search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malayalam movie"

    • படத்தின் கதைக்கு ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
    • திரைப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை நடிகர் மம்முட்டி சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    பிரபல மலையாள திரைப்பட நடிகர் மம்முட்டி நடித்த 'புழு'என்ற திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகியது. ரதீனா என்பவர் இயக்கிய இந்த மலையாள திரைப்படத்திற்கு மம்முட்டியின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தின் கதைக்கு ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த திரைப்படம் பிராமணர்களுக்கு எதிரானது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து மம்முட்டிக்கு எதிர்ப்பு தெரவித்தும், ஆதரித்தும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர். அந்த திரைப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை நடிகர் மம்முட்டி சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மம்முட்டிக்கு முதன்முதலாக ஆதரவு தெரிவித்தவர் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சின்குட்டி. அவர் தனது முகநூல் பக்கத்தில், 'நடிகர் மம்முட்டி கேரளாவின் பெருமை' என்று குறிப்பிட்டு, மூத்த நடிகர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.

    அதேபோன்று மந்திரி ஏ.கே.ராஜன் தனது முகநூல் பக்கத்தில், 'நடிகர் மம்முட்டியை முகமது குட்டி என்றும், நடிகர் கமலை கமாலுதீன் என்றும், நடிகர் விஜய்யை விஜய் ஜோசப் என்றும் அழைக்கிறார்கள். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் இங்குள்ள நிலைமை வேறு. இதுபோன்ற வெறுப்பு அரசியலுக்கு கேரளாவில் இடமில்லை' என்று தெரிவித்திருக்கிறார்.

    இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் மம்முட்டிக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • படமானது வரும் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
    • கவுதம் வாசுதேன் மேனன் முதல் முறையாக மலையாளத்தில் படத்தை இயக்குவது என்று தீர்மானித்துள்ளார்.

    மம்முட்டி தற்போது வைசாக் இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி நகைச்சுவை படமான டர்போவில் நடித்துள்ளார். மம்முட்டி கம்பனி பேனரால் தயாரிக்கப்படும் டர்போ படத்தை துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் பிலிம்ஸ் விநியோகம் செய்கிறது.


    டர்போ படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள நிலையில், படமானது வரும் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார் மம்முட்டி. ஆனால், இந்த படத்தை இயக்கப்போவது மலையாள இயக்குநர்கள் இல்லை. தமிழ் திரையுலகில் பிரபலமான பல்வேறு வெற்றி படங்களை அளித்துள்ள கவுதம் வாசுதேன் மேனன் முதல் முறையாக மலையாளத்தில் படத்தை இயக்குவது என்று தீர்மானித்துள்ளார்.


    அதன்படி, மம்முட்டியை ஹீரோவாக வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார் கவுதம் மேனன். இதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து படத்தை மம்முட்டியே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படமான துருவ நட்சத்திரம் வெளியீட்டிற்காக காத்துக்கிடக்கிறது.

    • ஜித்து மாதவன் இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது ஆவேஷம் திரைப்படம்.
    • உலகளவில் இதுவரை 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜித்து மாதவன் இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது ஆவேஷம் திரைப்படம். பகத் பாசில் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களாகும் கொண்டாடப்பட்டது. படம் உலகளவில் இதுவரை 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பகத் பாசிலுடன் ஹிப்ஸ்டர், ரோஷன் ஷனவாஸ், மித்துன் ஜெய் சங்கர், சஜின் கோபு , மன்சுர் அலிகான் ஆகியோர் நடித்து இருந்தனர். படத்தின் பாடலான இலுமினாட்டி பாடல் இணைய தளத்தில் வைரலாகியது. பின் பகத் பாசில் படத்தில் செய்த ரீல் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் உள்ளது. படத்தின் பகத் பாசிலின் 'எடா மோனே' வசனம் மிகவும் பிரபலமானது.

    சமீபத்தில் திரைப்பிரபலமான சமந்தா , சைத்திரா மற்றும் பலர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தனர். அதைத் தொடர்ந்து நயன்தாரா இப்படத்தை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் இந்தாண்டுக்கான சிறந்த படமாக ஆவேஷம் அமையும், ஜித்து மாதவனின் இயக்கம் கமர்சியல் படங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும், ஃபாஃபா - தி சூப்பர் ஸ்டார், வாட் எ கில்லர் பெர்ஃபாமன்ஸ், கேங்க்ஸ்டர் சாகா  மாஸ்ஸென பகத் பாசிலின் நடிப்பை பாராட்டியுள்ளார்.

    அதைத்தொடர்ந்து படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என அனைவரையும் பாராட்டியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை ஷோபனா "நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
    • மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும்

    1980 - ம் ஆண்டு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷோபனா. 1984-ம் ஆண்டு மலையாளத்திலும் அறிமுகமானார்.

    'தளபதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஷோபனா பிரபலமானார். அதன் பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி உள்பட ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடைசியாக 'கோச்சடையான்' படத்தில் நடித்தார்.

    இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக ஷோபனா இணைய தளத்தில் தற்போது அறிவித்துள்ளார். இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும்





    இப்படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார்.இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல் -360 'என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.மேலும், மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    மேலும் நடிகை ஷோபனா "நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்க உள்ளேன். இப் படத்தை தருண் மூர்த்தி இயக்குகிறார். இந்த படத்திற்கு ஹீரோ மோகன்லால் சார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்" என  கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல இயக்குனர் விபின் தாஸ், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்.
    • எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்.

    இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். குஷி, வாலி உள்ளிட்ட படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

    படங்களை இயக்கி வந்த எஸ்.ஜே.சூர்யா, பிறகு, அவர் இயக்கும் படங்களில் அவரே நடித்தும் வந்தார். சமீப காலமாக, பிற இயக்குனர்களின் இயக்கத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

    அந்த வகையில், ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்கள் எஸ்.ஜே.சூர்யாவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. 

    தமிழ் திரைத்துறையைத் தொடர்ந்து, நடிகர் நானியின் 31வது படமான 'அடடே சுந்தரா' என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் நுழைகிறார் எஸ்.ஜே.சூர்யா. தெலுங்கு தொடர்ந்து மலையாளத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடிகராக அறிமுகம் ஆகிறார்.

    பிரபல இயக்குனர் விபின் தாஸ், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக இயக்குனர் விபின் தாஸ் ஐதராபாத்தில் எஸ்.ஜே. சூர்யாவை சந்தித்து படம் குறித்து பேசியுள்ளார். மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் தற்போது வெளியாகவில்லை.

    • ஆடு ஜீவிதம் படம் மலையாள சினிமாவில் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படமாகும்.
    • முதல் நாளிலயே இந்தியளவில் 7.5 கோடி வசூலித்துள்ளது.

    இயக்குனர் பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாக்கியது. படத்தை பார்த்துவிட்டு திரைப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

    பிருத்விராஜ் இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார். ஆடு ஜீவிதம் படம் மலையாள சினிமாவில் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படமாகும். இதற்கெல்லாம் சேர்த்து பலனாக படத்தின் வெற்றி உச்சத்திற்கு சென்றிருக்கிறது.

    படம் வெளியாகி முதல் நாளிலயே இந்தியளவில் 7.5 கோடி வசூலித்துள்ளது. மலையாளத் திரையுலகில் இதுவரை அதிகமாக வசூலித்த படங்களின் பட்டியலில் 6 வது இடத்தை பெற்று இருக்கிறது ஆடு ஜீவிதம்.

    இந்நிலையில், ஆடு ஜீவிதம் வெளியாகி 9 நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

    இதனால், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    • பல்வேறு மாநில திரையரங்குகளிலும் இப்படம் நன்றாக ஓடி ரூ. 200 கோடிக்கும் அதிக வசூலை குவித்துள்ளது.
    • இப்படம் ஏப்ரல் 6 ஆம் தேதி தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.

    சமீப காலமாக எங்கு திரும்பினாலும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டிரெண்ட் ஆக இருந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் "கண்மனி அன்போடு காதலன்" ஆடியோ ரீல்ஸ்-ஐ ஆக்கிரமித்துள்ளது. இப்படத்தின் எதிர்வினையாக கொடைக்கானலுக்கு இளைஞர்கள் படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    கொடைக்கானல் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ''மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற படம் மலையாள மொழியில் வெளியானது. மக்களிடையே கொண்டாடப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் கேரளாவைவிட தமிழக மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டது.

    இப்படத்தை இயக்குநர் சிதம்பரம் இயக்கினார். பல்வேறு மாநில திரையரங்குகளிலும் இப்படம் நன்றாக ஓடி ரூ. 200 கோடிக்கும் அதிக வசூலை குவித்துள்ளது. பல திரைப்பிரபலங்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து பாராட்டினர்.

    இந்திய திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். இந்நிலையில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இப்பொழுது தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியாகவுள்ளது.

    இப்படத்தின் தெலுங்கு டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளனர். இப்படம் ஏப்ரல் 6 ஆம் தேதி தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது. எப்படி தமிழ் மக்களாலும், மலையாள மக்களாலும் கொண்டாடப்பட்டதோ, தெலுங்கு மொழியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மட்டும் 110 கோடி வசூலித்துள்ளது.
    • தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

    இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், உலகளவு வசூலில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

    மலையாள சினிமா திரையுலகில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்துள்ளது. படம் வெளிவந்து ஒரு மாதம் ஆன நிலையில் இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

    இந்தியா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மட்டும் 110 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

    2005-ல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது.

    இந்த படம் மலையாளம், தமிழில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், வரும் ஏப்ரல் 6ம் தேதி தெலுங்கு மொழியில் இப்படம் வெளியாக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர்
    • OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது

    ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் 'பிரேமலு'. காதல்,காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

    இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

    தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இன்று வெளியாகியுள்ளது பிரேமலு படம். இந்நிலையில் உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது. மலையாளத்தில் குறும்படமாக வெளியான 'யூத்புல் லவ் ஸ்டோரி,' தற்போது தெலுங்கிலும் 'டப்' செய்யப்பட்டு மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. 




     

    இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர். இதன் மூலம் பிரேமலு படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் செய்து வருகிறது. நாயகி மமிதா பைஜு தற்போது பேசும் பொருளாகி விட்டார். 

    இத்தனை அம்சங்களுடன் 'பிரேமலு' படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராக உள்ளது. பிரபல OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. மார்ச் 29-ந் தேதி முதல் OTT-யில்  இப்படம் வெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

     

    • மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது
    • நடிகர் லால் தமிழில் சண்டைக்கோழி, கர்ணன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்

    மலையாளத்தில் அண்மையில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றுள்ளது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் பிரபல நடிகர் லாலின் மகன் நடித்துள்ளார் என்கிற தகவல் வெளிவந்துள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் நண்பர்களின் குழுவில், சிஜு என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் லாலின் மகன் ஜீன் பால் லால் நடித்திருக்கிறார். ஜீன் பால் லால் இதுவரை தாடியுடன் தான் படங்களில் நடித்துள்ளார். மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்காக அவர் தாடியை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     அது மட்டுமில்லாமல், அந்த நண்பர்களின் குழுவில் சிக்சன் என்கிற பாத்திரத்தில் நடித்த நபர் லாலின் மருமகன் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது.

    மலையாளத்தில் பிரபல நடிகராக உள்ள லால் தமிழிலும் சண்டைக்கோழி, கர்ணன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    • கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
    • நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும்.

    அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை.

    மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய பிரச்சனைகளையும் அதிகமாக பேசக்கூடியவை.

    பெரும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் பிற மொழி பல படங்களுக்கு போட்டி போடும் அளவில் எளிமையான படங்களை முந்நிறுத்தி வசூல்களை அள்ளும் திறன் கொண்டது மலையாள சினிமா. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகிய பிரமயுகம்,மஞ்சும்மல் பாய்ஸ். ப்ரேமலு போன்ற படங்களே சாட்சி.

    இப்போது அதற்கு மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக கேரளா அரசாங்கம் ஒரு முயற்சி எடுத்துள்ளது.கேரளா அரசாங்கம் இந்தியாவில் முதன் அரசாங்கத்திற்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்க உள்ளது.இதுவரை ஓடிடி தளங்கள் என்றால் பெருன்பான்மையாக இருப்பது அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்லிக்ஸ், zee 5,ஹாட் ஸ்டார்.ஆஹா போன்றவைகள்தான் .

    கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

    நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் உருவாக்கிய நோக்கத்தைப் பற்றி செய்தியாளர்களிடம்"சிஸ்பேஸ் OTT துறையில் வளர்ந்து வரும் ஏற்றதாழ்வுகள் மற்றும் உள்ளடக்கத் தேர்வு மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் பலதரப்பட்ட சவால்களுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்" என்று கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவருமான ஷாஜி என் கருண் கூறினார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் KSFDC என்ற மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்க படும் எனவும்,மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும்,இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை 60 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

    • இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

    பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில், நைட் ஷிஃப்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியானது பிரமயுகம் திரைப்படம்.

    இத்திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பு மிகவும் அபாரமாக இருக்கிறது என்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். படத்தின் ஒளிப்பதிவும், காட்சி அமைப்பும், ஒலி வடிவமும் இத்திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதுவரை உலகளவில் 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளது பிரமயுகம்.

    கடந்த பல ஆண்டுகளாக நாம் திரைப்படங்களை முழு நீள வண்ண திரைபடங்களாவே பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திரையரங்குகளில் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் இப்பொழுது வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

    ×