திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட் உத்தரவு

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on

சென்னை:

சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலன் மாயமானது விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி போராட்டம் நடத்தினார்.

பின்னர் ஏப்ரல் மாதம் காவிரி பிரச்சனைக்காக போராட்டம் நடத்தினார். மே மாதம் இலங்கை தமிழர்கள் படுகொலை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார்.

இதுபோல பல்வேறு காரணங்களுக்காக பல போராட்டங்களை நடத்தினார். அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் திருமுருகன் காந்தி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஆனந்த வெங்கடேஷ், மனுதாரர் மீதான வழக்குகளை எல்லாம் ரத்து செய்ய முடியாது. அனைத்து வழக்குகளையும் அவர் எதிர் கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com