'இனிமேல்' ஆல்பம் - லோகேஷை கலாய்த்த 'விக்ரம்' நடிகை

டீசரில் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதி ஹாசனும் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றதுஇதை கருத்தில் கொண்டு காயத்திரி எக்ஸ் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார்.
'இனிமேல்' ஆல்பம் - லோகேஷை கலாய்த்த 'விக்ரம்' நடிகை
Published on

ஆக்ஷன் திரைப்படங்களை தனக்கு என ஒரு ஸ்டைலில் எடுப்பதில் திறமை கொண்டவர் லோகேஷ் கனகராஜ். இவர் எடுக்கும் படங்களில் நிறைய ஆக்ஷன் காட்சிகளே நிறைந்திருக்கும். இவர் படங்களில் காதல் காட்சிகளுக்கு பஞ்சமே. இவர் படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் பாவம், ஏதோ ஒரு வகையில் இறந்து விடுவார்கள்.

சமீபத்தில் கமல்ஹாசன் தயாரித்து ஸ்ருதிஹாசன் இசையில் ஒரு இண்டிபெண்டண்ட் ஆல்பம் பாடலை உருவாக்கி இருக்கின்றனர். அதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க,பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இப்பாடலுக்கு 'இனிமேல்' என தலைப்பு வைத்துள்ளனர்.

இப்பாடலின் டீசர் நேற்று மாலை வெளியானது. டீசரில் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதி ஹாசனும் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றது. இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படப்புகழ் நடிகை காயத்திரி 'இனிமேல்' டீசரில் கமண்ட்டை பதிவு செய்து இருக்கிறார்.

கமல் நடிப்பில் வெளிவந்த 'விக்ரம்' படத்தில் காயத்திரி ஃபஹத் ஃபாஸிலை காதலிப்பார், ஆனால் கடைசியில் அவரின் தலையை வெட்டி கொன்று விடுவார்கள். இதை கருத்தில் கொண்டு காயத்திரி எக்ஸ் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார்.

அதில் " உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு ..... வாட் இஸ் திஸ் மா லோகேஷ்?" என்ற கமெண்டை அவரின் எக்ஸ் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவு செய்து இருக்கிறார். இந்த கமெண்ட் எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com