'பிசாசு 2' ஆண்ட்ரியா நிர்வாணக் காட்சிகள் நீக்கம்.. மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு..

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2.இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிஷ்கின்
மிஷ்கின்
Published on

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ஆண்ட்ரியா

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிசாசு 2 திரைப்படம் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் 15 நிமிட நிர்வாணக் காட்சியால் குழந்தைகள் படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படம் ஆகஸ்ட்   31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com