சப்தம் டீசர் வெளியானது

அறிவழகன் நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை இயக்கினார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.
சப்தம் டீசர் வெளியானது
Published on

2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு ஈரம் திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து அறிவழகன் நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை இயக்கினார்.

ஆதி தற்பொழுது மீண்டும் ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் ஆதி ஒரு மருத்துவ கல்லூரி ப்ரொஃபெசராக காணப்படுகிறார். அந்த கல்லூரியில் ஒரு அமானுஷ்ய சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. வெரும் சத்தத்தை வைத்தே திகிலாக காட்சிப் படுத்தியுள்ளன. சப்தம் திரைப்படம் இந்த கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com