என் மலர்

  நீங்கள் தேடியது "Gayathrie"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா நடிப்பில் உருவாகி இருக்கும் `கென்னடி கிளப்' படக்குழுவின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #KennadiClub #Sasikumar
  `ஏஞ்சலினா', `சாம்பியன்' படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது.

  சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டப்பிங் நேற்று துவங்கியதாக சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் கென்னடி கிளப் படக்குழுவுக்கு இயக்குநர் பாரதிராஜா விருந்து அளித்தார். #KennedyClub #Sasikumar
  நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'.

  இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல மாநிலங்களில் நடைபெற்றது. அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.  இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்.

  இந்த படத்தில் பாரதிராஜாவுடன் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜன் மாதவ் இயக்கத்தில் விதார்த், அஜ்மல், காயத்ரி, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி இருக்கும் `சித்திரம் பேசுதடி 2' படத்தின் விமர்சனம். #ChithiramPesudhadi2 #ChithiramPesudhadi2Review #Vidharth #Ajmal
  ராதிகா ஆப்தேவின் கணவர் மிகவும் செல்வந்தர். இவருடன் பிசினஸ் பார்ட்னராக இருக்கும் சுப்பு பஞ்சு, ரவுடிகளான விதார்த், அசோக் மூலம் அவரை கொலை முயற்சிக்கிறார். அப்படி கொலை செய்யும் நேரத்தில் காயத்ரியின் காதலர் அதை பார்த்து விடுகிறார். விதார்த் மற்றும் அசோக் இருவரையும் போலீசில் காட்டிக் கொடுக்க நினைக்கிறார்.

  காதலருக்காக காத்திருக்கும் காயத்ரியின் பையை, பிக்பாக்கெட் திருடர்களான நிவாஸ், பிளேடு சங்கர் இருவரும் திருடி சென்று விடுகிறார்கள். பையை இழந்த காயத்ரி, காதலரிடம் எனக்கு அந்த பை வேண்டும். அது இருந்தால் தான் வீட்டிற்கு செல்ல முடியும் என்று கூறுகிறார். மேலும் இந்த பிரச்சனையால் இவர்கள் காதலில் பிளவு ஏற்படுகிறது. இதனால், பையை கண்டுபிடிக்க நிவாஸ், பிளேடு சங்கரை தேடுகிறார்.  தங்களை காட்டிக் கொடுக்க நினைக்கும் காயத்ரியின் காதலரை கொலை செய்ய அசோக் தேடுகிறார். காயங்களுடன் உயிர் தப்பிக்கும் ராதிகா ஆப்தேவின் கணவரையும் கொல்ல திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் பிசினஸ் பிரச்சனையில் இருக்கும் அஜ்மலுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. அரசியல்வாதி அழகம் பெருமாள் சிக்கியிருக்கும் வீடியோ ஒன்றை அஜ்மலுக்கு கொடுக்கிறார் ராமன். ஆடுகளம் நரேன், காயத்ரியின் தந்தை, நிவாஸ், ஆகியோர் கூட்டாக சேர்ந்து சுப்பு பஞ்சுவை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.

  இறுதியில் விதார்த், அசோக் இருவரும் ராதிகா ஆப்தேவின் கணவர், காயத்ரியின் காதலர் இருவரையும் கொன்றார்களா? காயத்ரி தன்னுடைய காதலனுடன் இணைந்தாரா? காயத்ரியின் காதலர், விதார்த், அசோக்கை போலீசில் சிக்க வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.  உலா என்ற பெயரில் உருவான இப்படம் ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. விதார்த், அசோக், அஜ்மல், நிவாஸ், பிளேடு சங்கர், ராதிகா ஆப்தே, காயத்ரி, சுப்பு பஞ்சு, அழகம் பெருமாள், ஆடுகளம் நரேன் என அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

  கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ராதிகா ஆப்தே, விதார்த் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி சென்றிருக்கிறார் டிவைன் பிராவோ.  வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை வைத்து அதை ஒரு புள்ளியில் இணைய வைத்திருக்கிறார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இடியாப்பம் சிக்கல் போல் தோன்றுகிறது. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம். திரைக்கதை வலுவில்லாமல் நகர்கிறது. நட்சத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

  பத்மேஷ் மார்த்தாண்டனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. சாஜன் மாதவ்வின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

  மொத்தத்தில் ‘சித்திரம் பேசுதடி 2’ அதிகம் பேசவில்லை. #ChithiramPesudhadi2 #ChithiramPesudhadi2Review #Vidharth #Ajmal #Gayathrie #RadhikaApte

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி - காயத்ரி நடிப்பில் உருவாகி வந்த ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Maamanidhan #VijaySethupathi
  சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். 

  தென் தமிழகம் மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் நடந்தது. இந்த நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டப்பிங் பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும், இசைஞானியின் இசையை கேட்க ஆவலோடு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  இந்த படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார். #Maamanidhan #VijaySethupathi #SeenuRamasamy #Gayathrie #YuvanShankarRaja #MaamanidhanWrap

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக அறிமுகமாகிறார். #Maamanidhan #VijaySethupathi
  ‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.

  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக சினிமாவில் அறிமுகமாவதாக இயக்குநர் சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லியோ சிவக்குமார் முறைப்படி நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று படத்தில் நடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


  இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கும் இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். #Maamanidhan #VijaySethupathi #SeenuRamasamy #YuvanShankarRaja #LeoSivakumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசீந்தரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக இருக்கிறது. #KennedyClub #Sasikumar
  ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது. 

  சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

  படம் பற்றி சுசீந்திரன் பேசும் போது, 

  ‘‘பெண்கள் கபடியை மையமாக கொண்ட கதை, இது. இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடைபெற்றதோ அங்கெல்லாம் சென்று நிஜ போட்டிகளை படமாக்கி இருக்கிறோம். சேலம், ஈரோடு, கோவை, மதுரை, கன்னியாகுமரி, மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.  பெரும்பாலான காட்சிகளை 4 கேமராக்கள் மூலம் படமாக்கி இருக்கிறோம். இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மகாராஷ்டிரா சென்றோம். அங்கிருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். ஹரியானாவில் நடைபெற இருக்கும் நிஜ போட்டியையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

  சீன மொழிக்கான டப்பிங் உரிமை (ரூ.2 கோடிக்கு) படம் வெளியாவதற்கு முன்பே விற்பனை ஆகியிருக்கிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இந்த படம் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வரும்.’’ என்றார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படம் சொன்னபடி இன்று ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். #Seethakaathi #VijaySethupathi
  96 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகவிருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து இதுகுறித்து விளக்கமளித்த படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சுதன் சுந்தரம் கூறியதாவது,

  ஒரு சிறிய பிரச்சினையால் படம் வெளிவராது என்று சிலர் வேண்டுமென்றே வீண்வதந்தி பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் பொய். படம் சொன்னபடி 20-ஆம் தேதி (இன்று) ரிலீசாகும் என்றார்.

  விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார்.  இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திலும் உருக வைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakaathi #VijaySethupathi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படத்தின் விமர்சனம். #SeethakkathiReview #Seethakkathi #VijaySethupathi #BalajiTharaneetharan
  சிறிய வயதில் நாம் நிறைய மேடை நாடகங்களை பார்த்திருப்போம். தொழில்நுட்ப வளர்ச்சி, படங்களின் வரவால், மேடை நாடகங்களை அதிகளவில் பார்க்க முடியவில்லை. எனவே நாடக கலைஞர்களின் வாழ்க்கை, கலையின் மீதான அவர்களின் தாகம் எந்த அளவுக்கு இருந்தது, தற்போதும் இருக்கிறது என்பது நிறைய பேருக்கு தெரியாமலே இருக்கும்.

  அந்த மாதிரியான ஒரு நாடக கலைஞரின் வாழ்க்கை, அந்த கலையின் மூலமாக ஒரு கலைஞன் மற்றவர்களை மற்றவர்களை எவ்வாறு சந்தோஷப்படுத்துகிறான். கலையின் மீது அவன் காட்டும் ஈடுபாடு, கலைக்கான அவனது சேவை என்னவாக இருக்கும் என்பது படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  நடிக்க வருபவர்கள் எல்லோரும் சினிமாவில் நடிகனாக முடியாது. நடிகனாக தேவையான திறமை, தரம் இருந்தால் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும். ஒரு சிறிய காட்சியில் நடிப்பதற்கு கூட கலையின் மீது ஆர்வம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த காட்சி முழுமை பெறும். நடிப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. நடிகன் என்ற வார்த்தைக்குள் கலைஞன் என்ற வார்த்தை அடங்கி உள்ளது. கேமரா முன்னால் நிற்பவர் அனைவரும் நடிகர் கிடையாது. அப்படி சொல்லிக் கொண்டு இருந்தாலும், அவர்கள் பெரியதாக ஜொலிக்க முடியாது. சீக்கிரமாகவே காணாமல் போய் விடுவார்கள்.

  கலைக்குள் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஒரு கலைஞன் எவ்வளவு உயர்ந்தவன் என்பது நமக்கு தெரியால் இருந்திருக்கலாம் அல்லது நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு கலைஞனின் உயரத்தை உயர்த்தி கூறியிருப்பதே படத்தின் கதை.  விஜய் சேதுபதி தான் வரும் காட்சிகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு நாடக கலைஞரின் வாழ்க்கையை, அவர்களது திறமையை, அவர்கள் கலையை நேசிப்பதையும், அவர்கள் கலை மீது வைத்திருக்கும் பற்றையும் அழகாக வெளிக் காட்டியிருக்கிறார். அவர் விட்டுச் செல்லும் கலை, அதனுடைய தொடர்ச்சி படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. 

  ராஜ்குமார் தனது ஒவ்வொரு அசைவாலும், பேச்சாலும், பார்வையாலும் ரசிக்க வைக்கிறார். தனது தனித்துவமான நடிப்பின் மூலம் சிரிக்க வைக்கிறார் என்றும் சொல்லலாம். சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் வைபவ்வின் அண்ணனான சுனில் ரெட்டி, படத்தின் இரண்டாவது பாதியை தூக்கிச் செல்கிறார் என்று சொல்லலாம். மௌலி தனது யதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா இயல்பான வருகிறார்கள். பகவதி பெருமாள், கருணாகரன், ரம்யா நம்பீசன், அர்ச்சனா, காயத்ரி, பார்வதி நாயர் என மற்ற கதாபாதத்திரங்கள் அனைவருமே படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றனர்.  ஒரு உச்ச நடிகரை நம்பி படம் பண்ண வேண்டுமென்றால், அவரது தோள் மீதேறி அவருடன் பயணம் செய்தால் தான், மக்களை ரசிக்க வைக்க முடியும் என்பதை தனது தனித்துவமான படைப்பின் மூலம் தகர்த்தெறிந்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். அதற்காகவே அவருக்கு பாராட்டுக்கள். நாம் ஒன்று நினைத்து போக, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புதுமுகங்களுடன் படத்தை ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

  நடிகர் யாராக இருந்தாலும், ஒரு கதாபாத்திரத்தை மக்களின் முன் ஜொலிக்க வைக்க என்ன தேவை என்பதை பாலாஜி தரணிதரன் புரிந்து வைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் அதனை நிரூபித்தும் காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். அதனை படத்தின் முடிவில் உணர முடிகிறது. எனினும் விஜய் சேதுபதியின் 25-வது படம் இது என்பதை ஏற்க முடியவில்லை. ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க வெற்றிக் கனியை சுவைத்திருக்கிறார் பாலாஜி தரணிதரன் என்பதை உறுதியாக கூறலாம். இவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதற்கு இந்த படம் போதும். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். இது விஜய் சேதுபதி படம் என்று சொல்வதை விட, பாலாஜி தரணிதரனின் திறமையை வெளிப்படுத்தும் படம் என்பதே நிதர்சனமான உண்மை.  படத்தின் நீளம் ஒரு வித சோர்வை ஏற்படுத்தினாலும், படத்திற்கு அது தேவை என்பதையும் உணர்த்தியிருக்கிறார். அதே நேரத்தில் கதையின் ஓட்டத்திற்கு தடை போடும்படியான சில காட்சிகளை நீக்கியிருக்கலாம்.

  கோவிந்த் வசந்தா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. சரஸ்காந்த்.டி.கே.வின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.

  மொத்தத்தில் `சீதக்காதி' காவியம். #SeethakkathiReview #Seethakkathi #VijaySethupathi # BalajiTharaneetharan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலாஜி தரணிதரண் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் `சீதக்காதி' படத்தின் முன்னோட்டம். #Seethakaathi #VijaySethupathi
  பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம் மற்றும் அருண் வைத்தியநாதன் இணைந்து தயாரித்துள்ள படம் `சீதக்காதி'.

  கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர், மவுலி, ராஜ்குமார், பகவதி வெருமாள், கருணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  ஒளிப்பதிவு - சரஸ்காந்த்.டி.கே, இசை - கோவிந்த் மேனன், படத்தொகுப்பு - ஆர்.கோவிந்தராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - கார்த்திக் நேத்தா, மதன் கார்க்கி, தியாகராஜன் குமாரராஜா, யுகபாரதி, தயாரிப்பு நிறுவனம் - பேஷன் ஸ்டூடியோஸ், தயாரிப்பு - சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்தியநாதன், இயக்கம் - பாலாஜி தரணிதரண்.

  படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

  இந்த படத்தை உருவாக்கும்போது நான் மிகவும் மகிழ்ந்த விஷயம் நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது தான். எல்லோரும் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் இந்த படத்தில் நடித்த அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த கதையை நான் எழுதி 5 வருடம் இருக்கும், கதையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய வரம். விஜய் சேதுபதியை என்னால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை.   கடைசியில் அவரிடம் தான் போய் நின்றேன், அவர் கதாபாத்திரமாகவே உருமாறி நின்றார். சீதக்காதி தான் என்னுடைய சிறந்த படம் என்று சொல்வேன். மௌலி, அர்ச்சனா, மகேந்திரன் ஆகியோருடன் நாடக கலைஞர்கள் அனைவரும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்கள். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம் என்றார்.

  படம் வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #Seethakaathi #VijaySethupathi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீதக்காதி’ படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது. #Seethakkathi #VijaySethupathi
  விஜய் சேதுபதி நடிப்பில் வரும் 21-ந் தேதி வெளியாக இருக்கும் படம் சீதக்காதி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

  ரம்யா நம்பீசன், காயத்ரி, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  இந்த படத்துக்கு சீதக்காதி என்று பெயர் வைத்ததற்கு இந்திய தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரகீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  சீதக்காதி என்ற பெயரில் பொழுதுபோக்கு திரைப்படம் எடுத்து இருப்பதாக தகவல் வருகிறது. சீதக்காதி தமிழர்களின் ஒரு அடையாளமாக வாழ்ந்தவர். இசுலாமியராக இருந்தாலும் அனைத்து  மக்களுக்காகவும், மனிதநேயத்திற்காகவும் வாழ்ந்த மாமனிதர் சீதக்காதி.

  ஷெய். அப்துல் காதர் என்கிற சீதக்காதி பெயரை கொண்டு பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது திரைப்படமான “சீதக்காதி” வெளியிட இருப்பதாக செய்திகள் வருகின்றன.

  விஜய் சேதுபதி பேட்டி அளிக்கும் போது சீதக்காதி ஒரு காமெடி திரைப்படம் என கூறியுள்ளார். இராமநாதபுரம் கீழக்கரையில் பிறந்த ஷெய்கு அப்துல் காதர் என்கிற சீதக்காதி 1698 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர்.  பன்முகங்கள் கொண்ட சீதக்காதி பெரிய வணிகர். வங்கம், சீனா, மலாக்கா போன்ற நாடுகளில் இருந்து தனது சொந்த கப்பல்கள் மூலம் முத்து, கிராம்பு, பாக்கு, மிளகு இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்தவர். உமறுப் புலவரின் சீறாப்புராணம் பாடுவதற்க்கும் தமிழ் இலக்கியங்கள் வெளியிடுவதற்கும் நிதியுதவி செய்துள்ளார். கொடை வள்ளல் என்ற அடைமொழி கொண்டவர்.

  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீதக்காதியின் கண்ணியத்தை சீரழிக்கும் எந்தவித நடவடிக்கையையும் இந்திய தேசிய லீக் கட்சி அனுமதிக்காது. ஆகையால் ஷெய்கு அப்துல் காதர் என்கிற சீதக்காதியின் சிறப்பை போற்றும் விதமாக இல்லாமல் பொழுதுபோக்கு படம் எடுத்து அதற்கு சீதக்காதி என பெயர் சூட்டுவதை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

  உடனே சீதக்காதி என்ற பெயரை மாற்ற வேண்டும். இல்லை என்றால் சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Seethakkathi #VijaySethupathi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படத்தில் விஜய் சேதுபதி சினிமாவில் பெரிய நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். #Seethakaathi #VijaySethupathi
  96 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் `சீதக்காதி'. விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார்.

  இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டது. டிரைலரில் இருந்து, படத்தில் விஜய் சேதுபதி வயதான சூப்பர் ஸ்டாராக (ஐயா) வலம் வருகிறார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் நடிப்பில் இருந்து விலகும் ஐயா, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று பட அதிபர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் ஐயா, குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.

  இவ்வாறாக வித்தியாசமான தோற்றத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீதக்காதி, விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

  பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திலும் உருக வைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi

  சீதக்காதி படத்தின் டிரைலர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin