search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radhika Apte"

    • பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேசுபவர் ராதிகா
    • நடிகர்கள் திடீரென மூட் சரியில்லை என சென்று விடுவார்கள் என்றார் ராதிகா

    மராத்தி, தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் 38 வயதான ராதிகா ஆப்தே (Radhika Apte).

    ராதிகா, வேலூரில் பிறந்தவர். ராதிகாவின் பெற்றோர் வேலூர், கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் மருத்துவர்களாக பணியாற்றியவர்கள்.

    திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களுக்கு எதிராக தயங்காமல் குரல் கொடுத்து வருபவர், ராதிகா ஆப்தே.

    திரைத்துறையில் தனது போராட்டங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அதில் ராதிகா தெரிவித்ததாவது:

    பல மொழி திரைப்படங்களில் நான் நடித்துள்ளேன். ஆனால், நான் மிகவும் போராட வேண்டி இருந்தது "டோலிவுட்" (Tollywood) எனப்படும் தெலுங்கு திரைப்பட உலகம்.

    அதிக ஆணாதிக்கம் நிறைந்த திரைத்துறை தெலுங்கு படத்துறைதான்.

    பெண்களை அவர்கள் நடத்தும் விதம் சிறிதும் சகித்து கொள்ள முடியாது. பெண்களுக்கு அதில் வழங்கப்படும் பாத்திர படைப்புகளும் படத்தில் பங்கு பெறும் நடிகர்கள் நடந்து கொள்ளும் விதமும் எனக்கு பிடிக்காது.

    படப்பிடிப்பு தளங்களில் மரியாதையாக நடத்த மாட்டார்கள். நடிகர்கள் திடீரென "மூட்" சரியில்லை என கூறி சென்று விடுவார்கள். ஆனால், படக்குழுவினர் நடிகர்களை எதுவும் கேட்க மாட்டார்கள்.

    நான் தொடர்ந்து அங்கு பிரச்சனைகளை அனுபவித்தேன். இறுதியில், எனக்கு டோலிவுட் ஒத்து வராது என உணர்ந்து, தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    2016ல் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த "கபாலி", திரைப்படத்தில் "குமுதவல்லி" எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து விமர்சகர்களை ஈர்த்தவர் ராதிகா ஆப்தே என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராதிகா ஆப்தே ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று காலை 8.30 மணிக்கு விமானத்தில் செல்ல இருந்தேன். ஆனால் தற்போது 10.15 மணியைக் கடந்தும் விமானம் இன்னும் புறப்படவில்லை. ஆனால், விமானம் புறப்பட்டுவிடும் என கூறி பயணிகள் அனைவரையும் ஏரோ பிரிட்ஜில் வைத்து பூட்டி விட்டனர்.

    பயணிகளில் பலர் குழந்தைகளை வைத்துள்ளனர். வயதானவர்களும் உள்ளனர். எல்லோரையும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்துள்ளனர். பாதுகாவலர்கள் கதவை திறக்கவில்லை. ஊழியர்களுக்கும் என்ன நடக்கின்றது என தெரியவில்லை. நானும் உள்ளே பூட்டப்பட்டுள்ளேன். 12 மணி வரை உள்ளேயே இருக்க வேண்டியிருக்கும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


    குடிக்க தண்ணீர் கூட இல்லை. வேடிக்கையான இந்தப் பயணத்துக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சியையும் அவர் பகிர்ந்துள்ளார். ஆனால், விமான நிலையம் தொடர்பான எந்த ஒரு விவரத்தையும் அவர் தனது பதிவில் குறிப்பிடவில்லை.


    பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.
    தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ''சமீபத்தில் ஒரு இயக்குனர் என்னை சந்தித்து அவரது படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஏன் இதே போன்ற கதைகளுடன் வருகிறீர்கள் என கேட்டேன். 

    நீங்கள் பட்லாபூர், அகல்யா போன்ற படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது மட்டுமின்றி ஏற்கனவே நிர்வாணமாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறீர்கள் அல்லவா என கேட்டார். எனவே இப்படத்தில் அதே போன்ற கதாபாத்திரம் செய்வீர்களோ என்ற எண்ணத்தில் உங்களை அணுகினேன் என தெரிவித்தார். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். 

    ராதிகா ஆப்தே

    இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் நிர்வாணமாக நடிப்பது ஒன்றும் தவறல்ல. கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம். நிர்வாணமாக நடிக்க வைப்பதற்காகவே கண்டபடி கதைகளை கொண்டு வந்தால் எப்படி?. நிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை. கதை பிடித்திருந்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வேன். கதையே இல்லாமல் உடம்பை காட்டவோ நிர்வாணமாக நடிக்கவோ மாட்டேன்'' என்றார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டியில், வெப் தொடர்களுக்கு சென்சார் கூடாது என்று கூறியிருக்கிறார். #RadhikaApte
    ‘சிந்திக்கும் ஆற்றல் நிறைந்த சிறந்த நடிகை’ என்ற பெயரை பெற்றிருக்கிறார், ராதிகா ஆப்தே. அதுவே அவருக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மொழிகளைக் கடந்து தனது அர்த்தமுள்ள நடிப்பால் முத்திரை பதிக்கும் ராதிகா ஆப்தே, ஒரே நேரத்தில் சினிமாவிலும் நடிக்கிறார். வெப் தொடர்களிலும் தோன்றுகிறார். அவரது பேட்டி:

    தற்போது புகழ் பெற்றுவரும், வெப் தொடர்களுக்கு ‘சென்சார்’ அவசியம் என்று நினைக்கிறீர்களா?

    வெப் தொடர்களுக்கு எந்த ‘சென்சார்ஷிப்’பும் கூடாது என்றே நான் கருதுகிறேன். அதற்கு என்ன காரணம் என்றால், மக்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்களோ, அதை எப்படியாவது பார்க்கத்தான் போகிறார்கள்.



    மீடூ இயக்கம், திரைத்துறையில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறதா?

    மீடூ இயக்கம் ஏற்படுத்திய பெரிய தாக்கம், இனி ஆண்கள் தவறு செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள். பெண்களும் தங்கள் மீதான அத்து மீறல்கள் குறித்துப் பேச வெட்கப்பட வேண்டியதில்லை என்று உணர்ந்திருக்கிறார்கள். இதெல்லாம் பெரிய முன்னேற்றம் தான்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தேவிற்கு நிறைவேறாத ஆசை இருக்கிறதாம். #RadhikaApte
    ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் சேலைகட்டிக்கொண்டு குடும்பப்பாங்காக நடிக்கும் ராதிகா ஆப்தே பாலிவுட், ஹாலிவுட்டில் படுகவர்ச்சி காட்சிகளில் நடிக்கிறார். அவருக்கு தீராத ஆசை ஒன்று இருக்கிறதாம்.

    இதுபற்றி அவர் கூறியதாவது:- எனக்கு 8 வயதாக இருக்கும்போது என் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒரு பையன் மீது எனக்கு அதிக ஆசை இருந்தது. அப்போது எனது வீட்டு வேலைக்கார பெண்ணுடன் அடிக்கடி சினிமாவுக்கு செல்வேன். நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் காதல் காட்சிகளில் மழையில் நனைந்தபடி காதலிக்கு காதலன் முத்தமிடும் காட்சி வரும். அதுபோல் நானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 



    நான் ஆசைப்பட்ட பையனுக்கு மழையில் நனைந்தபடி முத்தம் தர விரும்பினேன். ஆனால் அதை அவனிடம் சொல்வதற்கான தைரியம் எனக்கு அப்போது இல்லை. இப்போதுவரை மழையில் யாருக்கும் நான் முத்தம் தந்ததில்லை. அதுதான் எனக்கு நிறைவேறாத ஆசையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ், இந்தி மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ராதிகா ஆப்தே பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். #RadhikaApte
    ராதிகா ஆப்தேயின் பெற்றோர் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் படித்து அங்கேயே மருத்துவர்களாக பணியாற்றியவர்கள். ராதிகா ஆப்தே பிறந்த பின் அவரது குடும்பம் வேலூரில் இருந்து புனேவுக்கு குடிபெயர்ந்தனர். சிறுவயது முதலே புனேவில் வளர்ந்ததால் அந்த நகரின் தற்போதைய நிலை குறித்து ராதிகா நேற்று கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். “சாலை விபத்துகள் பற்றி என் அப்பா மூலம் நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் நரம்பியல் நிபுணர். எனவே எனக்கு சாலை விதிகள் குறித்து அதிகமாகத் தெரியும். ஹெல்மெட்டை பயன்படுத்துவது போன்ற அடிப்படையான விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

    இதை ஒவ்வொருவருக்கும் பாடம் நடத்த முடியாது. அவர்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். முன்பு இந்த நகரை சைக்கிளிலேயே சுற்றி வருவோம். இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று பாருங்கள். தேவையற்ற நேரங்களில் ஹாரன் ஒலி எழுப்பக்கூடாது, பாதசாரிகள் கடக்கும் கோட்டிற்கு முன் வேகத்தைக் குறைப்பது, ஹெல்மட் அணிவது போன்ற அடிப்படையான போக்குவரத்து விதிகளைக் கூட மக்கள் பின்பற்றாதது அபாயகரமானது” என்று பேசினார்.



    ராதிகாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, “சில படங்களின் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறேன். ஆனால் இப்போது நான் அதைப் பற்றி வெளியில் கூறமுடியாது” என்று மறுத்துவிட்டார்.
    ராஜன் மாதவ் இயக்கத்தில் விதார்த், அஜ்மல், காயத்ரி, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி இருக்கும் `சித்திரம் பேசுதடி 2' படத்தின் விமர்சனம். #ChithiramPesudhadi2 #ChithiramPesudhadi2Review #Vidharth #Ajmal
    ராதிகா ஆப்தேவின் கணவர் மிகவும் செல்வந்தர். இவருடன் பிசினஸ் பார்ட்னராக இருக்கும் சுப்பு பஞ்சு, ரவுடிகளான விதார்த், அசோக் மூலம் அவரை கொலை முயற்சிக்கிறார். அப்படி கொலை செய்யும் நேரத்தில் காயத்ரியின் காதலர் அதை பார்த்து விடுகிறார். விதார்த் மற்றும் அசோக் இருவரையும் போலீசில் காட்டிக் கொடுக்க நினைக்கிறார்.

    காதலருக்காக காத்திருக்கும் காயத்ரியின் பையை, பிக்பாக்கெட் திருடர்களான நிவாஸ், பிளேடு சங்கர் இருவரும் திருடி சென்று விடுகிறார்கள். பையை இழந்த காயத்ரி, காதலரிடம் எனக்கு அந்த பை வேண்டும். அது இருந்தால் தான் வீட்டிற்கு செல்ல முடியும் என்று கூறுகிறார். மேலும் இந்த பிரச்சனையால் இவர்கள் காதலில் பிளவு ஏற்படுகிறது. இதனால், பையை கண்டுபிடிக்க நிவாஸ், பிளேடு சங்கரை தேடுகிறார்.



    தங்களை காட்டிக் கொடுக்க நினைக்கும் காயத்ரியின் காதலரை கொலை செய்ய அசோக் தேடுகிறார். காயங்களுடன் உயிர் தப்பிக்கும் ராதிகா ஆப்தேவின் கணவரையும் கொல்ல திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் பிசினஸ் பிரச்சனையில் இருக்கும் அஜ்மலுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. அரசியல்வாதி அழகம் பெருமாள் சிக்கியிருக்கும் வீடியோ ஒன்றை அஜ்மலுக்கு கொடுக்கிறார் ராமன். ஆடுகளம் நரேன், காயத்ரியின் தந்தை, நிவாஸ், ஆகியோர் கூட்டாக சேர்ந்து சுப்பு பஞ்சுவை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.

    இறுதியில் விதார்த், அசோக் இருவரும் ராதிகா ஆப்தேவின் கணவர், காயத்ரியின் காதலர் இருவரையும் கொன்றார்களா? காயத்ரி தன்னுடைய காதலனுடன் இணைந்தாரா? காயத்ரியின் காதலர், விதார்த், அசோக்கை போலீசில் சிக்க வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    உலா என்ற பெயரில் உருவான இப்படம் ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. விதார்த், அசோக், அஜ்மல், நிவாஸ், பிளேடு சங்கர், ராதிகா ஆப்தே, காயத்ரி, சுப்பு பஞ்சு, அழகம் பெருமாள், ஆடுகளம் நரேன் என அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

    கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ராதிகா ஆப்தே, விதார்த் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி சென்றிருக்கிறார் டிவைன் பிராவோ.



    வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை வைத்து அதை ஒரு புள்ளியில் இணைய வைத்திருக்கிறார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இடியாப்பம் சிக்கல் போல் தோன்றுகிறது. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம். திரைக்கதை வலுவில்லாமல் நகர்கிறது. நட்சத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

    பத்மேஷ் மார்த்தாண்டனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. சாஜன் மாதவ்வின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘சித்திரம் பேசுதடி 2’ அதிகம் பேசவில்லை. #ChithiramPesudhadi2 #ChithiramPesudhadi2Review #Vidharth #Ajmal #Gayathrie #RadhikaApte

    தமிழ், இந்தியில் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே, 8 வருடங்களுக்கு முன்பே லண்டனை சேர்ந்த இசைக் கலைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும், தனது திருமணம் பற்றி பலருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளார். #RadhikaApte
    தமிழில் தோனி, கபாலி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தேவும், லண்டனை சேர்ந்த இசைகலைஞர் பெனடிக்கும் திருமணம் செய்துகொண்டனர்.

    திருமண வாழ்க்கை குறித்து ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    “நானும், பெனடிக்கும் 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டோம். இப்போது கூட பலருக்கு நாங்கள் திருமணம் செய்துகொண்டது தெரியாது. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும்.



    நானும், எனது கணவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்துள்ளோம். எங்களுக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தகராறுகள் வருவதுண்டு. ஆனாலும் அவை சிறிது நேரம்தான் இருக்கும். சண்டை போட்டால் உன்னுடன் பேச விருப்பம் இல்லை என்றோ, சிறிது நேரம் கழித்து பேசுவோம் என்றோ சொல்வது இல்லை. சில நிமிடங்களிலேயே இருவரும் பேசிவிடுவோம்.

    யார் மீது தவறு இருந்தாலும் இருவருமே மன்னிப்பு கேட்டுக்கொள்வோம். கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டு நீண்ட நாட்கள் பேசாமல் இருந்தால் பிரச்சினைகள் பெரிதாகி விடும். சண்டையை மனதில் வைத்துக்கொள்ளாமல் மறந்துவிடுவோம். எனக்கும், எனது கணவருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. நீ என்னை மதிக்கவில்லை. முக்கியத்துவம் தரவில்லை என்றெல்லாம் ஒருமுறை கூட சொன்னது இல்லை.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். #RadhikaApte #Benedict

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, தற்போது படுகவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். #RadhikaApte
    ராதிகா ஆப்தே இந்தி சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கபாலியில் நடித்த அவருக்கு மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் ஆசை உள்ளது. இந்நிலையில் மேக்சிம் பத்திரிகைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

    மேக்சிம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி புகைப்படம் வெளியாகி உள்ளது. லெதர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். ராதிகா ஆப்தேவின் புகைப்படங்களை மேக்சிம் இந்தியா டுவிட்டரில் வெளியிட்டு வருகிறது.



    பாலிவுட் நடிகைகள் இது போன்று கவர்ச்சி போஸ் கொடுப்பது சாதாரணம். மேக்சிம் பத்திரிகை வெளியிட்டுள்ள புகைப்படங்களை ராதிகாவும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேக்சிம் போட்டோஷூட் வீடியோவையும் ராதிகா ஆப்தே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
    மீடூ வி‌ஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்க கூடாது என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். #RadhikaApte #MeToo
    கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்த ராதிகா ஆப்தே இந்தி பட உலகில் முன்னணி நடிகை. மீடூ இயக்கம் பிரபலமாகும் முன்பே வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி பேசியவர். மீடூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘நான் மீடூ இயக்கத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.

    பாலியல் துன்புறுத்தலை எந்த விதத்திலும் சகிக்க முடியாது. இது இப்போது அத்தியாவசியமான ஒரு இயக்கமாகி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிரங்கப்படுத்துவதும் அவர்களுக்கு ஆதரவாக சமூகத்தில் குரல்கள் எழுவதும் ஆரோக்கியமான ஒரு வி‌ஷயம்.



    ஆனால் மீடூ வி‌ஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற வி‌ஷயங்களில் எப்போதும் ஆதாரத்தை சேகரித்து கையில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்ட முடியாது. நாம் நம் எதிர்ப்பை காட்டாவிட்டால் அதையே அவர்களுக்கான வசதியாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து தவறு செய்வார்கள். ஒருமுறை என்னுடைய பின்புறத்தை ஒருவன் தட்டிவிட்டு சென்றான். 20 நிமிடங்களில் நான் அதை மறந்துவிட்டேன். ஆனால் சுற்றிலும் இருந்தவர்கள் அதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்கள்’ என்று கூறியுள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். #RadhikaApte
    கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. அடிக்கடி பாலியல் புகார்களைக் கூறி பரபரப்புகளை ஏற்படுத்துபவர். தமிழ்ப் படத்தில் நடித்தபோது ஒரு நடிகர் தனக்கு பாலியல் புகார் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

    இப்போது யார் என்று பெயரையும், படத்தையும் குறிப்பிடாமல் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் கூறும் போது, “தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மும்பையிலுள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். அவரது பெயர் சரியாக நினைவில்லை.

    அந்த இயக்குனர் நடிகர் விக்ரமை வைத்து பீரியட் படம் இயக்க உள்ளதாகவும், நீங்கள் நடித்தால் உங்களுக்கு நல்ல பேர் கிடைக்கும் என்றும் கூறி என்னை ஆடி‌ஷனில் பங்கேற்கும்படி அழைத்தார். இதனால் அவர் தங்கிய ஓட்டலுக்கு சென்றேன். ஒரு அறையில் 12 பேருடன் இயக்குநர் அமர்ந்திருந்தார். என்னிடம் சிறிய கோட் ஒன்று கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார்.

    பின் ஒரு போட்டோகிராபர் என்னை பல கோணங்களில் போட்டோக்கள் எடுத்தார். கவர்ச்சியாக போஸ் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார். இப்படி அவர் வலியுறுத்தியது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. பிறகு நடனமாட சொல்லி, சில ஆபாசமான அசைவுகளையும் செய்து காட்டும்படி சொன்னார்.



    அவர் தன் படத்துக்காகத்தான் ஆடி‌ஷன் செய்கிறாரா என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு காலையில் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லி, அந்த ஓட்டலில் இருந்து தப்பித்து வந்தேன். கடைசியில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார். விக்ரமை வைத்து கரிகாலன் என்னும் படம் தொடங்க திட்டமிடப்பட்டு கைவிடப்பட்டது. எனவே அந்த இயக்குனரா என்று சினிமாவில் கேள்வி எழுந்துள்ளன.
    பிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் கபாலி மூலம் மிகவும் பிரபலமான ராதிகா ஆப்தேவின் நல்ல கதைக்காக எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். #RadhikaApte
    கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றவர் ராதிகா ஆப்தே. நடிப்பிற்காகப் பேசப்படுவதை போல இவர் தனது துணிச்சலான கருத்துக்கள் மூலமும் சமூக வலைதளங்கள் தொடங்கி ஊடகங்களிலும் விவாதப்பொருளாகி வருகிறார்.

    ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகியுள்ள ‘அந்தாதுண்’ திரைப்படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் இன்னும் சவாலான திரைப்படத்தில் நடிப்பதற்காகக் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களுக்கு இங்குப் பற்றாக்குறை நிலவுகிறது. இருப்பினும் ஒரு நல்ல மற்றும் நேர்மறையான கதை வருமா என்றுதான் எதிர்பார்த்திருக்கிறேன்.



    நான் பல்வேறு நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இப்போது நல்ல கதை இல்லாமல் காத்துக் கொண்டிருக்கிறேன். என்ன கதை கிடைக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரான ராதிகா ஆப்தே 2003ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கபாலி, தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட 10 தமிழ்ப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
    ×