என் மலர்
நீங்கள் தேடியது "Tollywood"
தமிழில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், முதல்முறையாக புதிய படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆக இருக்கிறார். #Varalakshmi
கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது பயணத்தை மாற்றி வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.
இவரது நடிப்பில் தற்போது ‘வெல்வெட் நகரம், கன்னிராசி, நீயா 2, காட்டேரி, ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்நிலையில், முதல் முறையாக தெலுங்கு படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

சந்தீப் கிஷன், ஹன்சிகா நடிக்க இருக்கும் புதிய படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். நாகேஷ்வர் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார்.
தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ஸ்ரீரெட்டியை தொடர்ந்து, தயாரிப்பாளர் ஒருவர் மீது புகார் கூறியிருக்கிறார் பூனம் கவுர். #PoonamKaur #SriReddy
தமிழில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக நடித்திருந்த பூனம் கவுர், ‘பயணம்’, ‘என் வழி தனி வழி’, 6 மெழுகுவர்த்திகள், வெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சிரீயலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டியின் புகார் குறித்தும் பேசினார். அப்போது சினிமாவில் இது போன்ற தொல்லைகள் நடிகைகளுக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும் தயாரிப்பாளர் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றையும் கூறியுள்ளார்.
தயாரிப்பாளரின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய பூனம் கவுர், முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படங்களை பார்த்து புகழ்ந்தார் என்றும், தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய பூனம் கவுர், அந்த தயாரிப்பாளர் தனக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் கூறினார். இதையடுத்து எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவரின் முகம் மாறியது. என் அம்மாவுடன் அலுவலகம் வந்ததை அவர் விரும்பவில்லை. இதனால் அந்த தயாரிப்பாளர் என்னிடம் சரியாக கூட முகம் கொடுத்து பேசவில்லை. இதுவரை அந்த தயாரிப்பாளர் கூறியபடி எனக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. சினிமாவில் நடிகைகள் பல்வேறு அவமானங்களை சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.