என் மலர்
நீங்கள் தேடியது "Lakshmi Menon"
- முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது கதாநாயகனுக்கு முக்கியதுவமுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
- இவர் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது கதாநாயகனுக்கு முக்கியதுவமுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் மலை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

மலை
இந்நிலையில் மலை படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் டி.இமான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். லக்ஷ்மி மேனன் மற்றும் யோகிபாபு இடம்பெற்றுள்ள அந்த போஸ்டர் படத்தின் ஒரு சிறிய தொகுப்பை உள்ளடக்கியது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
- பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியானது.
- சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார்.

சந்திரமுகி 2
அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். மேலும், லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

லட்சுமி மேனன்
இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் லட்சுமி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிப்பது குறித்து லட்சுமி மேனனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



