'இங்க நான் தான் கிங்கு படத்தின்' புதிய அப்டேட்

இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான் தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.
'இங்க நான் தான் கிங்கு படத்தின்' புதிய அப்டேட்
Published on

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான் தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. முதலில் படம் வரும் மே மாதம் 10 ஆம் தேதி வெளியாக போவதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் படம் தற்பொழுது மே 17 ஆம் தேதி வெளியாகும் என வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாடலான மாலு மாலு என்ற பாடல் இன்று மதிய வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com