search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: ஜவாஹிருல்லா
    X

    40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: ஜவாஹிருல்லா

    • இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி மேலும் முயற்சி செய்ய வேண்டும்.
    • தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது.

    கோவை:

    கோவை குனியமுத்தூரில் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்தது.

    பின்னர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி சார்பில் பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தி பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர்.

    இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி மேலும் முயற்சி செய்ய வேண்டும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    2019 பாராளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்தது. ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடக் கூடிய வாய்ப்பை தரக்கோரி தி.மு.க.விடம் கோரிக்கை வைக்க நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

    நீண்ட காலமாக ஜெயிலில் உள்ள 49 பேரில் 20 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு தமிழக அரசு கடந்த ஆகஸ்டு 24-ந் தேதியே பரிந்துரைத்தது. ஆனால் 3 மாதங்களை கடந்தும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே கவர்னர் மீது தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதன் முதல்கட்ட விசாரணையின் போது சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், கவர்னர்களுக்கு பல்வேறு செய்திகளை எடுத்துரைத்திருக்கிறார்கள். தி.மு.க. அரசு சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு வகையான நன்மைகள் செய்வதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    வழிபாட்டு தலங்களை பாதுகாக்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் டிசம்பர் 6-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×