search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jawahirullah"

    • பாராளுமன்ற தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் அறப்போர்.
    • தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

    கேள்வி: ஒரு இடம் கூட கொடுக்காத போதும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது ஏன்?

    பதில்: இந்த பாராளுமன்ற தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் அறப்போர். எங்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காதது வருத்தம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதைவிட மிகப்பெரிய வலி என்னவென்றால் 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்தின் விழுமியங்கள், அரசியல் சாசனத்தின் அடிப்படைகள் மீறப்பட்டு பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகள் பாழ்படுத்தப்பட்டுள்ளன. தனிப்பட்ட பாதிப்பை விட நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற பொது நோக்கத்துக்காக இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

    கேள்வி: சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்று கூறும் உங்கள் கூட்டணி கட்சிகள் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லையே?

    பதில்: எங்கள் கூட்டணியில் முஸ்லிம் லீக் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். நிச்சயமாக இதைவிட அதிகமாக தர வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். அடுத்த முறை அதை எங்கள் கூட்டணி கட்சிகள் நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    கேள்வி: பா.ஜனதாவுடனான உறவை அ.தி.மு.க. துண்டித்துள்ளதால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளதா?

    பதில்: நிச்சயமாக பிரியாது. காரணம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது அ.தி.மு.க. அது குறித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்ட போது அன்றைய முதலமைச்சர் மறுத்து விட்டார். ஆட்சி மாறிய பிறகு கூட தி.மு.க. தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்த போது வெளிநடப்பு செய்து விட்டது அ.தி.மு.க.

    அது மட்டுமல்லாமல் கொரோனா காலக்கட்டத்தில் இங்கு வந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் சகோதரர்களை கொரோனாவை பரப்பினார்கள் என்பதற்காக சிறையில் அடைத்தது அ.தி.மு.க.அரசு. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குகளை போட்டது அ.தி.மு.க.அரசு. இப்படியாக பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். எனவே பா.ஜனதாவுடன் உறவு இல்லை என்று அ.தி.மு.க. சொல்வது தேர்தல், அரசியல் தந்திரமாகும். ஆகவே நிச்சயமாக சிறுபான்மையினர் வாக்குகள் பிரியாது. சிறுபான்மை மக்களின் நலனை காக்க கூடிய கூட்டணி இந்தியா கூட்டணியாகும். ஒட்டு மொத்தமாக சிறுபான்மையினர் இந்தியா கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்.


    கேள்வி:- பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து அடிக்கடி பிரசாரம் மேற்கொள்வது ஏன்?

    பதில்:-தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு பெரிய அலை வீசுகிறது. மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதெல்லாம் மோடி தமிழ்நாட்டை எட்டி கூட பார்க்கவில்லை. தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரண தொகைகளை தருவதற்கு எல்லாம் அவருக்கு மனம் வரவில்லை.இப்போது தேர்தலில் எப்படியாவது பா.ஜ.க .வை ஒரு இடத்திலாவது வெல்ல வைக்க முடியுமா என்பதற்கு அவர் பலமுறை வருகிறார். ஆனால் நிச்சயமாக தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.

    கேள்வி:- இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. எழுச்சி பெற வாய்ப்பு உள்ளதா?

    பதில்:-நிச்சயமாக எழுச்சி பெற வாய்ப்பு இல்லை. காரணம் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த கூட்டணியில் தான் இருக்கின்றன. எனவே தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெல்வது கடினம்.

    கேள்வி:- இந்தியா முழுவதிலும் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி வலுவாக இல்லையே?

    பதில்:- நிச்சயமாக அது ஒரு தவறான கருத்து. இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட இந்தியாவிலும் வலுவாக இருக்கிறது. இன்றைக்கு வரக் கூடிய பல்வேறு செய்திகள் வட இந்தியாவிலும் மோடிக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசுகிறது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவான ஒரு அலை வீசுகிறது என்பதுதான் யதார்த்தமான உண்மையாக இருக்கின்றது. எனவே இந்தியா கூட்டணி வட இந்தியாவிலும் சிறப்பான வெற்றியை பெறும்.

    கேள்வி:- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி உங்கள் கருத்து?

    பதில்:-மிக சிறப்பான ஒரு தேர்தல் அறிக்கையாகும். பலதரப்பட்ட மக்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றக்கூடிய தேர்தல் அறிக்கை. மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ. 1 லட்சம் தரப்படும், பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்த மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக ரூ. 1 லட்சம் தரப்படும் உள்ளிட்ட மிகவும் அற்புதமான அறிவிப்புகள். இதே போல மோடி அரசு நிறுத்திய கல்வி உதவித் தொகை எல்லாம் வழங்கப்படும். இப்படியான சிறந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உண்மையிலேயே இந்த தேர்தலின் கதாநாயகனாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்து இருக்கிறது.

    பா.ஜனதா கடந்த 2 தேர்தல்களில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார்கள். இது பற்றி கேட்ட போது தேர்தல் நேரத்தில் நாங்கள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா? அது தேர்தலுக்காக சொல்லப்பட்டது என்றனர்.

    கேள்வி:-ராகுல் காந்தி தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டுமே பிரசாரம் செய்துள்ளாரே?

    பதில்:-ஒருமுறை தான் வந்தார். ஆனால் அந்த ஒரு முறையில் அவர் நடந்து கொண்ட விதம் குறிப்பாக கோவையில் வாகனத்தில் போகும் போது இறங்கி இனிப்பு கடைக்கு சென்று இனிப்பை வாங்கி அதற்குரிய தொகையை கொடுத்து விட்டு தேர்தல் பரப்புரை மேடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனது மூத்த சகோதரர் என்று சொல்லி அவரிடம் அந்த சுவீட்டை கொடுத்த அந்த காட்சி மூலமாக தமிழக மக்களுடைய உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டு விட்டார் ராகுல்காந்தி. நிச்சயமாக அவருடைய நடத்தை, பேச்சு தமிழ்நாட்டு மக்களை கவர்ந்து இருக்கிறது. ராகுல்காந்தி மிக சிறப்பான தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார்.

    கேள்வி:-2019 தேர்தலுக்கும், தற்போதைய தேர்தலுக்கும் என்ன மாற்றம் இருக்கிறது?

    பதில்:-2019 தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜனதா கூட்டணியில் இருந்தது. தற்போது அ.தி.மு.க. தனியாகவும், பா.ஜ.க. தனியாகவும் போட்டியிடுகின்றன. எனவே தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் எல்லாம் 3 முனைகளில் பிரிகிறது. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. மிக எளிதாக 40 தொகுதிகளில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் வெற்றி பெறும்.

    கேள்வி:- பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ள உங்களுக்கு கள நிலவரம் என்ன சொல்கிறது?

    பதில்:-நான் செல்லக் கூடிய இடங்களில் எல்லாம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு இருக்கிறது. எனக்கும் உற்சாகமான வரவேற்பை மக்கள் தருகிறார்கள். மக்களின் ஆதரவு அலை இந்தியா கூட்டணி பக்கம் வீசுகிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக இந்த பரப்புரை அமைந்துள்ளது.

    இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

    • இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி மேலும் முயற்சி செய்ய வேண்டும்.
    • தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது.

    கோவை:

    கோவை குனியமுத்தூரில் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்தது.

    பின்னர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி சார்பில் பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தி பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர்.

    இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி மேலும் முயற்சி செய்ய வேண்டும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    2019 பாராளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்தது. ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடக் கூடிய வாய்ப்பை தரக்கோரி தி.மு.க.விடம் கோரிக்கை வைக்க நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

    நீண்ட காலமாக ஜெயிலில் உள்ள 49 பேரில் 20 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு தமிழக அரசு கடந்த ஆகஸ்டு 24-ந் தேதியே பரிந்துரைத்தது. ஆனால் 3 மாதங்களை கடந்தும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே கவர்னர் மீது தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதன் முதல்கட்ட விசாரணையின் போது சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், கவர்னர்களுக்கு பல்வேறு செய்திகளை எடுத்துரைத்திருக்கிறார்கள். தி.மு.க. அரசு சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு வகையான நன்மைகள் செய்வதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    வழிபாட்டு தலங்களை பாதுகாக்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் டிசம்பர் 6-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாறிவிட்டார்கள் என்று சீமான் பேசியுள்ளார்.
    • தாய் மதத்திற்கு திரும்புங்கள் என சங்பரிவார் தொண்டர் போல் பேசியவர் சீமான்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் பொழுது கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இழிவாகப் பேசியிருப்பதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மீது அமிலம் வீசுமாறு வன்முறையை தூண்டும் வகையில் உரையாற்றியிருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தொடர்ந்து வாக்களித்து வருவதால் "முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாறிவிட்டார்கள்" என்று சீமான் பேசியுள்ளார். இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    முன்பு தாய் மதத்திற்கு திரும்புங்கள் என சங்பரிவார் தொண்டர் போல் பேசியவர் சீமான். தற்போதைய அவரது சிறுபான்மை வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். இத்தகைய வேடதாரிகளிடம் தமிழக மக்கள் எச்சரிகையாகவே இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடந்த தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி அளித்தது.
    • தமிழக அரசு தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

    11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் இதற்காக இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

    கடந்த 11 ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.10000 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தமிழகத்தில் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி அளித்தது. அதனை பின்பற்றி தமிழக அரசு தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அவர்களின் கோரிக்கை மிக நியாயமானது. அத்தோடு மட்டுமல்லாமல் மே மாதங்களில் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே குறைந்த ஊதியத்தால் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கும் அவர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படாததால் மிகுந்த சிரமத்திற்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவார்கள் என்கிற நம்பிக்கை வீண் போகாத வண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    வீட்டு வாடகை, மின்சார கட்டணம், மருத்துவ செலவு உணவு பொருட்கள் போன்றவற்றிற்கான பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய முடியாத அவல நிலையில் இருக்கும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும். அவர்களின் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமூக நீதிக் கொள்கையினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது.
    • தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராகவே செயல்படுகிறார்.

    பாபநாசம்:

    பாபநாசத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

    திராவிட இயக்க ஆட்சிகளால் தமிழ்நாடு ஏமாற்றப்பட்டிருப்பதாக சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை விட இந்தியாவில் அதிக அளவில் கல்வி கற்றவர்கள் அதிகம் உள்ள பகுதியாகவும் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆண்ட கேரளாவிலும் கல்வி வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

    தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமூக நீதிக் கொள்கையினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராகவே செயல்படுகிறார். கவர்னர் மாளிகையை துஷ்பிரயோகம் செய்கிறார்.

    சென்னையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நடந்து கொண்ட முறை கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது.
    • இந்தியாவின் ஒட்டுமொத்த ஆன்லைன் சூதாட்ட வருமானத்தில் குறைந்தது 20 சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து பெறப்படுவதாகவும் தெரிகிறது.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது. பலரும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

    மனிதநேய மக்கள் கட்சியும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய வேண்டுமென வலுவாக கோரிக்கைகளை வைத்தது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க குழு ஒன்றை அமைத்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானம் ரூ.10,100 கோடி. நடப்பாண்டில் இது ரூ.15,400 கோடியாக அதிகரிக்கும் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    இந்தியாவின் ஒட்டுமொத்த ஆன்லைன் சூதாட்ட வருமானத்தில் குறைந்தது 20 சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து பெறப்படுவதாகவும் தெரிகிறது.

    2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 60-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். அதன்பின் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் இயற்றப்பட்டதால் 10 மாதங்கள் தற்கொலைகள் எதுவும் நிகழவில்லை.

    ஆனால் நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதித்த தடை செல்லாது என்று அறிவித்ததற்குப் பிறகு தொடர்ச்சியாக 10 மாதங்களில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து இரண்டு வார காலத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது தமிழக மக்களின் நலனில் அக்கறைக்கொண்டு எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    லோக் ஆயுக்தாவில் விசாரணை வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். #jawahirullah #Lokayukta

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த அமைப்பிற்கான சட்டவிதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது, அந்த விதிகளில் குறிப்பிட்ட சில விதிமுறைகள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. அதில் “லோக் ஆயுக்தா அமைப்பின் விசாரணைகள் ரகசியமாக நடைபெறும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் மீது நடத்தப்படும் ஊழல் விசாரணைகளையும், நடவடிக்கைகளையும் ரகசியமாக வைத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாது. இதுபோன்ற நடவடிக்கைகளால் குற்றவாளிகள் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்படாமல் இருந்தால் அவர்கள் மீண்டும் அதே குற்றத்தைச் செய்யத் தூண்டுதலாக இருக்கும்.

    நீதியியல் நிர்வாகத்தில் அனைத்தும் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பது அடிப்படைக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை மீறி தமிழக அரசின் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பட உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது.

    புகார் அளித்தவர் தமது விவரங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரினால் அதில் ரகசியம் பாதுகாக்கலாமே தவிர, தமிழக அரசே முன்வந்து லோக் ஆயுக்தா புகார்தாரர், மற்றும் அவரால் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆகியோரின் விவரங்கள் உள்ளிட்டவற்றை ரகசியமாக வைப்பது இந்த லோக் ஆயுக்தா அமைப்பை பலவீனப்படுத்தும் சூழல் உருவாகும்.

    எனவே, தமிழக அரசின் இந்த ரகசிய விசாரணை என்ற விதிமுறையை உடனே மாற்றி, விரைவில் லோக் ஆயுக்தா அமைப்பைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #jawahirullah #Lokayukta 

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். #DMK #Jawahirullah
    திருச்சி:

    மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் நாளை அரசமைப்பு சட்ட மாநாடு நடக்கிறது. மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட திருச்சி வந்த அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

    தமிழக அரசானது 2 முறை சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றியும் அதனை கிடப்பில் வைத்துள்ளது. மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    எனவே மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டும் வகையில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டை திருச்சியில் நாளை நடத்தவுள்ளோம். மாநாட்டில் மும்மத தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

    மத்திய அரசுக்கு இந்த மாநாடு ரெட் அலர்ட் ஆக அமையும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியின் வெற்றிக்கு பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK  #Jawahirullah
    சிறையில் உள்ள திருமுருகன் காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. #ThirumuruganGandhi
    ராமநாதபுரம்:

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பற்றி ஐ.நா. சபையில் பேசியதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளது.

    தனியறையில் அடக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி அந்த அறையை விட்டால், வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவருக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை, இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

    இது அப்பட்டமான மனித உரிமை மீறிய செயலாகும். காவல்துறையின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் திருமுருகன் காந்தியை மன ரீதியாக பலவீனமாக்கி விடலாம் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும் என்பதை மத்திய- மாநில அரசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார். #ThirumuruganGandhi
    பெண் பத்திரிகையாளரை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன்? என்று ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கல்ப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக புதிய ஆம்புலன்சு வேன் வழங்கும் நிகழ்ச்சி கல்ப்பாக்கத்தில் நடைபெற்றது.

    இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக வலைதளத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையை விமர்சித்த பெண்ணை காவல்துறையினர் சைபர் கிரைம் மூலம் உடனடியாக கைது செய்துள்ளனர்.

    ஆனால் பெண் பத்திரிகையாளரை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன்? அவர் மைலாப்பூர் பகுதி கடைகளுக்கு துணிச்சலாக போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்று வருவது போலீசுக்கு தெரியவில்லையா?.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    கர்நாடக தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 91 நாளாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பொதுமக்களின் போராட்டத்தை கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வரும் 22-ந்தேதி தூத்துக்குடியில் அனைத்து மக்களும் இணைந்து முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு நாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்வோம்.

    கூடங்குளத்தில் அணு உலை கழிவுகள் வளாகத்திலேயே கொட்டப்படுவதாக தெரிவித்துள்ளனர். இது தென்மாவட்டங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து மக்களை பாதுகாக்க அணு உலையில் மின்சார உற்பத்தியை நிறுத்த வேண்டும். கர்நாடக தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழகத்திற்கு நன்மை கிடைக்காது என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×