'மாமன்னன்' மாதிரி படம் பண்ணுங்க 'சைக்கோ' படம் மாதிரி பண்ணாதீங்க - உதயநிதிக்கு மிஷ்கின் அட்வைஸ்

மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இவ்விழாவில் திரைப்பிரலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
'மாமன்னன்' மாதிரி படம் பண்ணுங்க 'சைக்கோ' படம் மாதிரி பண்ணாதீங்க - உதயநிதிக்கு மிஷ்கின் அட்வைஸ்
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் கமல்ஹாசன், பா.இரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, "இரண்டு படத்துலேயே இருபது படத்துக்கானப் பேர வாங்கியிருக்கார் மாரி செல்வராஜ். எல்லாமே கேளிக்கை படம் இல்ல. வாழ்வின் வலியை உணர்ந்து எடுத்த படம். அவனுக்கு என் பாராட்டுகள். இளையராஜாவுக்குப் பிறகு ஜீனியஸ் ரகுமான் சார்.

அவர் ரொம்ப நாள் நல்லா வாழணும். நாகேஷ் சாருக்குப் பிறகு, உடல்மொழியில் மதுரை பார்மை கொண்டு வந்து உலகெங்கும் சேர்த்தவர் வடிவேல் சார் தான். உதய், நீங்க நல்லா வேலை பாருங்க. 40 நாள் ஷூட்டிங் போற மாதிரி ஒரு படம் பண்ணுங்க, 'மாமன்னன்' மாதிரி படம் பண்ணுங்க 'சைக்கோ' மாதிரி பண்ணாதீங்க!. உங்க அம்மாகிட்ட நான் பேசுறேன். வெகு சீக்கிரத்தில் நம்மை எல்லாம் பார்த்துக்கொள்ளப் போகிறார் உதய். நான் சொல்லுறது புரியும்னு நினைக்கிறேன்" என்று மிஷ்கின் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com