search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவாஞ்சியம் கோவிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த பக்தர்கள் கோரிக்கை
    X

    ஸ்ரீவாஞ்சியம் கோவிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த பக்தர்கள் கோரிக்கை

    • இக்கோயில் பல யுகங்களை தாண்டிய தேவார பாடல் பெற்ற தலம் ஆகும்.
    • அம்மன் சன்னதிக்கு அருகே உள்ள எமனை வழிபட்ட பின்னர் தான் ஏனையகடவுள்களை வழிபட தொடங்குவார்கள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதர் கோவில் மிகப் பிரபல மான கோவிலாகும். இவ்கோ விலில் இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து சாமி தரிசனத்திற்காக வும், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களில் இருந்து, விடுபடவும் வழிபாடு செய்ய பக்தர்கள் பலர் வருகை தருகின்றனர்.

    இவ்வாலயத்தில் இந்தியாவிலேயே எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான குளம், குப்தகங்கை என அழைக்க–ப்படுகிறது. இக்குளத்தில் திருமகள் 64 கலைகள் ஓடு வாசம் செய்வதாக ஐதீகம். இக்கோயில் பல யுகங்களை தாண்டிய கோயில் என வரலாற்று புராணங்கள் சொல்லுகின்றன. இத்திரு–க்கோயிலை தேவாரம் பாடிய மூவர் பாடிய திருத்தலம் ஆகும்.

    திருவாஞ்சியம் கிராமம் சோழ மன்னர்கள் காலத்தில் துணை தலைநகரமாகவும் இருந்ததாக வரலாறு கூறுகின்றன. கோவிலை காண்பதற்கும், இக்கோ–யிலில் வழிபடுவதற்கும், குளத்தில் குளிப்பது, காசியில் உள்ள கங்கை யில் நீராடுவதற்கு சமம், தங்களின் பாவங்கள் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது. பக்தர்கள் பலர் இங்கு வருகை தந்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு பரிகாரம் செய்யும் திருத்தலமாக விளங்குகிறது. வாஞ்சிநாதர் மற்றும் மங்களாம்பிகையை வழிபடுவதற்கு முன்பு இங்குள்ள அம்மன்சன்ன தியில் எமனை வழிபட்ட பின்னர் ஏனையகடவு ள்களை வழிபட தொடங்கு வார்கள்.

    அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாஞ்சியம் வாஞ்சிநாத ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர் சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கான விடுதி, வாகனம் நிறுத்துவதற்கான இருப்பிட வசதி, கழிப்பிட வசதிகள், கோயிலின் தல வரலாறு அறிந்து கொள்ளக்கூடிய வகையில், அருங்காட்சியகம், திருவாஞ்சியம் நகரத்தில் பெருமையை உணர கூடிய வகையில், கலை அரங்கம் அமைக்கப்பட வேண்டுமென பொதும–க்களும் பக்தர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பக்தர்களின் கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்றுமா என எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×