search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seethakathi"

    கருத்து சுதந்திரம் என்பது நாடு முழுவதும் ஒடுக்கப்படுகிறது என்று சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். பொன் மாணிக்கவேல் அதை மறுத்துள்ளார். யார் சொல்வது நியாயம் என்பதை புரிவதற்கு எனக்கு நேரம் தேவைப்படுகிறது.

    நேர்மை, நியாயம் எந்த பக்கம் உள்ளது என்று ஆராய்ந்து விட்டுதான் சொல்ல வேண்டும். ஒருவர் குற்றம் சாட்டுகிறார் என்று நாமும் குற்றம் சாட்ட முடியாது. தடைகளை கடந்து பணியாற்றுவேன் என்று பொன் மாணிக்கவேல் கூறி இருக்கிறார். வேறு வழியல்ல.

    அவர் அப்படித்தான் பணியாற்ற வேண்டும். ஏனென்றால் அரசியல் அழுத்தம் என்பது நேர்மையான எல்லோருக்கும் உண்டு. அவருக்கும் அழுத்தம் இருக்கும் என்றால் நாம் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


    விஷால் மீது புகார் சொல்லி தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு தரப்பினர் பூட்டு போட்டுள்ளனர். அவர் மீது கூறப்படும் புகார்கள் உண்மையா? இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை. அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டை ஆராய வேண்டும். ஆராய்வதற்கு விஷாலுக்கு மனம் இருக்க வேண்டும்.

    இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது எல்லோர் மனதிலும் உண்டு.

    சீதக்காதி படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். படங்கள் மீது வழக்கு தொடருவதற்கு ஆரம்ப விழாவாக இருந்தது எனது படங்களாகத்தான் இருக்கும்.

    ஒரு படத்தை பார்த்து விட்டுதான் ஏதாவது தவறு இருக்குமானால் கருத்து சொல்ல வேண்டும். அதை விட்டு எல்லாவற்றையும் தவறு என்று சொல்லக் கூடாது. கருத்து சுதந்திரம் என்பது நாடு முழுவதும் ஒடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படம் சொன்னபடி இன்று ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். #Seethakaathi #VijaySethupathi
    96 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகவிருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து இதுகுறித்து விளக்கமளித்த படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சுதன் சுந்தரம் கூறியதாவது,

    ஒரு சிறிய பிரச்சினையால் படம் வெளிவராது என்று சிலர் வேண்டுமென்றே வீண்வதந்தி பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் பொய். படம் சொன்னபடி 20-ஆம் தேதி (இன்று) ரிலீசாகும் என்றார்.

    விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார்.



    இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திலும் உருக வைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakaathi #VijaySethupathi

    பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படத்தின் விமர்சனம். #SeethakkathiReview #Seethakkathi #VijaySethupathi #BalajiTharaneetharan
    சிறிய வயதில் நாம் நிறைய மேடை நாடகங்களை பார்த்திருப்போம். தொழில்நுட்ப வளர்ச்சி, படங்களின் வரவால், மேடை நாடகங்களை அதிகளவில் பார்க்க முடியவில்லை. எனவே நாடக கலைஞர்களின் வாழ்க்கை, கலையின் மீதான அவர்களின் தாகம் எந்த அளவுக்கு இருந்தது, தற்போதும் இருக்கிறது என்பது நிறைய பேருக்கு தெரியாமலே இருக்கும்.

    அந்த மாதிரியான ஒரு நாடக கலைஞரின் வாழ்க்கை, அந்த கலையின் மூலமாக ஒரு கலைஞன் மற்றவர்களை மற்றவர்களை எவ்வாறு சந்தோஷப்படுத்துகிறான். கலையின் மீது அவன் காட்டும் ஈடுபாடு, கலைக்கான அவனது சேவை என்னவாக இருக்கும் என்பது படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.



    நடிக்க வருபவர்கள் எல்லோரும் சினிமாவில் நடிகனாக முடியாது. நடிகனாக தேவையான திறமை, தரம் இருந்தால் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும். ஒரு சிறிய காட்சியில் நடிப்பதற்கு கூட கலையின் மீது ஆர்வம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த காட்சி முழுமை பெறும். நடிப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. நடிகன் என்ற வார்த்தைக்குள் கலைஞன் என்ற வார்த்தை அடங்கி உள்ளது. கேமரா முன்னால் நிற்பவர் அனைவரும் நடிகர் கிடையாது. அப்படி சொல்லிக் கொண்டு இருந்தாலும், அவர்கள் பெரியதாக ஜொலிக்க முடியாது. சீக்கிரமாகவே காணாமல் போய் விடுவார்கள்.

    கலைக்குள் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஒரு கலைஞன் எவ்வளவு உயர்ந்தவன் என்பது நமக்கு தெரியால் இருந்திருக்கலாம் அல்லது நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு கலைஞனின் உயரத்தை உயர்த்தி கூறியிருப்பதே படத்தின் கதை.



    விஜய் சேதுபதி தான் வரும் காட்சிகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு நாடக கலைஞரின் வாழ்க்கையை, அவர்களது திறமையை, அவர்கள் கலையை நேசிப்பதையும், அவர்கள் கலை மீது வைத்திருக்கும் பற்றையும் அழகாக வெளிக் காட்டியிருக்கிறார். அவர் விட்டுச் செல்லும் கலை, அதனுடைய தொடர்ச்சி படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. 

    ராஜ்குமார் தனது ஒவ்வொரு அசைவாலும், பேச்சாலும், பார்வையாலும் ரசிக்க வைக்கிறார். தனது தனித்துவமான நடிப்பின் மூலம் சிரிக்க வைக்கிறார் என்றும் சொல்லலாம். சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் வைபவ்வின் அண்ணனான சுனில் ரெட்டி, படத்தின் இரண்டாவது பாதியை தூக்கிச் செல்கிறார் என்று சொல்லலாம். மௌலி தனது யதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா இயல்பான வருகிறார்கள். பகவதி பெருமாள், கருணாகரன், ரம்யா நம்பீசன், அர்ச்சனா, காயத்ரி, பார்வதி நாயர் என மற்ற கதாபாதத்திரங்கள் அனைவருமே படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றனர்.



    ஒரு உச்ச நடிகரை நம்பி படம் பண்ண வேண்டுமென்றால், அவரது தோள் மீதேறி அவருடன் பயணம் செய்தால் தான், மக்களை ரசிக்க வைக்க முடியும் என்பதை தனது தனித்துவமான படைப்பின் மூலம் தகர்த்தெறிந்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். அதற்காகவே அவருக்கு பாராட்டுக்கள். நாம் ஒன்று நினைத்து போக, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புதுமுகங்களுடன் படத்தை ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

    நடிகர் யாராக இருந்தாலும், ஒரு கதாபாத்திரத்தை மக்களின் முன் ஜொலிக்க வைக்க என்ன தேவை என்பதை பாலாஜி தரணிதரன் புரிந்து வைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் அதனை நிரூபித்தும் காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். அதனை படத்தின் முடிவில் உணர முடிகிறது. எனினும் விஜய் சேதுபதியின் 25-வது படம் இது என்பதை ஏற்க முடியவில்லை. ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க வெற்றிக் கனியை சுவைத்திருக்கிறார் பாலாஜி தரணிதரன் என்பதை உறுதியாக கூறலாம். இவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதற்கு இந்த படம் போதும். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். இது விஜய் சேதுபதி படம் என்று சொல்வதை விட, பாலாஜி தரணிதரனின் திறமையை வெளிப்படுத்தும் படம் என்பதே நிதர்சனமான உண்மை.



    படத்தின் நீளம் ஒரு வித சோர்வை ஏற்படுத்தினாலும், படத்திற்கு அது தேவை என்பதையும் உணர்த்தியிருக்கிறார். அதே நேரத்தில் கதையின் ஓட்டத்திற்கு தடை போடும்படியான சில காட்சிகளை நீக்கியிருக்கலாம்.

    கோவிந்த் வசந்தா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. சரஸ்காந்த்.டி.கே.வின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.

    மொத்தத்தில் `சீதக்காதி' காவியம். #SeethakkathiReview #Seethakkathi #VijaySethupathi # BalajiTharaneetharan

    பாலாஜி தரணிதரண் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் `சீதக்காதி' படத்தின் முன்னோட்டம். #Seethakaathi #VijaySethupathi
    பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம் மற்றும் அருண் வைத்தியநாதன் இணைந்து தயாரித்துள்ள படம் `சீதக்காதி'.

    கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர், மவுலி, ராஜ்குமார், பகவதி வெருமாள், கருணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சரஸ்காந்த்.டி.கே, இசை - கோவிந்த் மேனன், படத்தொகுப்பு - ஆர்.கோவிந்தராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - கார்த்திக் நேத்தா, மதன் கார்க்கி, தியாகராஜன் குமாரராஜா, யுகபாரதி, தயாரிப்பு நிறுவனம் - பேஷன் ஸ்டூடியோஸ், தயாரிப்பு - சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்தியநாதன், இயக்கம் - பாலாஜி தரணிதரண்.

    படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

    இந்த படத்தை உருவாக்கும்போது நான் மிகவும் மகிழ்ந்த விஷயம் நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது தான். எல்லோரும் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் இந்த படத்தில் நடித்த அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த கதையை நான் எழுதி 5 வருடம் இருக்கும், கதையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய வரம். விஜய் சேதுபதியை என்னால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை. 



    கடைசியில் அவரிடம் தான் போய் நின்றேன், அவர் கதாபாத்திரமாகவே உருமாறி நின்றார். சீதக்காதி தான் என்னுடைய சிறந்த படம் என்று சொல்வேன். மௌலி, அர்ச்சனா, மகேந்திரன் ஆகியோருடன் நாடக கலைஞர்கள் அனைவரும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்கள். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம் என்றார்.

    படம் வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #Seethakaathi #VijaySethupathi

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீதக்காதி’ படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது. #Seethakkathi #VijaySethupathi
    விஜய் சேதுபதி நடிப்பில் வரும் 21-ந் தேதி வெளியாக இருக்கும் படம் சீதக்காதி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

    ரம்யா நம்பீசன், காயத்ரி, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு சீதக்காதி என்று பெயர் வைத்ததற்கு இந்திய தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரகீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சீதக்காதி என்ற பெயரில் பொழுதுபோக்கு திரைப்படம் எடுத்து இருப்பதாக தகவல் வருகிறது. சீதக்காதி தமிழர்களின் ஒரு அடையாளமாக வாழ்ந்தவர். இசுலாமியராக இருந்தாலும் அனைத்து  மக்களுக்காகவும், மனிதநேயத்திற்காகவும் வாழ்ந்த மாமனிதர் சீதக்காதி.

    ஷெய். அப்துல் காதர் என்கிற சீதக்காதி பெயரை கொண்டு பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது திரைப்படமான “சீதக்காதி” வெளியிட இருப்பதாக செய்திகள் வருகின்றன.

    விஜய் சேதுபதி பேட்டி அளிக்கும் போது சீதக்காதி ஒரு காமெடி திரைப்படம் என கூறியுள்ளார். இராமநாதபுரம் கீழக்கரையில் பிறந்த ஷெய்கு அப்துல் காதர் என்கிற சீதக்காதி 1698 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர்.



    பன்முகங்கள் கொண்ட சீதக்காதி பெரிய வணிகர். வங்கம், சீனா, மலாக்கா போன்ற நாடுகளில் இருந்து தனது சொந்த கப்பல்கள் மூலம் முத்து, கிராம்பு, பாக்கு, மிளகு இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்தவர். உமறுப் புலவரின் சீறாப்புராணம் பாடுவதற்க்கும் தமிழ் இலக்கியங்கள் வெளியிடுவதற்கும் நிதியுதவி செய்துள்ளார். கொடை வள்ளல் என்ற அடைமொழி கொண்டவர்.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீதக்காதியின் கண்ணியத்தை சீரழிக்கும் எந்தவித நடவடிக்கையையும் இந்திய தேசிய லீக் கட்சி அனுமதிக்காது. ஆகையால் ஷெய்கு அப்துல் காதர் என்கிற சீதக்காதியின் சிறப்பை போற்றும் விதமாக இல்லாமல் பொழுதுபோக்கு படம் எடுத்து அதற்கு சீதக்காதி என பெயர் சூட்டுவதை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    உடனே சீதக்காதி என்ற பெயரை மாற்ற வேண்டும். இல்லை என்றால் சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Seethakkathi #VijaySethupathi

    பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படத்தில் விஜய் சேதுபதி சினிமாவில் பெரிய நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். #Seethakaathi #VijaySethupathi
    96 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் `சீதக்காதி'. விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார்.

    இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டது. டிரைலரில் இருந்து, படத்தில் விஜய் சேதுபதி வயதான சூப்பர் ஸ்டாராக (ஐயா) வலம் வருகிறார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் நடிப்பில் இருந்து விலகும் ஐயா, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று பட அதிபர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் ஐயா, குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறாக வித்தியாசமான தோற்றத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீதக்காதி, விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திலும் உருக வைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi

    சீதக்காதி படத்தின் டிரைலர்:

    பாலாஜி தரணிதரண் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீதக்காதி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #Seethakaathi #VijaySethupathi
    96 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.

    இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி இருக்கிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi

    பாலாஜி தரணிதரண் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சீதக்காதி’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Seethakaathi #VijaySethupathi
    விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.

    இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் வாங்கியிருக்கிறார். முன்னதாக தணிக்கை குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    தீபாவளி விடுமுறைக்குப் பிறகு நவம்பர் இரண்டாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi

    பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி வரும் ‘சீதக்காதி’ படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Seethakathi #VijaySethupathi
    விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.

    இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தை தீபாவளிக்கு பிறகு நவம்பர் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தி ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi

    பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகும் ‘சீதக்காதி’ படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். #Seethakathi #VijaySethupathi
    விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். 

    கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே இயக்குநர் மகேந்திரன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் ‘சீதக்காதி’ படத்தில் இருந்து `மேக்கிங் ஆஃப் ஐயா' என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

    விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Seethakathi #VijaySethupathi

    கலைக்கு முடிவே இல்லை, கலை சாகா வரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும் படமே சீதக்காதி என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi
    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு பாலாஜி தரணிதரன் - விஜய் சேதுபதி மீண்டும் இணைந்திருக்கும் படம் சீதக்காதி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மேக்கிங் ஆஃப் ஐயா என்ற வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், படம் பற்றி நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது,

    " சீதக்காதி சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற பெரிய நடிகர்களுக்கு பொருத்தமான ஒரு படம். ஆரம்பத்தில், பாலாஜி தரணிதரன் இந்த படத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை அதில் நடிக்க வைக்க விரும்பினார். இந்த படத்திற்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து உள்ளேன் என்று நம்புகிறேன். 

    இந்த படத்தில் நான் ஒரு 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். சீதக்காதி ஒரு ஆத்மார்த்தமான படம், அது கலைக்கு முடிவே இல்லை, சாகா வரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும். அது யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். என் 25-வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன் " என்றார்.

    ரம்யா நம்பீசன் மற்றும் காயத்ரி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் (Passion Studios) சார்பில் உமேஷ் ஜி.ரெட்டி தயாரித்திருக்கிறார். #Seethakathi #VijaySethupathi

    சீதக்காதி - ஐயா மேக்கிங் வீடியோ:

    ×