங்கு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக் கப்பட்டது.

    பின்னர் அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா...! கோவிந்தா...! என்ற பக்தி கோஷமிட்டபடி, வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோடும் வீதியில் அசைந் தாடி வந்த தேரை, ஏராளமான பக்தர்கள் கண்டு, பயபக்தி யுடன் சாமி தரிசனம் செய் தனர். இதற்கான ஏற் பாடுகளை பட்டாச் சாரியார் கள், அறநிலையத்துறை அதி காரிகள், பக்தர்கள் செய் திருந்தனர்.
    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ராபத்து உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில். இங்கு ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, 17-ந்தேதி பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ராப்பத்து உற்சவம் தொடங்கியது. இதையொட்டி இரவில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் உட்பிரகாரத்தில் வீதிஉலாவாக வந்து, அங்குள்ள ராபத்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தேசிகர் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 27-ந்தேதி வரை நடைபெறும் ராபத்து உற்சவத்தில் தினசரி இரவு பெருமாள், தேசிகர் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். பின்னர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சாமிக்கு சாற்றுமுறை நடைபெறும்.

    இதில் முக்கிய நிகழ்ச்சியாக 24-ம் தேதி (திங்கட்கிழமை) மூலவர் தேவநாதசாமிக்கு ஆபரண தங்கத்தை அகற்றி தைலகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து சித்திரை மாத பிரமோற்சவம் வரையில் தைலக்காப்புடன் தேவநாதசாமி அருள்பாலிப்பார். அதன்பின்னர் மீண்டும் பெருமாளுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட இருக்கிறது.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் தேசிகருக்கு தனி சன்னதி உள்ளது. தேசிகருக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தையொட்டி 12 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 750-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் தேசிகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் தேவநாதசுவாமிக்கும், தேசிகருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

    இதனை தொடர்ந்து தேசிகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து தேசிகர், அலங்கரித்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேருக்கு கொண்டு வரப்பட்டார். தேரில் அமரவைக்கப்பட்ட தேசிகருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் டிராக்டர்களில் தேரின் வடம் கட்டி, இழுக்கப்பட்டது. முக்கிய வீதிகளில் சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது. வழிநெடுகிலும் தேசிகரை பக்தர்கள் வழிபட்டனர்.

    பிரம்மோற்சவத்தின் 10-ம் நாள் விழாவான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேசிகர், ரத்தினங்கி சேவை அலங்காரத்தில் அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில் காட்சி அளிக்கிறார். பின்னர் மதியம் 2 மணிக்கு தேவநாதசுவாமி, ராமர், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார் சன்னதிகளுக்கு சென்று தேசிகர் வழிபடுகிறார். பின்னர் இரவில் கண்ணாடி பல்லக்கில் தேசிகர் வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார், பூஜைக்கான ஏற்பாடுகளை ஜெயபிரகாஷ் பட்டாச்சாரியார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ×