என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ரங்கநாதபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்2 Oct 2023 3:34 PM IST
- சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
- திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டம், திருபுவனம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சின்ன சீரங்கம் எனப்படும் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
Next Story
×
X