என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிசாசு"

    • ‘பிசாசு-2' படம் சில ஆண்டுகளாகவே வெளிவராமல் முடங்கி கிடக்கிறது.
    • படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா, மிஷ்கின் இயக்கத்தில் நடித்து முடித்த 'பிசாசு-2' படம் சில ஆண்டுகளாகவே வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. ஆனாலும், 'பிசாசு-2' படத்தில் 'ஆண்ட்ரியா அப்படி நடித்துள்ளார், இப்படி நடித்துள்ளார்' என மிஷ்கின் தொடர்ந்து பேசி, படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம், 'பிசாசு-2' படம் எப்போது ரிலீசாகும்? என கேட்கப்பட்டது. இதற்கு, ''நடிக்க மட்டும்தான் முடியும். ரிலீசும் நானே செய்ய முடியுமா? நான் மட்டும் தயாரிப்பாளராக இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசாக்கி இருப்பேன். என்ன செய்ய...'' என்று வருத்தப்பட்டு கொண்டார்.

    முன்னதாக இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி சிலர் மின்விசிறியைத் திருப்ப, அவரது தலைமுடி காற்றில் பறந்தது. நிகழ்ச்சிக்காக கூந்தலை சீவி, சிங்காரித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இதனால் கடும் 'அப்செட்' ஆகி போனார். 'பேனை ஆப் பண்ணுங்க...' என்று அங்கிருப்பவர்களை கடிந்து கொண்டார். பின்னர் உதவியாளர் கலைந்த அவரது கூந்தலை சரிசெய்த பிறகே ஆசுவாசமானார்.

    பேய்,பிசாசு,பில்லி,சூனியம் தொடர்பான மூடநம்பிக்கைகளுக்கு 7 ஆண்டு தண்டனை விதிக்கும் அசாம் மாநில சட்டத்துக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். #Assamantiwitchhuntingbill
    கவுகாத்தி:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் பேய்,பிசாசு, பில்லி, சூனியத்தில் மக்களுக்கு உள்ள மூடநம்பிக்கை அதிகமாக உள்ளது. சூனியம் வைத்து பலர் கொல்லப்படுவதாகவும், சூனியம் வைத்து கொன்றதாக சில மந்திரவாதிகளை உள்ளூர் மக்கள் அடித்தும், எரித்தும் கொல்வதும் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வந்தது.

    இதன் விளைவாக கடந்த 2001-2017-ம் ஆண்டுகளுக்கு இடையில் 114 பெண்களும், 79 ஆண்களும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 202 வழக்குகளை அம்மாநில போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையில், பேய்,பிசாசு,பில்லி,சூனியம் தொடர்பாக  மந்திரவாதிகளின் செயல்களுக்கும் இது சம்பந்தமான கொலைகளுக்கும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்ட மசோதா 13-8-2015 அன்று அசாம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா கவர்னர் மூலம் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மூன்றாண்டுகளாக கிடப்பில் இருந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 13-6-2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Assamantiwitchhuntingbill
    ×