என் மலர்

  நீங்கள் தேடியது "thirumurugan gandhi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.
  • டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

  சென்னை :

  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன.

  இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டுவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

  கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.

  டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.#May17movement #ThirumuruganGandhi
  சென்னை:

  சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம் எனும் சமூக அமைப்பினை துவக்கினார். இந்த இயக்கத்தினை தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உருவாக்கினார்.  இது தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியீடாக வைத்து தமிழர் உரிமைகளைச் சார்ந்து இயங்கும் சமூக அமைப்பாகும்.  இந்த அமைப்பின் தலைவரும் , ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், அவரது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் உரையாற்றிய திருமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவறான செய்திகளை பரப்பியதாகவும், பொது மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  மே 17 இயக்கத்தின் இதர ஆதரவாளர்கள் பெரியசாமி, அருள் முருகன், டைசன் ஆகியோரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #May17movement #ThirumuruganGandhi 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
  மதுரை:

  மதுரையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

  தேர்தலில் வெற்றி பெறவே உயர் சாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை மோடி அரசு செயல்படுத்த நினைக்கிறது. அதை கண்டித்து வருகிற 27-ந்தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட உள்ளோம். மதுரையில் மேம்படுத்தப்பட உள்ள பெரியார் பஸ் நிலையத்தில் பெரியார் சிலையை வைக்க வேண்டும். மோடிக்கு எதிரான அலை தமிழகத்தில் உள்ளது.

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராத பிரதமர், மக்களால் எதிர்ப்பு வரும் என்பதால் அரசு விழாவை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகின்றார்.

  இவ்வாறு அவர் பேசினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாட்டில் ஜாதிய ஆணவப்படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என திருமுருகன் காந்தி கூறியுள்ளார். #ThirumuruganGandhi #May17
  நெல்லை:

  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  ராஜீவ்காந்தி கொலையில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பியுள்ளது. ஆனால் கவர்னர் அதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.

  மாநிலங்களுக்கு கவர்னர் பதவி தேவையில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை கொண்டு வரவேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு முறையான உதவி செய்யவில்லை. மத்திய அரசிடம் இழப்பீட்டு தொகையை குறைவாக கேட்டுள்ளது.

  மேலும் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் ஒரு தென்னைக்கு ரூ.50 ஆயிரம் நிதி கணக்கிட்டு கொடுக்கப்போவதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி கணக்கிட்டால் கஜா புயலில் முறிந்து விழுந்த தென்னை மரங்களுக்கு மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். தோராயமாக டெல்டா மாவட்டங்கள் ரூ.80 ஆயிரம் கோடிக்கு சேதமடைந்துள்ளது. எனவே மாநில அரசு மத்திய அரசிடம் கூடுதலாக நிதி கேட்கவேண்டும்.

  தமிழ்நாட்டில் ஜாதிய ஆணவப்படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே போலீசார் செயல்பட்டு வருகின்றனர். அங்கு ஆலைக்கு எதிராக போராடுபவர்களுக்கு தங்கும் விடுதி அறைகள் கொடுக்கக்கூடாது என போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  எங்கள் அமைப்பு சார்பாக எந்த போராட்டம் நடைபெற்றாலும் அதற்கு போலீசார் அனுமதி கொடுப்பதில்லை. நீதிமன்ற அனுமதி பெற்றே பொதுகூட்டம் உள்ளிட்ட அனைத்தும் நடக்கிறது.

  தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. சொல்படியே செயல்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் பா.ஜ.க. தோல்விகளுக்கு பிறகாவது தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். இல்லையெனில் தேர்தலில் மிக மோசமான நிலையை அடையும்.

  மேகதாது அணை பிரச்சினையில் மத்திய பா.ஜ.க. அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் தமிழகத்திற்கு எதிரான நிலையை எடுத்து வருகிறார்கள். காவிரி படுகையில் மீத்தேன் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுப்பதற்காக காவிரி பாசன பகுதியை மத்திய அரசு வேண்டும் என்றே வறண்ட பூமியாக்க முயற்சிக்கிறது.

  இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி திருச்சியில் பெரியார் நினைவு தின கருப்பு சட்டை பேரணி நடத்த இருக்கிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின் போது நிர்வாகி புருஷோத்தமன் உடனிருந்தார். #ThirumuruganGandhi #May17
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேற்கொள்ள தி.மு.க. மற்றும் தமிழ் தேசிய கட்சிகள் எதிர்ப்பது சரியல்ல என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார். #BJP #HRaja #HydroCarbon
  மன்னார்குடி:

  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன் ஆகியோர் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பூத்கமிட்டி அமைக்கும் பணி ஆலோசனை வழங்கினர். இன்று 2-வது நாளாக ஒரத்தநாடு தொகுதியில் ஆய்வு நடத்தினர். பின்னர் இருவரும் மன்னார்குடிக்கு வந்தனர்.

  அப்போது பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  பிரதமரின் தனிநபர் கழிவறை, இலவச கேஸ் இணைப்பு, இலவச வீடு கட்டும் திட்டம், பயிர்கடன் திட்டம், மருத்துவ காப்பீடு ஆகிய திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 மத்திய அரசு குறைத்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் குறைக்கவேண்டும்.

  இந்து கோவில்களின் வருமானத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லை. வருமானத்தில் 18 சதவீதம் தான் தொகுப்பூதியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி தொகையை வருமானமில்லாத நலிவுற்ற கோவில்களின் வளர்ச்சிக்காக செலவிடவேண்டும்.

  தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேற்கொள்ள தி.மு.க. மற்றும் தமிழ் தேசிய கட்சிகள் எதிர்ப்பது சரியல்ல. ஹைட்ரோ கார்பன் எடுக்க டி.போர்வெல் என்ற முறையில் எடுக்க அனுமதித்துள்ளது. இதனால் நிலத்தடிநீர் குறைவதற்கோ, விவசாயம் பாதிக்கும் என்றோ அச்சப்பட தேவையில்லை.திருமுருகன் காந்தியை ஸ்டாலின் சந்தித்தது சரியல்ல.

  இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja #HydroCarbon
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். #MKStalin #ThirumuruganGandhi
  சென்னை:

  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர் உடல் நலக்குறைவால் சென்னை அஸ்வினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இந்நிலையில் தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், திருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். #MKStalin #ThirumuruganGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறையில் உள்ள திருமுருகன் காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. #ThirumuruganGandhi
  ராமநாதபுரம்:

  மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பற்றி ஐ.நா. சபையில் பேசியதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளது.

  தனியறையில் அடக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி அந்த அறையை விட்டால், வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவருக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை, இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

  இது அப்பட்டமான மனித உரிமை மீறிய செயலாகும். காவல்துறையின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

  மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் திருமுருகன் காந்தியை மன ரீதியாக பலவீனமாக்கி விடலாம் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும் என்பதை மத்திய- மாநில அரசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார். #ThirumuruganGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #ThirumuruganGandhi
  வேலூர்:

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் பேசினார்.

  பின்னர், நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

  வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது உணவு குழாயில் பிரச்சனை இருப்பது தெரிந்தது.

  இதையடுத்து, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  நேற்று திருமுருகன் காந்தியின் தந்தை, சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தித்து பார்த்தனர். மேலும் தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் சந்தித்து நலம் விசாரித்தார்.

  தொடர்ந்து டாக்டர்கள் திருமுருகன் காந்தி உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். #ThirumuruganGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்திக்கு 2-வது நாளாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #thirumurugangandhi #thoothukudisterlite

  வேலூர்:

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் பேசினார்.

  பின்னர், நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

  வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது உணவு குழாயில் பிரச்சினை இருப்பது தெரிந்தது.

  இதையடுத்து, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

  ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 2-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது வயிற்றில் புண் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையடுத்து, திருமுருகன் காந்தி உடல்நிலையை மருத்துவ குழுவினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். #thirumurugangandhi #thoothukudisterlite

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறையில் இருக்கும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் கொடூரமான முறையில் நடந்துவரும் காவல்துறைக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
  சென்னை:

  மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி ஐ.நா. சபையில் பேசியதற்காக, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளது.

  திருமுருகன் காந்தியை சிறையில் அடைத்தது முதல் இன்று வரை தமிழக காவல்துறையும், சிறைத்துறையும் அவரை மிகவும் கொடூரமான முறையில் நடத்தி வருகிறது. சிறையில் பாம்புகள், புழுப் பூச்சிகள் நிறைந்த பாழடைந்த தனியறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  அவர் அந்த அறையை விட்டால், வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவருக்குச் சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை, இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

  மருத்துவமனையில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்நோயாளியாக சிகிச்சைப் பெறவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய பின்பும், அதற்கு அனுமதியளிக்க முடியாது எனக் காவல்துறை மறுத்துள்ளது அப்பட்டமான மனிதஉரிமை மீறிய செயலாகும். காவல் துறையின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

  திருமுருகன் காந்தி உடல்நிலை இருக்கும் நிலையில் சிகிச்சை அளிக்காமல் தன்னால் அனுப்ப இயலாது என்று மருத்துவர் தெரிவித்த பின்பு தற்போது அடுக்கம்பாறை மருத்துவமனையின் ஐ.எம்.சி.யூ. எனும் வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  திருமுருகன் காந்தியை உடல் ரீதியாகப் பலவீனமாக்கி அவரது குரல்வலையை நெரித்துவிடலாம் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo